J&K: துப்பாக்கி சண்டையில் 5 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!

ஜம்மு காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்ட வனப்பகுதியில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிசூடு என்கவுண்டரில் தீவிரவாதிகள்  சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். 

Written by - Vijaya Lakshmi | Last Updated : Aug 4, 2018, 08:51 AM IST
J&K: துப்பாக்கி சண்டையில் 5 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை! title=

ஜம்மு காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்ட வனப்பகுதியில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிசூடு என்கவுண்டரில் தீவிரவாதிகள்  சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். 

ஜம்மு காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்ட வனப்பகுதியில் தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் அங்கு பாதுகாப்புபடையினர் சுற்றி வளைத்தனர். இதையடுத்து பாதுகாப்புபடையினருக்கும்,  தீவிரவாதிகளுக்கும் இடையே பயங்கர துப்பாக்கிச்சண்டை நடந்தது.

இந்த சண்டையில் 5  தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. அப்பகுதியில் மேலும் தீவிரவாதிகள் பதுங்கி இருக்கலாம் என சந்தேகத்தின் பேரில் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.

Trending News