உடல் சூடு வதைக்கிறதா? அப்போ வெண் பூசணி சாப்பிடுங்க..!

உடல் சூட்டினால் கஷ்டப்படுபவர்கள், வெள்ளைப் பூசணி சாறை குடித்து வந்தால், உடல் சூடு தணியும். அதுமட்டுமின்றி, உடலில் நீர்ச்சத்து அதிகரித்து, உடல் குளிர்ச்சியுடன் இருக்கும்.  

Written by - S.Karthikeyan | Last Updated : May 23, 2023, 01:25 PM IST
  • வெண் பூசணி வெறும் வயிற்றில் சாப்பிடலாம்
  • இருவேளையில் குடித்து வந்தால் ரத்தம் சுத்தமாகும்
  • சிறுநீருடன் ரத்தம் வெளிவருவது குணமாகும்
உடல் சூடு வதைக்கிறதா? அப்போ வெண் பூசணி சாப்பிடுங்க..! title=

நீர்ச்சத்து அதிகம்

வெள்ளைப் பூசணியில் விட்டமின் பி, சி-யுடன், கால்சியம், பொட்டாசியம், இரும்புச்சத்து, பாஸ்பரஸ் மற்றும் நார்ச்சத்தும் வளமாக நிறைந்துள்ளது. முக்கியமாக இதில் நீர்ச்சத்து அதிகம் உள்ளது. இதனால், உடல் எடையை குறைக்க மிகவும் உதவும். புண்களை ஆற்ற, தழும்புகளை காணாமல் போகச் செய்யவும் பூசணிக்காய் பயன்படும். பூசணி அடிக்கடி உணவில் சேர்ப்பது நோய் எதிர்ப்பு சக்தியை தக்கவைக்கும். பூசணிக்காய் விரும்பி சாப்பிடுபவர்களுக்கு கண் பார்வை சிறப்பாக இருக்கும்.

வாந்தி தலைச்சுற்றலுக்கு நிவாரணம்

ரத்த சுத்திக்கும், ரத்தக்கசிவு நீங்கவும், வலிப்பு நோய் சீராகவும், குடலில் உள்ள நாடாப்புழுக்கள் வெளியேறவும் உதவும். நுரையீரல் நோய், இருமல், ஜலதோஷம், நெஞ்சுச்சளி, நீரிழிவு, தீராத தாகம், வாந்தி, தலைசுற்றல் நீக்கப் பயன்படுகிறது. அல்சர் பிரச்சனையால் அவதிப்படுபவர்களுக்கு வெள்ளை பூசணி சாறு உடனடி பலனைத் தரும். அதுமட்டுமின்றி, அதிக காரமான உணவுகள் மற்றும் நீண்ட நேரம் உணவு உட்கொள்ளாமல் இருந்தால் ஏற்படும் அசிடிட்டி பிரச்சனையை எதிர்த்துப் போராடவும் வெள்ளை பூசணி சாறு உதவும்.

மேலும் படிக்க | டயட், உடற்பயிற்சி இல்லாமல் எடை குறைக்கலாம்.. இதை பண்ணுங்க போதும்

உடலில் உள்ள கெட்ட நீர் வெளியேறும்

தினமும் காலையில் வெள்ளை பூசணி சாறுடன் தேன் கலந்து குடித்து வந்தால், வயிற்றில் உள்ள புழுக்கள் வெளியேற்றப்பட்டு, வயிற்றில் தொற்றுகள் ஏற்படுவதைத் தடுக்கலாம். வெள்ளை பூசணி சாறை தினமும் காலையில் குடித்து வாருங்கள். இதில் கலோரிகள் மிகவும் குறைவாகவும், நீர்ச்சத்து அதிகமாகவும் உள்ளது. இதனால் எடை குறைவதோடு, உடலில் உள்ள கெட்ட நீரை வெளியேற்றிவிடும். உடல் சூட்டினால் கஷ்டப்படுபவர்கள், வெள்ளைப் பூசணி சாறை குடித்து வந்தால், உடல் சூடு தணியும். அதுமட்டுமின்றி, உடலில் நீர்ச்சத்து அதிகரித்து, உடல் குளிர்ச்சியுடன் இருக்கும்.

சிறுநீரக நோய்க்கு நிவாரணம்

வெள்ளை பூசணி சாற்றில் தேன் கலந்து தினமும் காலை, மாலை என இருவேளையில் குடித்து வந்தால், இரத்தம் சுத்தமாகும். உடலில் இரத்தம் சுத்தமாக இருந்தால், எவ்வித நோய்த்தொற்றுகளும் ஏற்படாமல் தடுக்கலாம். சிறுநீரகத்தில் தொற்று ஏற்பட்டு, சிறுநீருடன் இரத்தம் வெளிவருவது, அல்சரினால் உடலினுள் இரத்தக் கசிவு ஏற்படுவது, பைல்ஸ் போன்றவற்றினால் ஏற்படும் இரத்தக்கசிவு போன்றவற்றிற்கு வெள்ளை பூசணி சாறு நல்ல பலனைத் தரும். சிறுநீரகம் சம்பந்தமான நோய் உள்ளவர்கள் பூசணிக்காய்ச் சாறு 120 மில்லியில் ஒரு தேக்கரண்டி சர்க்கரை அல்லது தேன் கலந்து சாப்பிட்டு வந்தால், நோய்கள் முழுமையாக குணமாகும்.

மேலும் படிக்க | சர்க்கரை நோயாளிகள் பயமின்றி சாப்பிடக்கூடிய சில பழங்கள்! ரிஸ்கே இல்லை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News