மத்திய பிரதேசத்தில் எக்ஸ்பிரஸ் ரயில் மீது சரக்கு லாரி மோதியதில் ரயில் தடம்புரண்டது. இதில் ரயிலின் 2 பெட்டிகள் தடம்புரண்டது.
Madhya Pradesh: Truck rammed into a manned level crossing b/w Godhra & Ratlam & hit Trivandrum Rajdhani train.2 coaches derailed. Truck also damaged, driver critically injured. No injuries reported to any passenger. The crossing was closed for road traffic at the time of incident pic.twitter.com/rOcU6GM90C
— ANI (@ANI) October 18, 2018
#UPDATE: The truck driver died after he rammed into a manned level crossing between Godhra & Ratlam and hit Trivandrum Rajdhani train at 6:44 am today. Two coaches were derailed. No injuries reported to any passenger. #MadhyaPradesh pic.twitter.com/mWWcgnW3Gy
— ANI (@ANI) October 18, 2018
மத்திய பிரதேசத்தில் கோத்ரா-ரத்லம் இடையே உள்ள லெவல் கிராசிங் வழியாக இன்று காலை திருவனந்தபுரம் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில் சென்று கொண்டிருந்தது. லெவல் கிராசிங்கின் கேட் மூடப்பட்டு, பிற வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டிருந்த நிலையில் அந்த வழியாக வந்த ஒரு சரக்கு லாரி கட்டுப்பாட்டை இழந்து லெவல் கிராசிங் கேட்டை உடைத்து ரயில் மீது மோதியது.
இந்த விபத்தில் ரயிலின் இரண்டு பெட்டிகள் தடம்புரண்டன. லாரியின் முன்பகுதியும் நொறுங்கியது. லாரி டிரைவர் உடல் நசுங்கி உயிரிழந்தார். தடம்புரண்டதால் பாதிக்கப்பட்ட பயணிகள் வேறு பெட்டிகளுக்கு மாற்றப்பட்டனர். பின்னர் ரயில் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றது.