லேடீஸ் டாய்லெட்டில் புர்காவுடன் புகுந்த ஆண்... 23 வயதான ஐடி ஊழியரின் வினோத செயல்!

Bizarre Crime News: பெண்கள் கழிப்பறையில் புர்கா அணிந்து பெண் வேடமிட்டு சென்ற ஆண் ஒருவர் செல்போன் கேமரா மூலம் வீடியோ எடுத்ததை அடுத்துத அவர் கைது செய்யப்பட்டார். 

Written by - Sudharsan G | Last Updated : Aug 18, 2023, 05:24 PM IST
  • இச்சம்பவம் கடந்த புதன்கிழமை கொச்சியில் நடந்துள்ளது.
  • அவருக்கு 14 நாள்கள் நீதிமன்ற காவல் வழங்கப்பட்டுள்ளது.
  • அவர் 23 வயதான ஐடி ஊழியர் ஆவார்.
லேடீஸ் டாய்லெட்டில் புர்காவுடன் புகுந்த ஆண்... 23 வயதான ஐடி ஊழியரின் வினோத செயல்! title=

Bizarre Crime News: கேரளா மாநிலம் கொச்சி நகரில் உள்ள பிரபல மால் ஒன்றில் பர்தா அணிந்து பெண்கள் கழிப்பறைக்குள் நுழைந்து செல்போனில் வீடியோ பதிவு செய்த 23 வயதான ஐடி ஊழியர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

பிடெக் பட்டதாரியான இவர் மீது இந்திய தண்டனை சட்டத்தின் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட நபர், தகவல் தொழில்நுட்ப வல்லுநரான அபிமன்யு என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

அதன்பிறகு, அவர் உள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். மேலும், குற்றம் சாட்டப்பட்டவரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது என்று களமசேரி காவல் நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இன்போபார்க்கில் உள்ள முன்னணி ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் குற்றம் சாட்டப்பட்டவர், 'புர்கா' அணிந்து பெண்கள் கழிப்பறைக்குள் நுழைந்து தனது மொபைலை அங்கு வைத்து வீடியோ எடுத்த சம்பவம் கேரளாவின் கொச்சியின் லுலு மாலில் கடந்த புதன்கிழமை (ஆக. 16) நடந்ததாக போலீசார் தெரிவித்தனர். 

 
மேலும் படிக்க | 3D பிரிண்ட் தொழில்நுட்பத்தில் தபால் நிலையம்... ரோபாக்கள் கட்டிய முதல் அஞ்சலகம்!

அவர் தனது தொலைபேசியை ஒரு சிறிய அட்டைப் பெட்டியில் வைத்து, அதில் வீடியோவை பதிவுசெய்ய கேமரா தெரியும் அளவிற்கு ஒரு துளை போட்டு, அதை கழிவறையின் வாசலில் மாட்டியதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது . அதன்பின், சந்தேகமளிக்கும் வகையில் அந்த நபர் அங்கிருந்து வெளியே வந்து, கழிவறையின் பிரதான கதவு முன் நின்றுள்ளார்.

அவரது சந்தேகத்திற்கிடமான மற்றும் மறைமுகமான நடத்தையைக் குறிப்பிட்டு, மாலின் பாதுகாப்புப் பணியாளர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர், அவர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்று குற்றம் சாட்டப்பட்டவரை விசாரித்ததாக அதிகாரி கூறினார். விசாரணையில் அவர் பெண் வேடமிட்டு வந்ததும், கழிவறையில் இருந்த காட்சிகளை மொபைல் போனில் பதிவு செய்து வந்ததும் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

இதையடுத்து, குற்றவாளியின் பர்தா மற்றும் மொபைல் போன் பறிமுதல் செய்யப்பட்டு, அவர் கைது செய்யப்பட்டார். குற்றம் சாட்டப்பட்டவர் இதுபோன்ற செயல்களை வேறு எங்கும் செய்திருக்கிறாரா என்று போலீசார் விசாரித்து வருவதாக அந்த அதிகாரி கூறினார். 

கொச்சி லுலு மாலில், பொதுமக்கள் கைது செய்யப்பட்ட அபிமன்யுவிடம் கேள்வி எழுப்பும் வீடியோ தற்போது இணையத்தில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது. பல ட்விட்டர் (தற்போது X என பெயர் மாற்றப்பட்டது) பயனர்கள் அபிமன்யு கைது செய்யப்பட்ட பிறகு அவரது வீடியோவைப் பகிர்ந்துள்ளனர். சிலரால் சூழப்பட்ட வீடியோவில் அவர் புர்காவில் இருப்பதை வீடியோவில் காணலாம். இந்த குழப்பமான சம்பவம் பொது இடங்களில் தனியுரிமை மற்றும் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை மக்களுக்கு அடிக்கோடிட்டுக் காட்டுகிறது, முறையற்ற நடத்தைக்கு எதிராக விழிப்புடன் இருக்க வேண்டியதன் அவசியத்தையும் தனியுரிமைக்கான தனிநபர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதையும் நினைவூட்டுகிறது.

மேலும் படிக்க | சந்திரயான்-3: தொடங்கியது இறுதி ஓவர்... வரலாறு படைக்க போகும் லேண்டர்..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News