Benefits Of Drinking Raisin Water: திராட்சை ஒரு உலர்ந்த பழமாகும், இவற்றில் அதிகப்படியான ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளது என்பதை நாம் அனைவரும் அறிவோம். ஆனால் உலர் திராட்சை தண்ணீரை குடிப்பது அதிகப்படியான நன்மைகளை தரும் என்பது உங்களுக்குத் தெரியுமா? திராட்சை அல்லது ஊறவைத்த திராட்சை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகளை நாம் அனைவரும் கேள்விப்பட்டிருக்கிறோம், ஆனால் திராட்சை தண்ணீரை குடிப்பதால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள் அளவில்லாதது என்றே தான் கூற வேண்டும். திராட்சை தண்ணீர் சிலருக்கு மிகவும் பயனுள்ளதாக இருப்பதாக கருதப்படுகிறது. அந்தவகையில் காலையில் வெறும் வயிற்றில் உலர் திராட்சை தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் அற்புத நன்மைகள் என்னென்ன என்பதை தெரிந்துக்கொள்வோம்.
வெறும் வயிற்றில் திராட்சை தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் அற்புத நன்மைகள் | Benefits of drinking raisin water on an empty stomach:
1. உடல் எடையை குறைக்க உதவும்: உடல் எடையை குறைக்க விரும்புவோருக்கு உலர் திராட்சை தண்ணீர் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த தண்ணீரில் உள்ள நார்ச்சத்து உங்கள் பசியை கட்டுப்படுத்த உதவும். காலையில் வெறும் வயிற்றில் இதை குடிப்பதால், வளர்சிதை மாற்றம் அதிகரிக்கிறது, இது உடல் எடையை குறைக்க உதவுகிறது.
2. நீரிழிவு நோயாளிகளுக்கு நன்மை பயக்கும்: நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உலர் திராட்சை நீர் பயன் தரும். இது இயற்கை சர்க்கரையின் மூலமாகும், இது இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவும். இதன் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் உடலில் இருந்து நச்சுகளை அகற்றி இன்சுலின் உணர்திறனை அதிகரிக்க உதவும்.
மேலும் படிக்க | இந்த 4 உணவுகளை தினசரி சாப்பிட்டால் உயர் இரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும்!
3. இதய நோய்: திராட்சை நீர் இதய நோயாளிகளுக்கு ஒரு வரப் பிரசாதமாகும். இந்த தண்ணீரில் பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் போன்ற கூறுகள் நிறைந்துள்ளன, இதனால் அவை இதயத் துடிப்பை இயல்பாக வைத்து இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவுகின்றன.
4. செரிமான பிரச்சனைக்கு தீர்வு தட்டும்: நீங்கள் செரிமான பிரச்சனைகளுடன் போராடுகிறீர்கள் என்றால், உலர் திராட்சை தண்ணீர் பயனுள்ளதாக இருக்கும். ஏனெனில் இதில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளது, இது மலச்சிக்கல் மற்றும் பிற செரிமான பிரச்சனைகளை போக்க உதவுகிறது. எனவே இந்த தண்ணீரை தினமும் குடிப்பதால் வயிற்றை சுத்தமாக வைத்திருக்கலாம், அதனுடன் செரிமானமும் மேம்படும்.
5. சரும பிரச்சனைகக்உ தீர்வு தரும்: உலர் திராட்சை நீர் சருமத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். ஏனெனில் இதில்இருக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் சருமத்தை பளபளப்பாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவும். இது சருமத்தை ஈரப்பதமாக்க உதவுகிறது மற்றும் முகப்பரு மற்றும் சுருக்கங்களை நீக்கவும் உதவுகிறது.
6. மூளை ஆரோக்கியம் மேம்படும்: உலர் திராட்சை நீர் குடித்து வந்தால் மூளை ஆரோக்கியம் மேம்படும். ஏனெனில் இதில் நிறைந்துள்ள போரான் மற்றும் இதர சத்துக்கள் மூளையின் செயல்திறனை அதிகரிக்கும். அதேபோல் இது நினைவாற்றலை மேம்படுத்துகிறது மற்றும் மன சோர்வை குறைக்கவும் உதவுகிறது.
மேலும் படிக்க | கையில் தொங்கும் தசையை ஈசியா குறைக்கலாம்! ‘இந்த‘ யோகாசனங்களை செய்யுங்கள்!
(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ