நெல்லிக்காயை இப்படி சாப்பிட்டா மலச்சிக்கலுக்கு குட் பை சொல்லிடலாம்

Constipation Remedies: நெல்லிக்காயை உட்கொள்வது மலச்சிக்கல் பிரச்சனையில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மலச்சிக்கலை போக்க நெல்லிக்காயை எப்படி சாப்பிட வேண்டும் தெரியுமா?

Written by - Malathi Tamilselvan | Last Updated : Sep 29, 2023, 09:11 AM IST
  • மலச்சிக்கலை போக்கும் நெல்லிக்காய்
  • அருமருந்தாய் பலனளிக்கும் நெல்லிக்காய்
  • நெல்லிக்காயின் மருத்துவ குணங்கள்
நெல்லிக்காயை இப்படி சாப்பிட்டா மலச்சிக்கலுக்கு குட் பை சொல்லிடலாம் title=

Nellikkai: மலச்சிக்கல் பிரச்சனையால் பலர் சிரமப்படுகின்றனர். தவறான உணவுப் பழக்கம், வாழ்க்கை முறை, தூக்கமின்மை மற்றும் மன அழுத்தம் போன்ற காரணங்களால் மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படலாம். மலச்சிக்கல் காரணமாக, வயிற்றில் கழிவுகள் தங்கியிருப்பதால், வயிற்று வலி, அஜீரணம் மற்றும் வயிற்றில் கனமான உணர்வு ஏற்படுகிறது. வயிற்றில் உள்ள கழிவுகள் அகலாவிட்டால் பசியின்மை மற்றும் எதையும் சாப்பிட விருப்பம் இல்லாத நிலை ஏற்படுகிறது.

மலசிக்கலுக்கு நிவாரணம்

மலச்சிக்கலை போக்க பல வகையான மருந்துகளை உட்கொள்கின்றனர். ஆனால் அனைவருக்கும் நிவாரணம் கிடைப்பதில்லை. மருந்துகளை தொடர்ந்து உட்கொள்வது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கலாம். மலச்சிக்கலை சுலபமாக போக்க பல வீட்டு வைத்தியங்கள் பரிந்துரைக்கப்பட்டாலும், மலச்சிக்கலைப் போக்க நெல்லிக்காயை உட்கொள்வது மிகவும் சுலபமான வழியாகும்.

நெல்லிக்காயின் மருத்துவ குணங்கள்

ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் நெல்லிக்காய் மிகவும் நல்லது என்றாலும், வயிற்றுக்கு மிகவும் நல்லது என்று கருதப்படுகிறது. நெல்லிக்காயை உட்கொள்வதால் மலச்சிக்கல் நீங்குகிறது மற்றும் செரிமான அமைப்பும் ஆரோக்கியமாக மாறுகிறது. எனவே, மலச்சிக்கலைப் போக்க நெல்லிக்காய் எவ்வாறு பயனுள்ளதாக இருக்கும் என்பதையும், அதை எப்படி உட்கொள்ள வேண்டும் என்பதையும் தெரிந்து கொள்வோம்.

மேலும் படிக்க | அடிவயிற்றில் உள்ள கொழுப்பு குறைய இதை மட்டும் சாப்பிட்டுங்கள்

நெல்லிக்காயின் நார்ச்சத்து

நெல்லிக்காயில் நல்ல அளவு நார்ச்சத்து உள்ளது, இது செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது. குடலை சுத்தம் செய்ய நெல்லிக்காய் உதவுகிறது. தவிர, குடல் இயக்கத்தை எளிதாக்கும் நெல்லிக்காயை தொடர்ந்து உட்கொள்வதால் மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து விரைவான நிவாரணம் கிடைக்கும். வயிற்றுப்போக்கு, வாந்தி, குமட்டல், அமிலத்தன்மை, அஜீரணம் மற்றும் வீக்கம் போன்ற செரிமான பிரச்சனைகளை நிவர்த்தி செய்வதிலும் நெல்லிக்காய் துரிதமாக செயல்படுகிறது.

வேகவைத்த நெல்லிக்காய்
தினமும் காலையில் வெறும் வயிற்றில் 2 வேகவைத்த நெல்லிக்காயை உட்கொள்ளலாம். இது செரிமானத்தை மேம்படுத்துவதோடு, உடலில் சேரும் நச்சுகளை எளிதில் வெளியேற்றும். காலையிலேயே வயிற்றை சுத்தப்படுத்த இந்த முறை பயனளிக்கும்.

நெல்லிக்காய் பொடி
மலச்சிக்கலை போக்க நெல்லிக்காய் பொடியை சாப்பிடலாம். ஆயுர்வேதக் கடைகளில் நெல்லிக்காய் பொடி அல்லது நெல்லிக்காய் சூரணங்கள் விற்கப்படுகின்றன. அதேபோல, தற்போது ஆன்லைனில் நெல்லிக்காய் பொடி கிடைக்கிறது. கொதிக்கும் தண்ணீரில் நெல்லிக்காய்ப் பொடியைப் போட்டு, சிறிது நேரம் விட்டு, அதில் தேன் கலந்து, வெறும் வயிற்றில் குடிக்கவும். இதனை தொடர்ந்து தினசரி காலையில் உட்கொள்வதன் மூலம் மலச்சிக்கல் என்ற பிரச்சனையே ஏற்படாது.

நெல்லிக்காய் சாறு
மலச்சிக்கல் பிரச்சனை இருப்பவர்கள், நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பது மிகவும் பயன் தரும். நெல்லிக்காய் சாறு தயாரிக்க, 3-4 நெல்லிக்காயை கழுவி துண்டுகளாக நறுக்கவும். பிறகு நெல்லிக்காய் துண்டுகளுடன் அரை கிளாஸ் தண்ணீர் விட்டு மிக்ஸியில் அரைக்கவும். புதினா இலைகள் அல்லது இஞ்சி சேர்த்து நன்றாக அரைத்து அதை வடிகட்டி குடிக்கவும். விரும்பினால், அதில் உப்பு கலந்து உட்கொள்ளலாம்.

நெல்லிக்காய் மலச்சிக்கல் பிரச்சனையை நீக்குவதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. இருப்பினும், ஏதேனும் கடுமையான நோயால் பாதிக்கப்பட்டிருந்தால், மருத்துவரின் ஆலோசனையின் பேரில் மட்டுமே நெல்லிக்காயை உட்கொள்ளவும்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை)

மேலும் படிக்க | Health Tips: என்னங்க சொல்றீங்க..!இந்த 5 காய்கறிகளை அதிகம் சாப்பிட்டால் இவ்வளவு பிரச்சனைகள் வருமா..?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News