வாரந்தோறும் எவிக்ஷன் பரபரப்பாக நடந்துகொண்டிருக்கிறது. கடந்த வாரம் பிபி வீட்டிலிருந்து ஜெப்ரி மற்றும் அன்ஷிதா இருவரும் கனத்த மனதுடன் வெளியேறினர். விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சியில் இறுதிக்கட்டத்தை நோக்கி போட்டியாளர்கள் ஆர்வத்துடன் செல்கின்றனர்.
விறுவிறுப்பான போட்டிகளுடன் ஆட்டம் நாளுக்கு நாள் சூடுபிடித்துக் கொண்டே செல்கிறது. அந்தவகையில் நீண்ட நாள் பிக்பாஸ் வீட்டிலிருந்து மக்களுக்கு நல்ல பொழுதுபோக்குகளைத் தினமும் வழங்கிவரும் போட்டியாளர்களில் சில குறிப்பிட்ட போட்டியாளர்கள் வீட்டிலிருந்து வெளியேறப்போவதாக ஓட்டிங் விவரம் காண்பிக்கிறது.
பிக்பாஸ் 8 இறுதிக்கட்டம் நெருங்கிவரும் நிலையில் வீட்டிலிருக்கும் போட்டியாளர்கள் மனதில் வெற்றியின் இலக்கு நாளுக்கு நாள் மனதில் அதிகரித்துவருவதைக் காணலாம்.
கோடிக்கணக்கான ரசிகர்கள் கண்டு ரசிக்கும் இந்நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் வட்டாரம் பலமடங்கு அதிகரித்து வருகிறது.
பிக்பாஸ் வீட்டில் யார் வெற்றி வாகையை கைப்பற்றப்போகின்றனர் என்று ரசிகர்கள் எதிர்பார்ப்பு அதிகரித்து வருவதை சமூக வலைத்தளத்தில் காணலாம்.
எலிமினேஷனில் அதிகமாக நாமினேட் செய்யப்பட்ட போட்டியாளர்களில் யார் அதிகம் வாக்குகள் பெற்று வெளியேறவுள்ளனர் தெரியுமா.
ராயன் மற்றும் தீபக் இருவரும் அதிக வாக்குகள் சேகரித்து முன்னிலையில் இடம் பிடித்துள்ளனர்.
மஞ்சரி மற்றும் பவித்ரா இருவரும் மிகக்குறைவான வாக்குகள் பெற்று கடைசி இடத்தில் பின்னிலையில் உள்ளனர்.
பவித்ரா மற்றும் மஞ்சரி இந்த இரண்டு பேரில் மஞ்சரி மிகவும் குறைவான வாக்குகள் பெற்று வெளியேறும் வாய்ப்பு அதிகம் பெற்றுள்ளார்.
பிக்பாஸ் வீட்டில் பலரும் விளையாட்டில் தீவிரச்சுறுசுறுப்பாக இருந்து வருகின்றனர். அந்தவகையில் மக்கள் மனதில் பவித்ரா மற்றும் மஞ்சரி இரண்டு பேரும் பெரிதாக இடம் பிடிக்கவில்லை எனத் தெரிகிறது.