வங்கி கணக்கு தொடங்குவதற்கு ஆதார் அடையாள இனி கட்டாயம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
வங்கி கணக்கு வைத்திருப்போரும் ஆதார் எண்ணை டிசம்பர் மாதத்துக்குள் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் சுமார் 90% பேருக்கு ஆதார் அடையாள எண் அளிக்கப்பட்டு விட்டதாக மத்திய அரசு தரப்பில் கூறப்படுகிறது.
இதையடுத்து, அரசு திட்டங்களில் முறைகேடுகளை களைய அவற்றுக்கு ஆதார் எண்ணை கட்டாயமாக்கி வருகிறது மத்திய அரசு. காஸ் இணைப்பு, மதிய உணவு, பயிர் காப்பீட்டு திட்டம், விமான பயணம், திருப்பதி தரிசனம் உள்ளிட்டவைகளுக்கு ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் வங்கி கணக்கு தொடங்குவதற்கு ஆதார் இனி கட்டாயம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. வங்கி கணக்கு வைத்திருப்போரும் ஆதார் எண்ணை டிசம்பர் மாதத்துக்குள் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் மத்திய அரசு அறிவித்துள்ளது.
வங்கி கணக்கு தொடங்க ஆதார் எண் கட்டாயம் என்றும், ஆதார் எண் இணைக்கப்படாத வங்கி கணக்குகள் முடக்கப்படும் என்றும், வங்கிகளில் ரூ.50 ஆயிரம் மற்றும் அதற்கு மேற்பட்ட பண பரிமாற்றத்துக்கும் அந்த எண் கட்டாயம் என்றும் மத்திய அரசு அறிவித்து உள்ளது.