ஹோட்டல் மற்றும் உணவகங்களில் அசைவ உணவுக்கு தடை விதிக்கப்பட்டது ஏன்?

பறவைக் காய்ச்சல் பரவுவதன் எதிரொலியாக, கோழி விற்பனை, கொள்முதல், பதப்படுத்துதல் மற்றும் பேக்கேஜிங் ஆகியவற்றுக்கு பல இடங்களில் தடை விதிக்கப்பட்டுள்ளன. 

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jan 13, 2021, 06:55 PM IST
  • ஹோட்டல் மற்றும் உணவகங்களில் அசைவ உணவுக்கு தடை
  • சிக்கன், முட்டை விற்பனைக்குத் தடை
  • ஹோட்டல் நடத்துபவர்கள் கவலை
ஹோட்டல் மற்றும் உணவகங்களில் அசைவ உணவுக்கு தடை விதிக்கப்பட்டது ஏன்? title=

புதுடெல்லி: பறவைக் காய்ச்சல் பரவுவதன் எதிரொலியாக, கோழி விற்பனை, கொள்முதல், பதப்படுத்துதல் மற்றும் பேக்கேஜிங் ஆகியவற்றுக்கு பல இடங்களில் தடை விதிக்கப்பட்டுள்ளன. 

வடக்கு டெல்லி முனிசிபல் கார்பரேஷன் மற்றும் தெற்கு டெல்லி முனிசிபல் கார்பரேஷன் ஆகியவை அசைவ உணவுகள் மற்றும் முட்டையை (Egg) தங்கள் அதிகார எல்லைக்குள் தடை விதித்தன. அத்துடன் இந்தத் தடை உடனடியாக அமலுக்கு வருவதாவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் இந்த இரண்டு மாநகராட்சிகளிலும் உள்ள ஹோட்டல்களும் உணவகங்களும் கோழி இறைச்சி, தொடர்புடைய பொருட்கள் மற்றும் முட்டைகளால் செய்யப்பட்ட உணவுகளை பரிமாறக்கூடாது, விற்பனை செய்யக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளன. 

நாட்டின் பல பகுதிகளிலும் பறவைக் காய்ச்சல் (Bird Flu) பரவி வரும் நிலையில் அரசு நிர்வாகம் கவலை கொண்டுள்ளது. பறவைகளின் வயிற்றில் உள்ள தீ நுண்மங்கள் வெளித்தெரியும் நோயாக உருவெடுக்கின்றன. வீட்டுப் பறவைகள் அல்லது வியாபார நோக்குடன் வளர்க்கப்படும் பறவைகளிடையே கூடுதல் தாக்கத்தை ஏற்படுத்துகிறது பறவைக் காய்ச்சல். வெளிக்காட்டும் வகையிலான தொற்றுநோயாக இத்தீ நுண்மம் பரவினால், அது வேகமாகப் பரவும் கூடியது.

பறவை சார்ந்த தீ நுண்மங்கள் பொதுவாக மனிதர்களை பாதிப்பதில்லை. ஆனால், 1997 ஆம் ஆண்டிற்கு பிறகு இந்தத் தொற்று பண்ணை (Poultry) வைத்திருப்பவர்கள், மற்றும் பறவைகளுடன் நேரடித் தொடர்புடையவர்களுக்கும் பரவத் தொடங்கியது.   2004 ஆம் ஆண்டு வாக்கில் H5N1 தீ நுண்மத்தால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டது.  

ஏற்கனவே கொரோனா வைரஸ் மூலமாக கோவிட்-19 உலகம் முழுவதும் பரவி மாபெரும் சிக்கலை ஏற்படுத்தியிருக்கு நிலையில் தற்போது பறவைக் காய்ச்சல் அதிக கவலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Also Read | Sadhguru: இயற்கை விவசாயத்தை இளைஞர்கள் தமிழகத்தில் முன்னெடுக்க வேண்டும்

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR   

Trending News