Yoga Asanas For Hair Growth : நம் அழகுக்கு அழகூட்டும் வகையில் இருக்கும் விஷயங்களூள் ஒன்று, முடி. குழந்தை பருவத்திலும், பள்ளி பருவத்திலும் இருக்கும் அடர்த்தியான முடி, நாம் வளர்ந்தவுடன் எப்படி கொட்டுகிறது என்றே தெரியாது. மன அழுத்தம், உடல் நலப்பிரச்சனைகள் காரணமாக பலர் முடி இழப்பு அபாயத்தை சந்திக்கின்றனர். இதற்கென்று சில ஹேர்-கேர் முயற்சிகளை மேற்கொண்டாலும் பல சமயங்களில் அது வர்க்-அவுட் ஆகாமல் போகிறது. இதை சரிசெய்ய, சில யோகாசன பயிற்சிகள் இருக்கின்றன. அவை என்ன தெரியுமா?
சிராசனம்:
தலையால் நிற்க கூடிய ஆசனம்தான், சிராசனம். இதனை யோகாசனங்களின் ராஜா என்று கூறுவர். காரணம், இதை செய்வதால் உடலுக்கு அத்தனை நன்மை கிடைக்குமாம். சிராசனம் செய்யும் போது, தலை உச்சிக்கு ரத்த ஓட்டம் செல்வதால் அது முடி வளர்ச்சிக்கு உதவுகிறது.
சர்வங்காசனம்:
சர்வங்காசனம், தோள்பட்டையை வைத்து செய்யக்கூடிய உடற்பயிர்சியாகும். முடி வளர, தலைக்கு ரத்த ஓட்டம் செல்வது அவசியம். அந்த வகையில், உச்சிக்கு ரத்தம் செல்ல காரணமாக இருக்கிறது சர்வங்காசனம். அது மட்டுமன்றி, முடி வளர்ச்சிக்கு தேவையான தைராய்டு சுரப்பியையும் சமன் படுத்துகிறதாம்.
உத்தானாசனம்:
உத்தானாசனம் உடற்பயிற்சியை நின்று கொண்டே செய்ய வேண்டும். இதுவும், முடி வளர்ச்சிக்கு உதவும் ஆசனங்களுள் ஒன்றாகும். அதற்காக மட்டுமன்றி, மனதை சாந்தப்படுத்தவும் ஒரு சிலர் இந்த உடற்பயிற்சிகளை செய்கின்றனர். இது, முடி இழப்பிற்கு காரணமாக இருக்கும் மன அழுத்தத்தையும் கோபத்தையும் குறைக்க உதவுகிறது.
அதோ முக்கா ஸ்வானாசனம்:
அதோ முக்கா ஸ்வானாசனம், உடல் முழுவதும் ரத்த ஓட்டத்தை பரவ செய்யும் யோகாசனங்களுள் ஒன்று, அதோ முக்கா ஸ்வானாசன. இது, தலைக்கு செல்லும் ரத்த ஓட்டத்தை அதிகரிப்பதால் உடலை அமைதிப்படுத்துவதற்கும், நிதானப்படுத்துவதற்கும் கூட இந்த பயிற்சி உதவுகிறது.
மேலும் படிக்க | யோகாசனம் செய்ய தெரியாதவர்களுக்கான ஆசனங்கள்! சிம்பிளாக இருக்கும் ட்ரை பண்ணுங்க..
வஜ்ராசனம்:
வஜ்ராசனம் உடற்பயிற்சியை அமர்ந்த முறையில் செய்ய வேண்டும். இது, செரிமான கோளாறை தடுக்கவும், ஒட்டுமொத்த உடல் நலத்திற்கும் கூட உதவும். இது, மறைமுகமாக முடி வளர்ச்சிக்கும் ஆதரவு அளிக்கிறது. இந்த தியான பயிற்சி, நேரடியாக தலை உச்சிக்கு ரத்த ஓட்டத்தை செலுத்துகிறது.
பிராணாயாமம்:
பிராணாயாமம் என்பது, நாம் கட்டுப்படுத்தி செய்யக்கூடிய மூச்சுப்பயிற்சியாகும். இது, ஒட்டுமொத்த உடலநலனுக்கு உதவுகிறது. இது, உடல் அழுத்தம், மன அழுத்தம் ஆகியவற்றில் இருந்து மீள உதவுகிறது. இது, முடி வளர்ச்சிக்கும் உதவுகிறது.
யோகாசனம் செய்வதால் வாழ்வில் ஏற்படும் நன்மைகள்:
முடி வளர்ச்சிக்கு மட்டுமன்றி, வாழ்வில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வரவும் நாம் யோகா செய்யலாம். தினமும், 20 முதல் 30 நிமிடங்கள் வரை யோகா செய்வதை உங்களின் வழக்கமாக்கிகொள்ளுங்கள். வைட்டமின் மற்றும் புரதம் நிறைந்த உணவுகளை உங்கள் டயட்டில் சேர்த்துக்கொள்ளுங்கள். முடி வளர, குறிப்பிட்ட யோகாசனங்களை செய்வதுடன் அதை முழுமையாக, நாட்கள் தவறாமல் செய்ய வேண்டும். கூடவே, மருத்துவர்களின் ஆலோசனையுடன் சில ஹேர் கேர் பொருட்களையும் பயன்படுத்துங்கள்.
மேலும் படிக்க | சரசரவென ஏறும் சுகர் லெவலை கட்டுப்படுத்த வேண்டுமா? ‘இந்த’ யோகாசனம் செய்து பாருங்கள்!
(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ