தனியார் துறைகளில் பாலியல் தொந்தரவு இருப்பதாக WCD-யிடம் 169 புகார்.....

தனியார் துறைகளில் பெண்கள் பணியிடத்தில் பாலியல் தொந்தரவு இருப்பதாக WCD-க்கு இது வரை சுமார் 169 புகார்கள் வந்துள்ளதாக தகவல்..... 

Last Updated : Jan 14, 2019, 10:41 AM IST
தனியார் துறைகளில் பாலியல் தொந்தரவு இருப்பதாக WCD-யிடம் 169 புகார்..... title=

தனியார் துறைகளில் பெண்கள் பணியிடத்தில் பாலியல் தொந்தரவு இருப்பதாக WCD-க்கு இது வரை சுமார் 169 புகார்கள் வந்துள்ளதாக தகவல்..... 

பணியிடங்களில் பாலியல் ரீதியாகப் பாதிக்கப்பட்டதை வெளியே சொல்லாமல் புழுங்கிக்கொண்டிருந்த பெண்கள், சமூக வலைதளங்களில் #MeToo இயக்கத்தின் மூலம் தற்போது தங்களுக்கு ஏற்பட்ட நிலையைக் கூறிவருகின்றனர். திரையுல பிரபலங்கள் தொடங்கி, பல்வேறு துறையிலும் நடந்த பாலியல் ரீதியான பாதிப்புகளை பெண்கள் வெளியிட்டு வருகின்றனர்.

தற்போது தமிழக திரையுலக பிரபலங்கள் மீதும் #MeToo ஹாஸ்டேக் பயன்படுத்தி பாலியல் வன்கொடுமை புகார்கள் பதியப்பட்டு வரும் நிலையில் பாடகி சின்மயி பாடல் ஆசிரியர் வைரமுத்து மீது பாலியல் புகாரினை பதிவு செய்தார். இதை தொடர்ந்து ஹாலிவுட், பாலிவுட் என அணித்து திரை துறைகளிலும் உள்ள நடிகைகள் தைகளின் புகார்களை தெரிவத்து வந்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இந்நிலையில், தனியார் துறைகளில் வேலை செய்யும் பெண்கள் பணியிடத்தில் பாலியல் தொல்லை கொடுப்பதாக பெண்கள் மற்றும் சிறுவர் மேம்பட்டு அமைச்சகத்துக்கு சுமார் 169 புகார்கள் வந்துள்ளதக WCD அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

கடந்த, 2017 ஆம் ஆண்டில் இருந்து தற்போது வரை தனியார் துறைகளில் வேலை செய்யும் பெண்கள் தங்களில் பணியிடத்தில் பாலியல் தொல்லை இருப்பதாக இதுவரை 169 பாலியல் புகார்களை பெற்றுள்ளதாக பெண்கள் மற்றும் குழந்தை மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

அரசு மற்றும் தனியார் துறைகளில் வேலை செய்யும் பெண்கள் பணியிடங்களில் ஏற்படும் பாலியல் தொல்லை குறித்த புகார்களை தெரிவிப்பதற்காக 'SHe-box' என்ற ஒரு ஆன்லைன் அமைப்பு இயக்கப்பட்டு வருகிறது. அந்த அமைப்பின் மூலம் இதுவரை சுமார் 169 புகார் பெறப்பட்டுள்ளது. 

இதுகுறித்து, மூத்த அமைச்சக அதிகாரி கூறுகையில், 'SHe-box'-ன் மூலம் 2017 ஆம் ஆண்டில் அதிகபட்ச எணிக்கையில் மகாராஷ்டிராவிலிருந்து (33) புகார்கலும், வந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.      

ஒரு மூத்த அமைச்சக அதிகாரி ஒருவர் 169 புகார்கள் 'SHe-box' 2017 முதல் புகார்கள் அதிக எண்ணிக்கையிலான  பெறப்பட்ட வருகின்றன, டெல்யில் 23 புகார்களையும் பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். கடந்த ஆண்டு முதல் மத்திய அமைச்சர்கள் 141 பாலியல் துன்புறுத்தல் புகார்களை' பெற்றுள்ளனர். அவர்களில் 45 பேர் அகற்றப்பட்டுள்ளனர். 

அதில்அதிக எண்ணிக்கையிலான புகார்களை நிதி அமைச்சகம் (21) பெற்றுள்ளது. தகவல் தொடர்பு அமைச்சகம் மற்றும் 16 புகார்களை பாதுகாப்பு அமைச்சகமும் பின்பற்றும் விமர்சனங்களைப் பெற்றது என உள்துறை அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது. 

பணியிடங்களில் பாலியல் துன்புறுத்தல் புகார்களை WCD அமைச்சகம்  அனைத்து மாநில மத்திய அமைச்சகங்கள், துறைகள் மற்றும் 33 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 653 மாவட்டங்களுக்கு இதுகுறித்து தெரிவிக்கும். இந்த 'SHe-box' புகார் குறித்து நடவடிக்கையை உடனடியாக எடுக்கம்படி அனைத்து அதிகாரமும் மத்திய அல்லது மாநில அதிகாரிகளுக்கு கொடுக்கபடுகிறது.  

 

Trending News