Omicron: 7 மாநிலங்களில் இரட்டை இலக்கத்தை எட்டிய ஒமிக்ரான்

மகாராஷ்டிரா, டெல்லி, கேரளா உள்ளிட்ட 7 மாநிலங்களில் ஓமிக்ரான் பாதிப்பு இரட்டை இலக்கத்தை எட்டியுள்ளது.

Written by - S.Karthikeyan | Last Updated : Dec 20, 2021, 06:01 PM IST
Omicron: 7 மாநிலங்களில் இரட்டை இலக்கத்தை எட்டிய ஒமிக்ரான் title=

உலகை அச்சுறுத்தி வரும் ஒமிக்ரான், இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. மகாராஷ்டிராவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 54 ஆக உயர்ந்துள்ளது. மேலும், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் உள்ளிட்டோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கும் ஒமிக்ரான் பரிசோதனை செய்யப்பட்டு முடிவுகளுக்கு அனுப்பட்டிருக்கிறது. தலைநகர் டெல்லியில் கொரோனா வைரஸால் பாதிக்கப்படோரின் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளது. அதில் 12 பேர் குணமடைந்துவிட்டதாகவும், எஞ்சியவர்கள் சிகிச்சையில் இருப்பதாகவும் டெல்லி அரசு தெரிவித்துள்ளது.

ALSO READ | Omicron symptoms: எச்சரிக்கை! இதுதான் Omicron இன் புதிய அறிகுறிகள்

ராஜஸ்தானில் ஒமிக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தின் அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடாக மற்றும் தெலங்கானா மாநிலங்களில் ஒமிக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை இரட்டை இலக்கத்தை எட்டியுள்ளது. கேராளவில் 4 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் அந்த எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. கர்நாடகாவில் 19 பேரும், தெலங்கானாவில் 20 பேரும் பாதிக்கபட்டிருப்பதாக அம்மாநில அரசுகள் தெரிவித்துள்ளன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒமிக்ரான் வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் அடையாளம் காணும் பணியை அனைத்து மாநில அரசுகளும் முடுக்கிவிட்டுள்ளன. 

வைரஸ் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிவது இப்போதைக்கு சவாலாக இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அதேநேரத்தில் மக்கள் மிகுந்த முன்னெச்சரிக்கையாக இருப்பதுடன், ஏற்கனவே கொடுக்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில், மாநிலங்களவையில் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்ட்வியா, இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக 161 பேர் ஒமிக்ரான் வைரஸூக்கு பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், ஒமிக்ரான் வைரஸூக்கு சிகிச்சை அளிக்கத் தேவையான மருந்து மாத்திரைகளை இருப்பு வைக்க உத்தரவிடப்பட்டிருப்பதாகவும் மாநிலங்களவையில் விளக்கம் அளித்தார்.

ALSO READ | டெல்டாவை விட வேகமாக பரவும் ஒமிக்ரான்: WHO எச்சரிக்கை

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News