பலூன் போன்ற உடலை பக்குவமா குறைக்க உதவும் பூண்டு: இப்படி சாப்பிடுங்க போதும்

Weight Loss With Garlic: சில எளிய இயற்கையான வழிகளிலும் உடல் எடையை குறைக்கலாம். இதன் மூலம் எந்த வித பக்க விளைவுகளும் இல்லாமல் நாம் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை நோக்கிய பயணத்தை தொடங்க முடியும். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jul 6, 2024, 10:36 AM IST
  • உடல் எடையை குறைக்க விருப்பம் கொண்டவர்களுக்கு பூண்டு சஞ்சீவியாக உதவும்.
  • பூண்டில் அல்லிசின் என்ற கலவை உள்ளது.
  • இது கொழுப்பைக் குறைக்கிறது, வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது.
பலூன் போன்ற உடலை பக்குவமா குறைக்க உதவும் பூண்டு: இப்படி சாப்பிடுங்க போதும் title=

Weight Loss With Garlic: இன்றைய காலகட்டத்தில் உடல் பருமன் என்பது மிக பொதுவான ஒரு பிரச்சனையாகி விட்டது. உடல் எடையை குறைக்க வேண்டுமா என்ற கேள்வியை 10 பேரிடம் கேட்டால், அதில் 8 பேரது பதில் ‘ஆம்’ என்றுதான் இருக்கும். அதிலும் தொப்பை பகுதியில் கொழுப்பு சேர்ந்து விட்டால் அதை குறப்பது ஒரு கடினமான பணியாகி விடுகிறது. 

உடல் எடை அதிகமானால் அது நம் ஆளுமையை கெடுத்து, தன்னம்பிக்கையையும் குறைக்கிறது. இது மட்டுமின்றி தொப்பை கொழுப்பு மற்றும் உடல் பருமன் ஆகியவை இன்னும் பல வித உடல் உபாதைகளுகும் வழி வகுக்கின்றன. தொப்பை கொழுப்பை குறைத்து உடல் எடையை குறைக்க பலர் பல வித முயற்சிகளை எடுக்கிறார்கள். சில ஜிம் செல்கிறார்கள், சிலர் கடுமையான உணவு கட்டுப்பாடுகளை மேற்கொள்கிறார்கள். 

ஆனால், சில எளிய இயற்கையான வழிகளிலும் உடல் எடையை குறைக்கலாம். இதன் மூலம் எந்த வித பக்க விளைவுகளும் இல்லாமல் நாம் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை நோக்கிய பயணத்தை தொடங்க முடியும். உடல் எடையை குறைக்க உதவும் பல வீட்டு வைத்தியங்களில் பூண்டும் ஒன்று. 

உடல் எடையை குறைக்க விருப்பம் கொண்டவர்களுக்கு பூண்டு சஞ்சீவியாக உதவும். பூண்டில் அல்லிசின் என்ற கலவை உள்ளது. இது கொழுப்பைக் குறைக்கிறது, வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது. இவற்றின் மூலம் பூண்டு தொப்பையை குறைத்து உடல் எடையை குறைக்க உதவுகிறது. 

மேலும் படிக்க | கலப்பட ரசாயன காய்கறிகளை அடையாளம் காண்பது எப்படி?

எடை இழப்புக்கு பூண்டின் பயன்பாடு

பூண்டை இந்த வழியில் பயன்படுத்தினால் எளிய வழியில் உடல் எடையை குறைக்கலாம்.

- தினமும் காலையில் வெறும் வயிற்றில் 2-3 பல் பூண்டு பற்களை உட்கொண்டு வந்தால் உடல் எடை குறையும். இது  தவிர பூண்டை நசுக்கி தண்ணீருடன் சேர்த்து சாப்பிடலாம், அல்லது, இதை கறிகள், குழம்பு, கலந்த சாதங்கள் என பல்வேறு உணவுகளிலும் சேர்த்து உட்கொள்ளலாம். 

- ஒரு கப் வெந்நீரில் 2-3 பூண்டு பற்களை நசுக்கிப்போட்டு 5 நிமிடம் கொதிக்க வைக்கவும். அதன் பின்னர் அதை வடிகட்டி அதனுடன் சிறிது எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்து குடிக்கவும். இது தொப்பை கொழுப்பை குறைக்க உதவும். 

- சூப், ரசம் போன்றவற்றில் பூண்டு சேர்ப்பது இவற்றின் சுவையை அதிகரிப்பதோடு, எடையைக் குறைக்கவும் உதவுகிறது. பூண்டு பற்களை இவற்றில் சேர்ப்பதன் மூலம் இவற்றின் ஆரோக்கிய நன்மைகளும் அதிகரிக்கின்றன. 

- 4-5 பூண்டு பற்களின் சாறு எடுத்து அதை ஒரு ஸ்பூன் தேனுடன் கலந்து வெறும் வயிற்றில் குடித்து வந்தால் சில நாட்களில் உடல் எடையில் வித்தியாசம் காணலாம். 

- பூண்டு எண்ணெயை தோலில் தடவுவதும் தொப்பை கொழுப்பை குறைக்க உதவும். தினமும் இரவில் தூங்கும் முன் வயிற்றில் பூண்டு எண்ணெய் கொண்டு மசாஜ் செய்யலாம். மாசாஜ் செய்துவிட்டு, 15-20 நிமிடங்கள் அப்படியே விட்டு பின்னர் வெதுவெதுப்பான நீரில் கழுவி விடலாம். 

(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க |  மாரடைப்புக்கு இணையாக சைலண்ட் கில்லராக மாறிவரும் இந்த பிரச்சனை... உஷார் மக்களே....!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News