Adani Vs Share Price: ஹிண்டர்பெர்க் அறிக்கை வெளியான பின்பு கிட்டத்தட்ட பாதியாக குறைந்து பங்குச்சந்தை முதலீட்டாளர்களை அதிர்சியில் உறைய வைத்துள்ளது அதானி குழுமத்தின் பங்குகளின் விலை. ஆனால், ஹிண்டர்பெர்க் அறிக்கையில், தங்கள் நிறுவனத்தின் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்த அதானி குழுமத்தின் சமாதானங்கள் முதலீட்டாளர்களின் அச்சத்தை இது போக்கவில்லை.
அதானி குழுமத்தின் மதிப்பு நாளுக்கு நாள் வீழ்ச்சியை சந்தித்து வரும் நிலையில், இதன் எதிரொலி அந்த நிறுவனத்தின் வளர்ச்சியையில் நீண்டகால முட்டுக்கட்டையாக மாறிவிட்டது, இது ஒரு கட்டத்தில், நிறுவனத்தின் சொத்துக்களை விற்கும் நிலைக்கும் இட்டுசெல்லலாம்.
ஹிண்டர்பெர்க் அறிக்கை வெளியான நாளில் இருந்தே அதானி குழுமத்தின் பங்குகளின் மதிப்பு அதல பாதாளத்தில் வீழ்ந்துவருவதால், தொடர் பங்கு வெளியீடு எனப்படும் FPO இருபதாயிரம் கோடி ரூபாயை திரட்ட திட்டமிட்டிருந்த அதானி நிறுவனக் குழுமம், அதனை கைவிட்டது.
மேலும் படிக்க | அதானிக்கு அள்ளிக்கொடுத்த SBI-ன் கடந்த 3 மாத லாபம் என்ன தெரியுமா? பல கோடியாம்..!
சரி, ஒரு பங்கின் விலை அதிகமாக உள்ளதா அல்லது வேண்டுமென்றே அதிகமாக்கப்பட்டதா என்பதைக் கண்டுபிடிப்பது மிகவும் எளிது. அதில் ஒரு வழிதான் Price / Earning ratio எனப்படும் விகிதம். ஒரு பங்கின் சந்தை விலைக்கும் வருடாந்திர வருமானத்திற்கும் உள்ள விகிதம் இதற்கு உதவும். இதனை எளிமையாக புரிந்துக் கொள்ள வங்கி வைப்புத் தொகையை உதராணமாக பார்க்கலாம்.
வங்கி வைப்புத்தொகை 100 ரூபாய்
100 ரூபாய் முதலீட்டிற்கு 10 % வருடாந்திர வட்டி
10 ரூபாய் சம்பாதிக்க 100 ரூபாய் முதலீடு.
1 ரூபாய் சம்பாதிக்க எவ்வளவு முதலீடு தேவைப்படுகிறது?
100 / 10 = சுமார் 10 ரூபாய்.
மேலும் படிக்க | அதானி மொத்தம் இழந்தது எத்தனை லட்சம் கோடி தெரியுமா? சாம்ராஜ்ஜியம் எழுவது சாத்தியமா?
இந்த 10 ரூபாய் என்பதுதான், ஒரு ரூபாய் சம்பாதிப்பதற்கான முதலீடு. அதாவது நமக்கு ஒரு ரூபாய் சம்பாதிக்க எத்தனை ரூபாய் தேவைப்படுகிறதோ அதுதான் P/E Ratio என்பதாகும். ஆகவே, வங்கி வைப்புத் தொகையின் P/E விகிதம் 10 என்று கொள்ளலாம்.
பொதுவாக ஒரு பங்கின் P/E விகிதம் 13க்கு மேல்தான் இருக்கும். பங்குச்சந்தையில் முதலீடு செய்பவர்களின் இயல்பான நோக்கமே, வங்கி டெபாசிட்டை விட கூடுதல் வருமானம் தேவை என்பதுதான்.
அதானி குழுமத்தின் பங்கின் விலை அதிகமாக உள்ளதா? அல்லது வேண்டுமென்றே அதிகமாக்கப்பட்டதா? என்பதை நீங்களே சுலபமாக கணக்கிட்டுக் கொள்ளலாம்.
மேலும் படிக்க | இந்திய பட்ஜெட் 2023 வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு சாதகமா? இல்லை பாதகமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ