இளநரை பிரச்சனைக்கு உடனடி தீர்வு வேண்டுமா? இதோ எளிய வீட்டு வைத்தியங்கள்

Premature White Hair Remedies: பாடாய் படுத்தும் இளநரை பிரச்சனைக்கு சில எளிய வழிகளில் தீர்வு காணலாம். இதற்கான வீட்டு வைத்தியங்கள் இதோ.  

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Aug 1, 2022, 03:31 PM IST
  • ஆரோக்கியமான உணவுகள் இல்லாமல் ஆரோக்கியமான முடியை நீங்கள் கற்பனை கூட செய்து பார்க்க முடியாது.
  • கூந்தலுக்கு சரியான ஊட்டச்சத்து கிடைக்க வேண்டுமெனில், இதற்கு சத்தான உணவை தவறாமல் எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • இது முடிக்கு உட்புறத்தில் இருந்து நன்மை பயக்கும்.
இளநரை பிரச்சனைக்கு உடனடி தீர்வு வேண்டுமா? இதோ எளிய வீட்டு வைத்தியங்கள் title=

இளநரை பிரச்சனை: ஒரு காலத்தில் வெள்ளை முடி முதுமையின் அறிகுறியாக கருதப்பட்டது, ஆனால் தற்போது 25 - 30 வயது இளைஞர்களும் வெள்ளை முடியால் சிரமப்படுகிறார்கள். இதற்கு மரபணுவும் ஒரு காரணமாக இருக்கலாம். எனினும், இது பொதுவாக மோசமான வாழ்க்கை முறை மற்றும் தவறான உணவுப் பழக்கங்களால் ஏற்படுகிறது. நம் தலைமுடியில் மெலனின் என்ற நிறமி உள்ளது. இந்த நிறமி குறையத் தொடங்கும் போது முடி வெண்மையாக மாறத் தொடங்குகிறது. அத்தகைய சூழ்நிலையில், உங்கள் வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கங்களில் மாற்றங்களைக் கொண்டுவருவது முக்கியமாகும். அப்போதுதான் நீங்கள் விரும்பிய முடிவைப் பெற முடியும்.

இந்த கெட்ட பழக்கங்களால் முடி வேகமாக நரைக்கும்

பாஸ்ட் புட், ஜங்க் ஃபுட், ஆயிலி ஃபுட், சிகரெட், மது ஆகியவற்றை அதிகமாக உட்கொள்பவர்களின் தலைமுடியில் மெலனின் அளவு குறைய ஆரம்பித்து விடுகிறது. இதனால்தான் இன்றைய காலக்கட்டத்தில் இளைஞர்களின் கூந்தலும் வெள்ளையாக மாறத் துவங்குகிறது. ஆகையால், இளம் வயதினர் தங்களின் இந்த கெட்ட பழக்கங்களை உடனடியாக விட்டொழிக்க வேண்டியது மிக அவசியம். 

வெள்ளை முடியை கருமையாக்க வைத்தியம்

நெல்லிக்காய் மற்றும் செம்பருத்தி

நெல்லிக்காய் மற்றும் செம்பருத்தி பூக்களை பயன்படுத்தினால், அது இந்த பிரச்ச்னைக்கு லாபகரமான தீர்வுகளை அளிக்கும். இதற்கு, நெல்லிக்காய் மற்றும் செம்பருத்தி தவிர, சில துளிகள் எள் மற்றும் தேங்காய் எண்ணெயை நன்கு கலந்து பேஸ்ட்டை தயார் செய்யவும். இப்போது இந்த பேஸ்ட்டை முடியின் வேர்களில் மசாஜ் செய்யவும். இப்படி தொடர்ந்து செய்து வந்தால் வெள்ளை முடி மீண்டும் கருப்பாக மாறும்.

மேலும் படிக்க | கொழுப்பை குறைக்கணுமா? இந்த பழக்கத்தை எல்லாம் விட்டுடுங்க 

வெங்காயம்

வெங்காயம் முடிக்கு நன்மை பயக்கும் என்று கருதப்படுகிறது. இதற்கு மிக்ஸியில் சில வெங்காயத் துண்டுகளை அரைக்கவும். அதன் பிறகு, காட்டன் துணியால் சாற்றை வடிகட்டி ஒரு பாத்திரத்தில் எடுக்கவும். இப்போது உச்சந்தலையில் இதைக் கொண்டு மசாஜ் செய்யவும்.

ஆரோக்கியமான உணவு

ஆரோக்கியமான உணவுகள் இல்லாமல் ஆரோக்கியமான முடியை நீங்கள் கற்பனை கூட செய்து பார்க்க முடியாது. கூந்தலுக்கு சரியான ஊட்டச்சத்து கிடைக்க வேண்டுமெனில், இதற்கு சத்தான உணவை தவறாமல் எடுத்துக்கொள்ள வேண்டும். இது முடிக்கு உட்புறத்தில் இருந்து நன்மை பயக்கும்.

எண்ணெய் மசாஜ்

முடியின் வேர்கள் வலுவாக இருக்க எண்ணெய் மசாஜ் மிகவும் முக்கியமானது. இதில் பாதாம் எண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

மருதாணி மற்றும் வெந்தயம்

மருதாணி மற்றும் வெந்தயத்தை நன்றாக அரைத்து பேஸ்ட் செய்து, அதில் தேங்காய் எண்ணெய் மற்றும் மோர் கலந்து கொள்ளவும். இப்போது இந்த கலவையுடன் முடியின் வேர்களை மசாஜ் செய்யவும். அதன் பலன் சில நாட்களில் தெரியும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன்னர் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற 5 டயட் உணவுகள் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News