இந்தியாவில், இந்த ஆண்டு ஜனவரி மாதம் தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டு, கோவிஷீல்ட் கோவேக்ஸின், ஸ்பூட்னிக் வி ஆகிய தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. தடுப்பூசி போடும் பணியில், இந்தியா, உலகின் வளர்ந்த நாடுகளை முந்திச் சென்று கொண்டிருக்கிறது. ஒரு நாளை சுமார் 70 லட்சம் முதல் 1 கோடி என்ற அளவில் தொடர்ந்து தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
இந்நிலையில், மற்றொரு முக்கிய மைல்கல்லாக, கடந்த ஆக்ஸ்ட் மாதத்தில், அனைத்து ஜி 7 நாடுகளையும் விட இந்தியா அதிக COVID -19 தடுப்பூசி மருந்துகளை வழங்கியது என்று மத்திய சுகாதார அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் 18 கோடி (180 மில்லியன்) தடுப்பூசி டோஸ்கள் வழங்கப்பட்டதாக அமைச்சகம் தெரிவித்தது. G7 நாடுகளில் அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, இத்தாலி, ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் ஜப்பான் ஆகியவை அடங்கும்.
"இன்னுமொரு சாதனை! ஆகஸ்ட் மாதத்தில் 180 மில்லியனுக்கும் அதிகமான தடுப்பூசி டோஸ்களுடன், இந்தியா உலகளாவிய வரைபடத்தில் தனது மக்களுக்கு முன்னுரிமை அளித்து, தடுப்பூசி போடுவதில் முன்னிலை வகிக்கிறது. #LargestVaccineDrive, ”என்று அரசாங்கத்தின் சமூக ஊடக கணக்கான, MyGovIndia என்ற கணக்கில் ட்வீட் செய்யப்பட்டுள்ளது.
Yet another achievement! With more than 180 million vaccine doses administered in the month of August, India leaves a mark on the Global map of leading its way in vaccinating its population on priority. #LargestVaccineDrive pic.twitter.com/ftvdHVIWMk
— MyGovIndia (@mygovindia) September 5, 2021
ALSO READ | TN Vaccination Camp: 20L தடுப்பூசி இலக்கை அடைய தமிழகத்தில் 10000 தடுப்பூசி முகாம்கள்
இதற்கிடையில், 4.37 கோடிக்கும் அதிகமான (4,37,83,160) கோவிட் தடுப்பூசி டோஸ்கள் இன்னும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிடம் இருப்பில் உள்ளதாக, மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.
இதுவரை 66.89 கோடி (66,89,80,635) தடுப்பூசிகள், மத்திய அரசு இலவச தடுப்பூசி இயக்கம் மூலமாகவும், நேரடி மாநில கொள்முதல் முறை மூலமும், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.நாடு தழுவிய தடுப்பூசி போடும் இயக்கத்தின் ஒரு பகுதியாக, மத்திய அரசு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இலவசமாக கோவிட் தடுப்பூசிகளை வழங்கி வருகிறது.
COVID -19 தடுப்பூசி போடும் இயக்கத்தில், நாட்டில் தடுப்பூசி தாயாரிக்கப்படும் தடுப்பூசிகளில் 75 சதவீதத்தை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு கொள்முதல் செய்து இலவசமாக வழங்குகிறது.
ALSO READ | மக்களே உஷார்! கொரோனைவை தொடர்ந்து பரவுகிறது அடுத்த வைரஸ்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR