மும்பை: வடகிழக்கு மும்பையில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 2.5 அலகாக பதிவாகியிருந்ததாக நில அதிர்வுக்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் புதன்கிழமை காலை 11:51 மணியளவில் ஏற்பட்டது.
நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேதம் தொடர்பான தகவல் எதுவும் வெளியாகவில்லை.
முன்னதாக கடந்த திங்கட்கிழமை ‘குஜராத் மாநிலம் ராஜ்காட்டுக்கு 87 கிமீ வடமேற்கு திசையில் நண்பகல் 12.17 மணியளவில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இந்த் நில அதிர்வானது ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆக பதிவானது. ஞாயிறு இரவு இதே பகுதியில் ரிக்டர் அளவுகோலில் 5.8 ஆக பதிவான நில அதிர்வு ஏற்பட்டது. இது இரண்டாவது அதிர்வு என்பது குறிப்பிடத்தக்கது.
READ | டெல்லியை மீண்டும் தாக்கிய “பூகம்பம்”... ஒரு மாதத்தில் ஆறாவது முறையாகும்
தேசிய தலைநகரம் மற்றும் அதை ஒட்டிய பகுதிகள் கடந்த இரண்டு மாதங்களில் 12 பூகம்பங்கள் மற்றும் லேசான அதிர்வலைகளை பதிவு செய்துள்ளன.
இதற்கிடையில் ஏப்ரல் 12, 13 ஆகிய தேதிகளில் தலைநகரின் வெவ்வேறு பகுதிகளை மையமாகக் கொண்டு முறையே 3.5, 2.7 என்ற அளவில் நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. அதைத்தொடர்ந்து மே 10, 15 ஆம் தேதிகளில் முறையே 3.4, 2.2 என்ற அளவில் நிலஅதிர்வுகள் ஏற்பட்டன.
இவ்வாறு தொடர்ந்து அவ்வபோது நிலஅதிர்வுகள் ஏற்பட்டு வருவதால், தலைநகர் டெல்லியில் திடீரென பெரிய அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுவிடுமா என்ற அச்சம் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.