ஆரோக்கியத்தை கொடுக்கும் தேன், சிலரின் ஆரோக்கியத்தைக் கெடுக்கும்! யாருக்கு ஆபத்து?

No Honey Please: சிலர் தேனை பயன்படுத்தவேக்கூடாது! மீறினால் அவர்களின் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும், நோயை அதிகப்படுத்தி நிலைமையை மோசமாக்கும்? யாரெல்லாம் தேன் சாப்பிடக்கூடாது?  

Written by - Malathi Tamilselvan | Last Updated : Dec 26, 2023, 01:31 PM IST
  • யாரெல்லாம் தேன் சாப்பிடக்கூடாது?
  • நோயை அதிகப்படுத்தும் தேன்
  • தேனின் பக்கவிளைவுகள்
ஆரோக்கியத்தை கொடுக்கும் தேன், சிலரின் ஆரோக்கியத்தைக் கெடுக்கும்! யாருக்கு ஆபத்து? title=

தேன் ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. அதன் சுவையும் இனிமையும் மக்களுக்கு மிகவும் பிடிக்கும். இதில் ஏராளமான மருத்துவ குணங்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் உள்ளன. வைட்டமின்-பி, வைட்டமின்-சி, புரதம், நார்ச்சத்து, கலோரிகள், தாமிரம் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் போன்ற ஊட்டச்சத்துக்கள் தேனில் ஏராளமாக உள்ளன. இது தவிர, இது அழற்சி எதிர்ப்பு, வைரஸ் எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளையும் கொண்டுள்ளது.

வீக்கத்தை நீக்குவதற்கும் எடையைக் குறைப்பதற்கும் பயனுள்ளதாக கருதப்படும் தேனை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் பல உடல் பிரச்சனைகளுக்கு தீர்வு காணலாம். ஆனால் தேன் உட்கொள்வது சிலருக்கு தீங்கு விளைவிக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா?

சில உடல்நலப் பிரச்சனைகள் இருப்பவர்கள் தேனை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் , நோயாளியின் பிரச்சனைகள் மேலும் அதிகரிக்கலாம். எப்பொழுது, யார் தேனை உட்கொள்ளக்கூடாது என்பதை தெரிந்துக் கொள்வது நல்லது.

மேலும் படிக்க | யூரிக் அமிலம் அதிகமாய் இருக்கா? இரவு உணவில் இவற்றை ஒதுக்கினால் போதும்!
 
நீரிழிவு நோயாளிகள்
நீரிழிவு நோயாளிகள் சர்க்கரைக்குப் பதிலாக தேனை உட்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். ஆனால் இதில் இயற்கையான சர்க்கரையும் உள்ளது, எனவே இதை அதிகமாக உட்கொள்வது இரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்கும். நீரிழிவு மற்றும் நீரிழிவு எதிர்ப்பு மருந்துகளை உட்கொண்டால், உங்கள் மருத்துவரின் ஆலோசனை பெற்ற பின்னரே தேனை பயன்படுத்த வேண்டும்.
 
பாலூட்டும் தாய்மார்கள்
தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் தேனை உட்கொள்ளக்கூடாது. ஏனெனில், தேனில் சி.போட்யூலினம் மற்றும் கிரானிடாக்சின் போன்ற மாசுக்கள் இருக்கலாம், அவை தாய்ப்பால் கொடுக்கும் போது, பால் வழியாக குழந்தைக்கு சென்றுவிடும். இது குழந்தையின் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். எனவே, பாலூட்டும் தாய்மார்கள் தேனை பயன்படுத்தினால், அவை சுத்தமானதாக இருக்க வேண்டும்.

உயர் இரத்த அழுத்தம், இதய பிரச்சனை உள்ளவர்கள்
உயர் இரத்த அழுத்தத்திற்கு மருந்து உட்கொள்பவர்கள் தேன் உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். இது தவிர, இதயம் தொடர்பான பிரச்சனை உள்ளவர்கள் தேன் சாப்பிடுவதையும் தவிர்க்க வேண்டும். உண்மையில், அதன் நுகர்வு இரத்த அழுத்தத்தை மிகவும் குறைக்கலாம், இது இதயத்திற்கு சேதத்தை ஏற்படுத்தும். எனவே, இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த மருந்துகளை எடுத்துக் கொண்டால், தேன் சாப்பிட வேண்டாம்.

மேலும் படிக்க | ஆரோக்கியத்திற்கு அருமருந்தாகும் காய்களின் பட்டியலில் முதலிடம் பிடிக்கும் சுரைக்காய்

ஒவ்வாமை பாதிப்பு
அலர்ஜியால் பாதிக்கப்பட்டவர்களும் தேன் உட்கொள்ளக்கூடாது. அதிலும், ஒவ்வாமை இருப்பவர்கள் தேனை உட்கொண்டால், தோல் வெடிப்பு, அரிப்பு அல்லது சரும எரிச்சல் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். அத்தகைய பிரச்சனை ஏற்பட்டால், உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

செரிமான பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டவர்கள் 
செரிமான பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் அதிக அளவில் தேனை உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். தேனை அதிகமாக உட்கொள்வது சிறுகுடலை பாதிக்கும், இது வயிற்று பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். இதன் காரணமாக உங்களுக்கு மலச்சிக்கல், வயிற்றுப் பிடிப்பு, வீக்கம் மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம்.

அதேபோல, தேனில் பல ஊட்டச்சத்து பண்புகள் உள்ளன, சர்க்கரைக்கு ஆரோக்கியமான மாற்றாக தேன் உள்ளது என்றாலும், தேனை அதிகமாக உட்கொள்வது பல்வேறு பக்க விளைவுகளை ஏற்படுத்தும்.

மேலும் படிக்க | ஜே.என்.1 வகை கொரோனாவுக்குத் தடுப்பூசி தேவையில்லை: மத்திய அரசு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News