நீங்கள் அழகாக வேண்டுமா..? கேரட் சாப்பிடுங்க..!!

கேரட்டில் அடங்கியுள்ள எண்ணற்ற மருத்துவ குணங்கள் உங்கல் உடலுக்கு நன்மை அளிக்கிறது.  

Last Updated : Jan 10, 2018, 03:58 PM IST
நீங்கள் அழகாக வேண்டுமா..? கேரட் சாப்பிடுங்க..!! title=

கேரட் பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டது. காலை நேரத்தில் அரை டம்ளர் கேரட் சாறு குடித்துவர வயிற்றில் உள்ள புழுக்கள் வெளியேறும். வயிறு சுத்தமாகும். கேரட்டில் வைட்டமின் ஏ சத்து நிறைந்துள்ள காரணத்தால் இவை ஆரோக்கியமான கண்களுக்கும், சருமத்திற்கும், உடல் வளர்ச்சிக்கும் மிகவும் உதவுகின்றது. கோடைகாலத்தில் குளிர்ச்சி மற்றும் தோலுக்கு வண்ணத்தை தருகிறது.

தினமும் கேரட்டினை சாப்பிட்டால் மாலைக்கண்நோய் எளிதில் குணமடையும். ஸ்ட்ரோக் எனப்படும் பக்கவாத நோய் வராது. ரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்புக்களை கரைக்க உதவுகிறது.

தினமும் ஒரு கேரட் சாப்பிடுவதன் மூலம், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை அகற்றலாம் குடல் புண்கள் வராமல் தடுக்கிறது. கேரட் சாற்றுடன், எலுமிச்சை சாறு கலந்து சாப்பிட்டால் பித்த கோளாறுகள் நீங்கும்சிறுநீர் கழிக்கும் போது உண்டாகும் எரிச்சல், அந்த இடத்தில் உருவாகும் புண் போன்றவற்றைக் குணமாக்க, கேரட்டை பச்சடியாக செய்து சாப்பிடலாம், உடனடி பலன் கிடைக்கும்.

பாதி வேகவைத்த முட்டையுடன், கேரட் மற்றும் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் ஆண்மை சக்தி அதிகரிக்கும். வயிற்றுப் போக்கு, வயிற்றுப் பொருமல், மூல உபத்திரம், வயிற்றுவலி இருப்பவர்கள், கேரட்டை திப்பியில்லாமல் அரைத்து ஜுஸாகக் குடிக்கலாம், விரைவில் குணமடையும்.

தினமும் கேரட்டினை சாப்பிட்டால் கரோட்டின் என்கின்ற உயரிய சத்து புற்று நோய் செல்களை கட்டுப்படுத்துகின்றன.செரிமானத்தை தூண்டி நல்ல ஜீரண சக்தியை தருகின்றது.  கேரட்டினை மென்று சாப்பிட்டும் போது உடலில் இருக்கும் கிருமிகள் அழிந்துவிடும். பற்களின் கரைகள் போய்விடுகிறது. 

கேரட் ஜூஸ் தினமும் எடுத்துக்கொள்ளும் பொது உடல் ஆரோக்கியம் பெறுகிறது. கேரட், கேரட் ஜூஸ் சாறு எடுத்து தேனுடன் கலந்து சாப்பிட்டு வந்தால் அல்சர் குணமாகும்.

கேரட்டில் ஏ, சி, கே போன்ற உயிர்ச்சத்துக்களும், பொட்டாசியம் போன்ற தாதுப்பொருளும் உள்ளது. வைட்டமின் ஏ சத்து கல்லீரலுக்கு மிகவும் சிறந்தது.

பெண்களுக்கு மெனோபாஸ் காலங்களில் ஏற்படும் வைட்டமின் இழப்பை சரிசெய்ய கேரட் மிகவும் சரியான ஊட்டசத்து என உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.

பெண்களுக்கு மாதவிலக்கின்போது உண்டாகும் அதிக உதிரப்போக்கை கட்டுப்படுத்தும் தன்மை உள்ளது.கருவுற்ற பெண்கள் தினமும் 25 கிராம் அளவு கேரட்டை பச்சையாகவோ அல்லது சமைத்தோ சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல், போலி வலிகள், களைப்பு ஏற்படாது. சோகை நீங்கும். 

பிறக்கும் குழந்தை நிறமாகவும், வலுவாகவும் பிறக்கும்.சருமத்திற்கு பொலிவையும், தலைச்சுற்றல், மயக்கம் போன்றவற்றை தடுக்கும் ஆற்றலும் நிறைந்துள்ளது. கண் புகைச்சல், கண்ணில் பாசி படிதல், மாலைக் கண் போன்றவற்றை குணமாக்கும்.

இன்சுலின் அதிகம் சுரக்க உதவுகிறது. கேரட், சர்க்கரை நோயாளிகள் கேரட்டை அளவோடு எடுத்துக் கொள்ளலாம். கேன்சர் நோயாளிகளுக்கு கீமோதெரபி கொடுக்கும் போது பக்க விளைவுகளின் வீரியத்தைக் குறைக்க 48 நாட்கள் கேரட் ஜுஸ் குடிப்பது நல்லது.

Trending News