மத்திய பிரதேஷ்: மும்பை-ஹவுரா வழித்தடத்தில் பிரயாணிக்கும் சரக்கு வண்டியின் 24 பெட்டிகள் தடண்புரன்டு விபத்துக்குள்ளானது!
சத்னா-ரவா பாதையில் சரக்குகளை ஏற்றிச்சென்ற சரக்கு வண்டி திடிரென விபத்துக்குள்ளானது. தகவலறிந்து சம்பவயிடத்திற்கு விரைத்த அதிகாரிகள் சீறமைப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சீறமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால், சம்மந்தப்பட்ட பாதையில் பயணிக்கும் தொடர் வண்டிகள் மாற்றுப் பாதை வழியாக மாற்றியமைக்கப்பட்டு வருகிறது.
#SpotVisuals 24 bogies of a goods train derailed in Satna, Railway has started reconstruction of the track #MadhyaPradesh pic.twitter.com/7xzKkKJyyx
— ANI (@ANI) February 9, 2018
இந்த விபத்தினை குறித்து அதிகாரிகள் தெரிவிக்கையில், தண்டவாளங்களில் ஏற்பட்டிருந்த பாதிப்பினால் இந்த விபத்து நிகழ்ந்திருக்க வாய்புள்ளது என தெரிவித்துள்ளனர்.
அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் எந்த வித உயிர் சேதமும் நிகழவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.