Yoga for kids: குழந்தைகளின் ஞாபக சக்தியை அதிகரிக்க இந்த ஒரு யோகாசனம் போதும்

உங்களுக்கோ அல்லது உங்கள் குழந்தைகளுக்கோ கவனக் குறைவு பிரச்சனை இருந்தால், அதை எளிதாக சரி செய்துவிட முடியும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 25, 2021, 06:13 PM IST
  • சில பெற்றோர்கள் தங்கள் குழந்தை படிப்பில் கவனம் செலுத்துவதில்லை என்று புகார் கூறுகின்றனர்.
  • உடலின் சமநிலையையும் கவனத்தையும் அதிகரிக்க விருக்ஷாசனம் உதவுகிறது.
  • விருக்ஷாசனம் மனதின் சமநிலையை அதிகரிக்கிறது.
Yoga for kids: குழந்தைகளின் ஞாபக சக்தியை அதிகரிக்க இந்த ஒரு யோகாசனம் போதும் title=

Yoga for kids: எந்த வேலையையும் விரைவாகவும் சரியாகவும் செய்ய, அதில் முழு கவனம் செலுத்தப்பட வேண்டும். பெரியவர்களாக இருந்தாலும் சரி, குழந்தைகளாக இருந்தாலும் சரி, எதையும் கற்றுக்கொள்ள அதில் அதிக கவனம் இருப்பது மிகவும் முக்கியமாகும்.

சில பெற்றோர்கள் தங்கள் குழந்தை படிப்பில் கவனம் செலுத்துவதில்லை என்று புகார் கூறுகின்றனர். குழந்தைகளால் (Children) விரைவாக விஷயங்களைக் கற்றுக்கொள்ள முடியவில்லை என்றும் அப்படி கற்றுக்கொண்டாலும், அவற்றை நினைவில் வைக்க முடியவில்லை என்றும் பல பெற்றோர் மருத்துவர்களிடம் தங்கள் மனக்குறையை வெளிப்படுத்துகிறார்கள்.

உங்களுக்கோ அல்லது உங்கள் குழந்தைகளுக்கோ இந்த பிரச்சனை இருந்தால், அதை எளிதாக சரி செய்துவிட முடியும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இதற்கான ஒரு தனிச்சிறப்பு வாய்ந்த யோகாசனம் (Yogasana) மூலம், இந்த பிரச்சனைக்கு தீர்வு காணலாம்.

இந்த யோகாசனத்தின் பெயர் விருக்ஷாசனம் (Vrikshasana). இது பற்றி சமூக வலைத்தளங்களில் பிரபல நடிகை மலைக்கா அரோராவும் குறிப்பிட்டுள்ளார்.

How to do Tree Pose: விருக்ஷாசனம் செய்யும் முறை

உடலின் சமநிலையையும் கவனத்தையும் அதிகரிக்க விருக்ஷாசனம் உதவுகிறது என்று நடிகை மலைக்கா கூறுகிறார். இந்த ஆசனத்தை பின்வரும் வழிகளில் செய்ய வேண்டும்.

1. முதலில், உங்கள் இரண்டு கால்களையும் நேராக வைத்து நேராக நிற்கவும்.

2. பின்னர், இடது காலை சமநிலைப்படுத்தி, வலது காலை மடக்கி, வலது பாதத்தை இடது காலின் உள் தொடையில் வைக்கவும். இப்படி செய்யும்போது, ​​உங்கள் வலது பாதத்தின் கால்விரல் தரையை நோக்கி இருக்க வேண்டும்.

3. இந்த நிலையில் சமநிலைப்படுத்தி பின்னர் கைகளை இணைத்து அவற்றை தலைக்கு மேலே தூக்க வேண்டும்.

4. சிறிது நேரம் இந்த நிலையில் இருங்கள். பின்னர் காலை மாற்றி அதே செயல்முறையை மீண்டும் செய்யவும்.

ALSO READ: Health News: குடல் புழுக்களை வெளியேற்ற உணவே மருந்து 

Tree Pose Benefits: விருக்ஷாசனம் செய்வதன் நன்மைகள்

விருக்ஷாசனம் செய்வதால் கீழ்கண்ட நன்மைகள் கிடைக்கின்றன:

- இது மனதின் சமநிலையை அதிகரிக்கிறது.

- கவனம் (Concentration) செலுத்தும் திறன் அதிகரிக்கிறது.

- உடல் ரீதியான பல பிரச்சனையிலிருந்து நிவாரணம் கிடைக்கிறது.

- கால்களை வலுவாக்குகிறது.

- இடுப்பின் தசைகளைத் இலகுவாக்குகிறது.

(குறிப்பு: இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் எந்த மருத்துவ ஆலோசனைகளுக்கும் மாற்று இல்லை. இது கல்வி நோக்கத்திற்காக மட்டுமே வழங்கப்படுகிறது.)

ALSO READ: Health News: சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் வேம்பு தேநீர் 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News