வாடிக்கையாளருக்கு குட் நியூஸ்.. 75 நகரங்களில் 5ஜி மொபைல் சேவை தொடங்கும் வோடபோன் ஐடியா

Vodafone Idea Launch 5G Service: வோடபோன் ஐடியா நிறுவனம் 5ஜி சேவைகளை நாடு முழுவதும் உள்ள முதல் 75 நகரங்களில் அறிமுகப்படுத்த உள்ளது எனத் தகவல்.

Vodafone Idea 5G Latest News: வோடபோன் ஐடியா தனது 5ஜி மொபைல் பிராட்பேண்ட் சேவைகளை மார்ச் மாதம் தொடங்க திட்டமிட்டுள்ளதாக தி எகனாமிக் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

1 /7

வோடபோன் ஐடியா தொலைத்தொடர்பு நிறுவனம் நீண்ட காலமாக கடினமான இடத்தில் சிக்கியுள்ளது. ஒரு பக்கம் பார்தி ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ போன்ற பெரிய தொழில் நிறுவனங்களின் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. மறுபுறம் அதிக கடன் சுமையால் போராடி வரும் நிலையில், வோடபோன் ஐடியா தனது பயனர் எண்ணிக்கையை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

2 /7

நாடு முழுவதும் 5ஜி சந்தையில் ஆதிக்கம் செலுத்தி வரும் ரிலையன்ஸ் ஜியோ மற்றும் பார்தி ஏர்டெல் ஆகிய நிறுவனங்களின் வரிசையில் 5ஜி மொபைல் பிராட்பேண்ட் சந்தையில் நுழையத் தயாராகி வருகிறது வோடபோன் ஐடியா (Vi) நிறுவனம். ஏற்கனவே இந்தியாவில் 5ஜி நெட்வொர்க்கை அறிமுகப்படுத்த உள்ளதாக வோடபோன் ஐடியா நிறுவனம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

3 /7

தங்கள் வாடிக்கையாளர்களை மீட்டெடுக்கவும், புதிய வாடிக்கையாளர்களை கவரவும் "மலிவான விலை திட்டங்களுடன்" மார்ச் 2025 முதல் அதிக டேட்டா பயன்படுத்தப்படும் நகர்ப்புற மற்றும் தொழில்துறை மண்டலங்களை குறிவைத்து, 75 முக்கிய நகரங்களில் 5ஜி சேவையை தொடங்க வோடபோன் ஐடியா (Vi) நிறுவனம் திட்டமிட்டு உள்ளது.

4 /7

ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனத்தின் கட்டணத்தை விட 15 சதவீதம் குறைவான விலையில் வோடபோன் 5ஜி சேவை திட்டத்தை வோடபோன் ஐடியா (Vi) நிறுவனம் அளிக்க உள்ளதாக எதிர் பார்க்கப்படுகிறது. 

5 /7

ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்களின் 5ஜி விலையை விட மலிவு விலையில் வோடபோன் 5ஜி சேவை கொண்டு வந்தால், வாடிக்கையாளர்கள் வோடபோன் ஐடியா (Vi) நிறுவனத்தை தேர்வு செய்யலாம். இதன்மூலம் நாட்டில் 5ஜி சேவை வழங்குவதில் தனியார் தொடை தொடர்பு நிறுவனங்கள் இடையே போட்டியை ஏற்படுத்தலாம். 

6 /7

5ஜி சேவை குறித்து வோடபோன் ஐடியா கூறுகையில், "நாங்கள் 5G சேவைகளைத் தொடங்கத் தயாராகி வருகிறோம். மேலும் சிறந்த சேவையையும், விலையையும் வழங்க உறுதிபூண்டுள்ளோம்" என்று ஒரு Vi செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார். 

7 /7

வோடபோன் ஐடியா (Vi) நிறுவனம் சமீபத்தில் நோக்கியா, எரிக்சன் மற்றும் சாம்சங் நிறுவனங்களுடன் 4G மற்றும் 5G நெட்வொர்க் மேம்படுத்தல்களுக்காக ரூ.30,000 கோடி மதிப்பிலான ஒப்பந்தங்களை முடித்துள்ளது.