மத்தியில் ஆட்சி அமைக்க அடுத்தடுத்து காய் நகர்த்தும் India Alliance.. கலக்கத்தில் BJP

Nitish Kumar - Chandrababu Naidu: சந்திரபாபு நாயுடுவு  நிதீஷ் குமாரிடம் இந்திய கூட்டணி ஆட்சி அமைவதற்கான ஆதரவு தரம்படி பேச்சுவார்த்தையை தொடங்கி இருப்பதாகவே தகவல்கள் வெளியாகி உள்ளது.

Written by - Shiva Murugesan | Last Updated : Jun 4, 2024, 03:07 PM IST
  • இந்திய அரசியலில் மாநில கட்சிகள் புதிய கிங்மேக்கர்களுக்கான நேரம் இது.
  • 543 உறுப்பினர்களைக் கொண்ட மக்களவை தொகுதியில் ஆட்சி அமைக்க 272 இடங்கள் தேவை.
  • சந்திரபாபு நாயுடுவு மற்றும் நிதீஷ் குமாரை தொடர்புக்கொண்ட இந்திய கூட்டணி கட்சியினர்.
மத்தியில் ஆட்சி அமைக்க அடுத்தடுத்து காய் நகர்த்தும் India Alliance.. கலக்கத்தில் BJP title=

Lok Sabha Election 2024, BJP vs Congress: மத்தியில் யார் ஆட்சி அமைக்கப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், சந்திரபாபு நாயுடுவின் நிதீஷ் குமாரையும் காங்கிரஸ் தேசியத் தலைவர் கார்கே மற்றும் மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தொடர்பு கொண்டு பேசியதாக தகவல் வெளியாகி வரும் நிலையில், தற்போது தேசியவாத காங்கிரஸின் தலைவர் சரத் பவர் பீகார் முதல்வர் நிதீஷ் குமாரையும், தெலுங்கு தேச கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடுவையும்  தொடர்பு கொண்டு பேசியதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

2024 மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றனர். தற்போது வரை இந்திய தேர்தல் ஆணையம் அளித்த தரவுகளின் படி, எந்தவொரு கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், NDA கூட்டணியில் இடம் பெற்றுள்ள பிராந்தியக் கட்சிகள் இந்திய அரசியலில் புதிய கிங்மேக்கர்களுக்கான நேரம் இது.

மத்தியில் ஆட்சி அமைக்க 272 இடங்கள் தேவை

அறுதிப் பெரும்பான்மையுடன் இரண்டு முறை ஆட்சியை அனுபவித்த ஆளும் பாஜகவுக்கும், பிரதமர் நரேந்திர மோடிக்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. சுமார் 250 இடங்களில் பாஜக முன்னிலை பெற்றுள்ள நிலையில், 543 உறுப்பினர்களைக் கொண்ட மக்களவை தொகுதியில் ஆட்சி அமைக்க 272 இடங்களின் பெரும்பான்மை வேண்டும் என்ற நிலையில், பாஜகவுக்கு சுமார் 25 இடங்கள் குறைய வாய்ப்புள்ளது.

மேலும் படிக்க - சைலண்ட்டாக காய் நகர்த்தும் காங்கிரஸ்... பலமடையும் இந்தியா கூட்டணி - பாஜகவுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி!

ஜே.டி.யு மற்றும் டி.டி.எஸ் கட்சிகள் முன்னிலை

இந்த அரசியல் சூழ்நிலையில், பிகாரில் நிதிஷ் குமார் தலைமையிலான ஜே.டி.யு மற்றும் ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான டி.டி.எஸ். இருவரும் தங்கள் மாநிலங்களில் முறையே 14 மற்றும் 15 மக்களவைத் தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளனர். இந்த 29 இடங்கள் மூலம் நிதிஷ்குமாரும், சந்திரபாபு நாயுடுவும் சேர்ந்து, பாஜகவுக்கு பெரும்பான்மைக்கு தேவையான எண்ணிக்கையை வழங்க முடியும். இதன் காரணமாக அனைவரின் கவனமும் இவர்களின் மீது இருக்கிறது.

சந்திரபாபு நாயுடுவு - நிதீஷ் குமாரை தொடர்புக்கொண்ட இந்திய கூட்டணி

இந்நிலையில், சந்திரபாபு நாயுடுவு மற்றும் நிதீஷ் குமாரையும் காங்கிரஸ் தேசியத் தலைவர் கார்கே மற்றும் மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தொடர்பு கொண்டு பேசியதாக தகவல் வெளியாகியது. தற்போது தேசியவாத காங்கிரஸின் தலைவர் சரத் பவர் பீகார் முதல்வர் நிதீஷ் குமாரையும், தெலுங்கு தேச கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடுவையும்  தொடர்பு கொண்டு பேசியதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. 

இந்திய கூட்டணிக்கு ஆதரவு அளிப்பாரா? சந்திரபாபு நாயுடுவு - நிதீஷ் குமார்

சந்திரபாபு நாயுடுவு மற்றுன் நிதீஷ் குமாரிடம் இந்திய கூட்டணி ஆட்சி அமைவதற்கான ஆதரவு தரம்படி பேச்சுவார்த்தையை தொடங்கி இருப்பதாகவே இத்தகவல்கள் வெளிக்காட்டுகிறது.

சந்திரபாபு நாயுடுவை தொடர்பு கொண்ட பிரதமர் மோடி - அமித்ஷா

இந்த தகவல் வெளியாகியிருந்த நிலையில் தான், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பிரதமர் மோடி தங்களது கூட்டணியில் உள்ள சந்திரபாபு நாயுடுவை தொடர்பு கொண்டு பேசியதாக அதிகாரப்பூர் தகவல் வெளியிடப்பட்டிருக்கிறது.

மேலும் படிக்க - பெரும்பான்மைக்கு அருகில் பாஜக... கிங் மேக்கராக உருவெடுப்பாரா நிதீஷ் குமார்..!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News