சீனாவில் தயாரிக்கப்படும் ஆணுறைகள் அளவில் மிகவும் சிறியதாக உள்ளதாக ஜிம்பாப்வே சுகாதாரத் துறை அமைச்சர் பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார்!
Condom என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் ஆணுறைகள் தான் பால்வினை நோய்களில் இருந்து மக்கள் பலரை காப்பாற்றி வருகிறது. ஆணுறைகள் பயன்பாடுகள் என்பது தற்கால சமயங்களில் மிகவும் முக்கியமான ஒன்றாகவே பார்க்கப்பட்டு வருகிறது.
பால்வினை நோய்களுக்கு காரணமான AIDS/HIV வைரஸ்களில் இருந்து மக்களை காப்பாற்றும் கருவியாக இந்த ஆணுறைகள் பெரும் பொருப்பினை ஏற்று வருகிறது. இதனால் ஆணுறைகள் உற்பத்தியில் பல முன்னணி நாட்டினரும் கவனம் செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் சீனா நாட்டில் இருந்து இரக்குமதி செய்யப்படும் ஆணுறைகள் அளவில் சிறியதாக உள்ளது என ஜிம்பாப்வே சுகாதாரத்துறை அமைச்சர் டேவிட் பரேரியண்டவா குற்றம்சாட்டியுள்ளார்.
பால்வினை நோய்களால் அதிகம் பாதிக்பட்ட நாடுகளில் ஒன்று ஆப்பிரிக்கா. ஆப்பிரிக்காவின் ஜிம்பாப்வேயும அவ்வாறு தான். பெருமளவு மக்கள் பால்வினை நோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனை கட்டுப்படுத்த அங்கு பயன்படுத்தப்படும் ஆணுறைகள் சீன நாட்டில் இருந்தே இரக்குமதி செய்யப்படுகிறது. ஆனால் இந்த ஆணுறைகளை முறையாக பயன்படுத்தப்பட இயலவில்லை எனவும், அளவில் மிகவும் சிறியாக உள்ளது எனவும் அந்நாட்டு மக்கள் தெரிவித்துள்ளனர்.
இதன் அடிப்படையில் அமைச்சர் டேவிட் இந்த குற்றச்சாட்டினை தெரிவித்துள்ளார். மேலும் சீன நாட்டினர் தங்கள் வியாபார சந்தையினை விரிவி செய்ய வேண்டுமெனில், அவர்வகள் தயாரிக்கும் பொருட்கள் மற்ற நாட்டினருக்கும் பயன்படும் வகையில் தயாரிக்க வேண்டும், அவர்கள் நாட்டு மக்களுக்கு மட்டும் ஏற்றவாறு தயாரிக்க கூடாது என அறிவுறுத்தியுள்ளார்!