இளநரை பிரச்சனைக்கு புளி இலைகள்: இளம் வயதிலேயே தலையில் வெள்ளை முடி வருவது இன்றைய காலக்கட்டத்தில் சர்வசாதாரணமாகிவிட்டது. ஆனால் இந்த பிரச்சனையால் இளைஞர்கள் மனதளவிலும் பாதிக்கப்படுகிறார்கள். இது அவர்களுடைய மன அழுத்தத்துக்கும் காரணமாக அமைகிறது. இதனால் பலர் தங்கள் நம்பிக்கையை இழக்கிறார்கள். பலர் இளநரை பிரச்சனையிலிருந்து தீர்வு காண பல வித ரசாயனங்களை பயன்படுத்துகிறார்கள். ஆனால் இவற்றால் கூந்தலுக்கு சேதமே அதிகமாகிறது. இதனால் கூந்தலில் வறட்சியும் உறுதியின்மையும் ஏற்படுகின்றது.
இதை சமாளிக்க சில எளிய இயற்கையான தீர்வுகள் உள்ளன. அதில் ஒன்று தான் புளி இலை. இதன் மூலம் சில நாட்களிலேயே இந்த பிரச்சனையிலிருந்து தீர்வு கிடைக்கும். இதை பற்றி இந்த பதிவில் காணலாம்.
புளி இலைகளால் வெள்ளை முடி கருப்பாக மாறும்
25 முதல் 30 வயதிற்குள், உங்கள் கூந்தலும் வெள்ளையாகத் துவங்கினால், அதை சரி செய்ய புளி இலைகளை பயன்படுத்தலாம். இதில் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. அவை கூந்தலை ஆரோக்கியமாக மாற்ற உதவுவது மட்டுமல்லாமல், உடல் தொடர்பான பல பிரச்சனைகளும் இதன் மூலம் சரியாகும். அதன் பொடுகு எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் கூந்தலைப் பொருத்தவரை மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
மேலும் படிக்க | 4 வாரத்தில் நரை முடி முற்றிலும் மறைய இயற்கை வைத்தியம்
புளி இலைகளை எப்படி பயன்படுத்துவது
நல்ல கூந்தல் ஆரோக்கியத்திற்கு, புளி இலைகளின் ஹேர் பேக் தயார் செய்யலாம் அல்லது அதன் உதவியுடன் ஹேர் ஸ்ப்ரேயும் செய்யலாம்.
1. ஸ்ப்ரே தயார் செய்ய, முதலில், ஒரு பாத்திரத்தில் 5 கப் தண்ணீர் எடுத்து, அதில் அரை கப் புளியை கலக்கவும். இப்போது அதை கொதிக்க வைத்து, அது குளிர்ந்து போகும் வரை காத்திருந்து, முடியில் தெளித்த பிறகு சிறிது நேரம் கழித்து சுத்தமான தண்ணீரில் கழுவவும்.
2. புளி இலைகளின் ஹேர் பேக் தயார் செய்ய, புளி இலைகளை தயிர் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். பேஸ்ட் தயாரானதும், மெதுவாக மசாஜ் செய்து முடியில் தடவவும். அது காய்ந்த பிறகு, சுத்தமான தண்ணீர் கொண்டு கூந்தலை கழுவவும்.
புளி இலைகளால் கிடைக்கும் நன்மைகள் என்ன?
புளியில் உள்ள இயற்கையான ஹேர் கலரிங் ஏஜென்ட்கள் காரணமாக, சில வாரங்கள் பயன்படுத்தினால், வெள்ளை முடி மீண்டும் கருப்பாக மாறுவது மட்டுமல்லாமல், முடி உதிர்தல், முடி வறட்சி, பலவீனமான முடி போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுதலை கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன்னர் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | உடல் எடையை குறைக்க நீரிழிவு நோயாளிகள் இதை மட்டும் செஞ்சுடாதீங்க!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ