நீருக்கு அடியில் குழந்தை பெற்று கொள்ளலாமா?அப்படி செய்தால் என்ன நடக்கும்?

Water Birthing: தண்ணீருக்கு அடியிலும் குழந்தை பெற்றுக்கொள்ளலாம். இது, தாய்-குழந்தை என இருவருக்கும் நண்மை பயக்கும் என கூறப்படுகிறது. சரி, இந்த முறை அனைவருக்கும் சாத்தியமா? இதன் பின்விளைவுகள் என்ன? எல்லாவற்றையும் இங்கே தெரிந்து கொள்வோம் வாங்க. 

Written by - Yuvashree | Last Updated : Jun 25, 2023, 04:14 PM IST
  • தண்ணீருக்கு அடியில் குழந்தை பெற்றுக்கொள்ளும் முறை பற்றி உங்களுக்கு தெரியுமா?
  • இது பிரசவ வலியை கட்டுப்படுத்தும்.
  • தாய்-குழந்தை இருவருக்கும் இந்த முறை நன்மை பயக்கும்.
நீருக்கு அடியில் குழந்தை பெற்று கொள்ளலாமா?அப்படி செய்தால் என்ன நடக்கும்? title=

பிரசவ காலம் பலருக்கும் மறக்க முடியாத அனுபவங்களை தரும். இதில் பலவகைகள் இருந்தாலும் நீருக்கு அடியில் குழந்தை பெற்றுக்கொள்வதை மட்டும் பலர் வினோதமாக பார்க்கின்றனர். Water Birthing என்றால் என்ன? நீருக்கடியில் குழந்தை பெற்றுக்கொள்வதால் என்ன ஆகும்? வாங்க தெரிந்து கொள்வோம். 

செலிபிரிட்டி ஜோடியின் குழந்தை பெற்றுக்கொள்ளும் முறை:

பிரபல நடிகர் நகுலிற்கு ஸ்ருதி என்பவருடன் கடந்த 2016ஆம் ஆண்டு திருமணம் நடைப்பெற்றது. இவர்களுக்கு அகிரா என்ற மகளும் அமோர் என்ற மகனும் உள்ளனர். இவர்கள் இருவரையும் Water Birthing முறையில்தான் ஸ்ருதி பெற்றெடுத்தார். தனது இரண்டாவது குழந்தையின் பிரசவத்தின் போது எடுத்த வீடியோவை நகுல்-ஸ்ருதி ஆகிய இருவரும் பகிர்ந்துள்ளனர். இதில் மருத்துவர் மற்ற்ஹ்ம் அவரது உதவியாளர் அருகில் நிற்க, அவர்களது உதவியுடன் ஸ்ருதி குழந்தையை பெற்றெடுப்பார். இப்படி குழந்தையை தண்ணீருக்கு அடியில் பெற்றெடுப்பதால் ஏதேனும் ஆபத்து இருக்கிறதா? இல்லை, இது இயற்கையான வழிமுறைதானா? இங்கே தெரிந்து கொள்வோம்.

மேலும் படிக்க | கொழுப்பை எரிக்கும் மாத்திரைகள்... உடல் பருமனை குறைக்க உதவுமா... நிபுணர்கள் கூறுவது என்ன!

Water Birthing என்றால் என்ன?

பிற பிரசவ முறைகள் போலவே, தண்ணீருக்கு அடியில் குழந்தை பெற்றுக்கொள்ளும் முறையும் இயற்கையானதுதான். இந்த முறையில், குழந்தை பெற்றுக்கொள்ளும் பெண் டப் நிறைய வெதுவெதுப்பான தன்ணீரில் அமர்ந்து குழந்தை பெற்றுக்கொள்ள முயற்சி செய்வார். சுக பிரசவத்தை பேணும் பெண்கள் மட்டுமே இதனை செய்ய முடியும். தண்ணீரில் அமர்ந்து பிரசவ வலியை அனுபவிப்பவர்கள், சாதாரணமாக வலியை உணருபவர்களை விட தண்ணீருக்குள் குறைவாகவே உணருவதாக கூறப்படுகிறது. இது, பிரசவத்தின் போது உண்டாகும் பதற்றத்தை (anxiety)குறைக்க உதவும். இதற்காக பிரத்யேகமாக சில மருத்துவ மையங்களும் மருத்துவமனைகளும் உள்ளன. பிரசவத்திற்கு செல்லும் பெண்கள், மருத்துவரின் அறிவுரைப்படி கேட்டு இந்த பிரசவ முறை வேண்டாமா வேண்டுமா என்பதை தேர்ந்தெடுக்க வேண்டும். 

இத்தனை பயன்களா?

தண்ணீருக்கு அடியில் குழந்தை பெற்றெடுப்பது குழந்தை, தாய் என இருவருக்குமே நன்மை பயக்குமாம். தண்ணீரில் குழந்தை பெற்றுக்கொள்வதால் எண்டார்ஃபீன் எனப்படும் சந்தோஷத்தை ஏற்படுத்தும் ஹார்மோன்கள் வெளியாகின்றன. இதனால், பிரசவ வலி குறையும் என மருத்துவர்கள் தரப்பில் கூறப்படுகிறது. சுடுதண்ணீரில் உட்காருவதால் குழந்தை பிறப்பதற்கு முன்னர் ஏற்படும் காண்ட்ராஷன்கள் அதிகரிக்க வாய்ப்புகள் அதிகம். மேலும், குழந்தை இருக்கும் பகுதிக்கும் தாயின் உடலில் உள்ள பிற பகுதிகளுக்கு அதிக ரத்த ஓட்டம் செல்லவும் தண்ணீருக்கு அடியில் குழந்தை பெற்றுக்கொள்ளும் முறை உதவுகிறதாம். 

குழந்தைகள் 9-10 மாதங்கள் தாயின் வயிற்றுக்குள் இருக்கும் ஆம்னியோடிக் திரவம் எனும் திடமான தண்ணீரில்தான் வாழ்கிறது. இதனால் அவை தண்ணீருக்கு அடியில் பிறக்கும் போது அவை எந்த வித்தியாசத்தையும் உணருவதில்லை. இந்த வகையான குழந்தை பிறப்பிற்கு பிறகு உடனே தாயுடைய உடலுடன் குழந்தையை வைக்க வேண்டும், பிறகு பாலூட்ட வேண்டும். இது, குழந்தைக்கு மிகவும் நல்லது என கூறப்படுகிறது. 

இதையும் மனதில் வைத்து கொள்ளுங்கள்:

தண்ணீருக்கு அடியில் குழந்தை பெற்றுக்கொள்ளும் போது அதிக கவனம் தேவை. கைதேர்ந்த மருத்துவர் இல்லாமல் இதை தனியாக செய்ய கூடாது. இதற்கும் தண்ணீர் இல்லாமல் சுக பிரசவம் செய்து கொள்பவர்களுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. இரண்டு வகையிலும் பிறக்கும் குழந்தைகள் ஆரோக்கியமாகவே வளருகின்றன. மருத்துவர்கள் உங்கள் பிரசவத்தில் ஆபத்து இருக்கிறது என்று கூறினால், இந்த முறையை கையாள்வதில் மிகவும் கவனமும் பாதுகாப்பும் தேவை. water birthing முறையில் குழந்தை பிறக்கும் போது, அது வாய்க்குள் தண்ணீர் புகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். 

மேலும் படிக்க | குழந்தைகளை எப்படி வளர்க்க வேண்டும்? புதிய பெற்றோர்களுக்கான சில சிம்பிள் வழிமுறைகள் இதோ..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News