White Hair On Face: முகத்தில் உள்ள வெள்ளை முடி நீங்க லேடஸ்ட் ட்ரீட்மெண்ட்ஸ்

White Facial Hair Removing Tips: உங்கள் முகத்தில் வளர்ந்துள்ள முடிகளை நீக்க நீங்கள் போராடினால், இந்த எளிதான லேடஸ்ட் ட்ரீட்மெண்ட்டை முயற்சி செய்யலாம்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jul 31, 2022, 03:00 PM IST
  • முகத்தில் உள்ள வெள்ளை முடியை அகற்ற பயனுள்ள வழிகள்
  • எளிய வீட்டுக்குறிப்பை ட்ரை பண்ணுங்க
White Hair On Face: முகத்தில் உள்ள வெள்ளை முடி நீங்க லேடஸ்ட் ட்ரீட்மெண்ட்ஸ் title=

இளம் வயதில் தலையில் வெள்ளை முடி வர ஆரம்பித்தால், அது டென்ஷனுக்கு காரணமாகிறது, ஆனால் இதுவே பெண்களுக்கு முகத்தில் வெள்ளை முடி வளர ஆரம்பிக்கும் போது மன அழுத்தம் அதிகரிக்கிறது. பொதுவாக நமது உடலில் மெலனின் இல்லாததால் முக முடி பொதுவாக வெண்மையாக மாறும். அதேபோல் உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களும் இதற்கு முக்கிய காரணமாக இருக்கலாம். இதுபோன்ற சூழ்நிலையில், பல பெண்கள் மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள், ஆனால் மன அழுத்தத்திற்கு பதிலாக, சில எளிய நடவடிக்கைகளை செய்தால் இந்த தொல்லையில் இருந்து விடுப்படலாம்.

முகத்தில் உள்ள வெள்ளை முடியை அகற்ற பயனுள்ள வழிகள்

1. தேன்
தேன் சருமத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் என்று கருதப்படுகிறது, நீங்கள் அதனுடன் சர்க்கரையை கலந்து, சூடு செய்த பிறகு, எலுமிச்சை சாறு கலக்கவும். இந்த கலவையின் உதவியுடன், முகத்தில் உள்ள தேவையற்ற வெள்ளை முடிகளை அகற்றலாம். 

மேலும் படிக்க | அதிக பாதாம் ஆபத்தாகலாம்: ஒரு நாளைக்கு எத்தனை பாதாம் சாப்பிடுவது நல்லது

2. ஃபேஸ் ரேஸர்
பெண்களுக்காக சந்தையில் பல வகையான ஃபேஷியல் ரேசர்கள் உள்ளன, இதன் மூலம் முகத்தில் உள்ள தேவையற்ற வெள்ளை முடியைப் போக்கலாம். இதற்கு முதலில் முகத்தை நன்றாக சுத்தம் செய்யவும். முகம் வறண்டு போகாமல் பார்த்துக் கொள்ளுங்கள், இல்லையெனில் சொறி வரலாம் அல்லது தோல் உரியலாம்.

3. ஆப்ளிகேட்டர்
ஆப்ளிகேட்டரின் உதவியுடன், முகத்தில் உள்ள வெள்ளை முடிகளை சுலபமாக அகற்றலாம் மற்றும் இதில் இருக்கும் சிறந்த விஷயன் என்னவென்றால் இந்த செயல்பாட்டில் உங்களுக்கு எந்தவித வலியும் இருக்காது.

4. லேசர் ஹேர் ரிமூவல்
லேசர் ஹேர் ரிமூவல் முகத்தில் இருந்து வெள்ளை முடியை அகற்றுவதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும், ஆனால் இந்த வேலையை ஒரு நல்ல தொழில்முறை பார்லர் அல்லது நிபுணரால் மட்டுமே செய்யப்பட வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள், இல்லையெனில் நன்மைக்கு பதிலாக இழப்பு ஏற்படலாம்.

5. த்ரெடிங்
த்ரெடிங் என்பது பார்லரில் ஏற்றுக்கொள்ளப்படும் ஒரு பொதுவான பதக்கமாகும். அதன் உதவியுடன் வெள்ளை முடியை அகற்றுவது எளிது. இதில், முடி அகற்றுதல் நூல் உதவியுடன் செய்யப்படுகிறது.

6. ஃபேஸ் மாஸ்க் 
ஒரு பௌலில் 1 முட்டையின் வெள்ளைக்கருவை சேர்த்து, அத்துடன் 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் 1 டீஸ்பூன் தேன் சேர்த்து நன்கு அடித்துக் கொண்டு, பின் அதனை முகத்தில் தடவி 15-20 நிமிடம் நன்கு உலர வைத்து பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இதனால் சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசை நீங்கி, பருக்கள் வருவது குறைந்து, சருமத்தின் நிறமும் அதிகரிக்கும்.

மேலும் படிக்க | அஜீரண பிரச்சனையை ஓட விரட்ட புதினா இந்த வகையில் பயன்படுத்தவும்

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ZEE NEWS இதை உறுதிப்படுத்தவில்லை.)

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News