81 லட்சம் ஆதார் முடக்கப்பட்டது!

Last Updated : Aug 16, 2017, 03:18 PM IST
81 லட்சம் ஆதார் முடக்கப்பட்டது! title=

இந்தியாவில் அனைத்து சேவைகளும் ஆதார் துணையை நாடிவரும் நிலையில் தற்போது 81 லட்சம் ஆதார் எண்கள் முடக்கப் பட்டுள்ளதாக தெரியவருகிறது.

ஆதார் சட்டப்பிரிவு 27 மற்றும் 28-ன் படி பல்வேறு விதிமீறல்கள் தொடர்பாக இதுவரை 81லட்சம் ஆதார் எண்கள் முடக்கப் பட்டுள்ளன.

உங்கள் ஆதார் இயக்கத்தில் உள்ளதா?

UIDAI இணையத்தளத்தில் உங்களது ஆதார் எண்ணின் நிலைமை பற்றி அறிந்துகொள்ளலாம்.

https://resident.uidai.gov.in/aadhaarverification இணைப்பை பின்தொடரவும்.

இந்த பக்கத்தில் தங்களது 12 இலக்க ஆதார் என்னை உள்ளிடவும்

பின் தேவையான தகவல்களை உள்ளிடவும் 

உங்களுடைய ஆதார் இயக்கத்தில் இருந்தால் ஒரு செய்தி உங்களுக்கு காட்டப்படும் அதில் தங்களது வயது, மாநிலம், மொபைல் எண்ணின் கடைசி 3 எண் காண்பிக்கப்படும்.

 

ஆதார் எண் இயக்கத்தில் இல்லை எனில், தகவல் இல்லை என செய்தி காண்பிக்கப்படும்.

Trending News