Beware Of Covid Disease: முன்னர் தோன்றிய கொரோனா வைரஸின் அனைத்து வகைகளையும் விட பைரோலா மாறுபாடு மிகவும் ஆபத்தானதாகக் கருதப்படுகிறது, இது மக்களை வேகமாகப் பாதிக்கிறது என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. கொரோனாவின் புதிய மாறுபாடு பதற்றத்தை அதிகரித்துள்ளது, இந்த 5 அறிகுறிகள் தோன்றியவுடன் உடனடியாக எச்சரிக்கையாக இருங்கள்; அது எவ்வளவு ஆபத்தானது என்று தெரிந்து கொள்ளுங்கள்.’
கொரோனா வைரஸ்
கோவிட் 19 உலகையே அச்சுறுத்தி வந்தது. அதற்கு பின்னர் அதன் பல்வேறு வகைகள் உருமாற்றம் அடைந்து வந்துகொண்டே இருந்தன. இப்போது வந்துள்ள ஒருவகை வைரஸ் கொரோனா வைரஸின் புதிய வகை, இதற்கு பைரோலா என்று பெயரிடப்பட்டுள்ளது. பிஏ.2.86 என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது. இது வேகமாக பரவக்கூடிய தன்மை கொண்டதாக உள்ளது.
உலக சுகாதார அமைப்பு கண்காணிப்பு
சார்ஸ் வைரஸின் உருமாற்றங்களையும் கண்காணித்து வரும் உலக சுகாதார அமைப்பு, பிஏ.2.86 அல்லது பைரோலா என்ற வைரஸ், ஜூலை மாத இறுதியில் டென்மார்க்கில் இருந்து கண்டறியப்பட்டதாக தெரிவித்தன. பைரோலா அல்லது பிஏ.2.86 என்ற வைரஸ், ஒமிக்ரான் வகை கொரோனா வைரசின் பரம்பரையைச் சேர்ந்த உப வகை வைரஸ் ஆகும்.
கொரோனாவின் தாக்கம் முடியவில்லை
கொரோனா வைரஸ் இன்னும் முழுமையாக அழிக்கப்படவில்லை, மக்களைத் தொடர்ந்து பாதித்து வரும் கொரோனாவின் தாக்கம் குறைந்து வீரியத்தை இழந்துவிட்டாலும், முற்றிலுமாக உலகில் இருந்து மறைந்துவிடவில்லை. ஆனால் இப்போது அதன் புதிய மாறுபாடு வெளிப்பட்டு, கவலைகளை அதிகரித்துள்ளது.
பிஏ.2.86 பைரோலா மாறுபாடு
கொரோனா வைரஸின் புதிய வகைகளின் தோற்றத்திற்குப் பிறகு, கோவிட் நோய் பாதிப்புகள் அதிகரித்துள்ளன. பிரிட்டனில் தற்போது பரவி வருகிறது. பிஏ.2.86 பைரோலா மாறுபாடு, கொரோனாவின் இதற்கு முந்தைய அனைத்து வகைகளையும் விட மிகவும் ஆபத்தானதாகக் கருதப்படுகிறது என்பதும், மக்களை வேகமாகப் பாதிக்கிறது என்பதும் கவலையளிக்கிறது.
இங்கிலாந்து மட்டுமல்ல, டென்மார்க், தென்னாப்பிரிக்கா, இஸ்ரேல் மற்றும் சுவிட்சர்லாந்து போன்ற நாடுகளில் பைரோலா உப வகை வைரஸின் பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன.
கொரோனா வைரஸின் பைரோலா மாறுபாடு எவ்வளவு ஆபத்தானது?
தற்போது இருக்கும் கொரோனாவின் பிற வகைகளைவிட பைரோலா மாறுபாடு (BA.2.86 Pirola) மிகவும் ஆபத்தானது, இது நோயெதிர்ப்பு மண்டலத்தையும் தோற்கடிக்கும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இந்த மாறுபாட்டில் 30 க்கும் மேற்பட்ட வெவ்வேறு பிறழ்வுகள் உள்ளன, இதனால், அதை பகுப்பாய்வு செய்வதில் சிரமங்கள் உள்ளது.
இந்த புதிய வகை வைரஸ் பாதிப்பு சர்வதேச அளவில் குறைவாக காணப்பட்டாலும், ஒப்பீட்டளவில், பிரிட்டனில் அதிக அளவு பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
மேலும் படிக்க | மீண்டும் மீண்டு வருகிறதா கொரோனா? கோவிட் நோயை ஏற்படுத்தும் புதிய ஒமிக்ரான் எரிஸ்
Pirola வைரஸின் அதிக ஆபத்து யாருக்கு?
பைரோலா மாறுபாடு அதாவது பிஏ.2.86 மாறுபாடு என்பது கோவிட்-19 இன் ஓமிக்ரான் மாறுபாட்டின் துணை மாறுபாடு ஆகும், இது XBB மாறுபாட்டிலிருந்து, விகாரமாக மாறியுள்ளது. பைரோலா மாறுபாட்டின் மிகப்பெரிய ஆபத்து, இதற்கு முன்பு கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களையும், கோவிட்-19 க்கு எதிராக உடலில் எதிர்ப்பு சக்தி உருவாகி (Herd immunity) பாதுகாப்பாக இருப்பவர்களையும் பாதிக்கும்.
பைரோலாவின் 5 அறிகுறிகள்
கோவிட்-19 இன் புதிய மாறுபாடு பைரோலா பாதித்தால், தும்மல், தொண்டை வலி, தலைவலி, மூக்கு ஒழுகுதல் ஏற்படும். உடலில் லேசான அல்லது கடுமையான சோர்வு ஏற்படலாம். இது தவிர, பைரோலா வைரஸ் பாதிக்கப்பட்ட நபருக்கு வயிறு தொடர்பான பிரச்சினைகள், தோல் தொடர்பான பிரச்சினைகளும், காய்ச்சலும் ஏற்படலாம்.
கொரோனா பாதிப்பு எண்ணிக்கை
உலகம் முழுவதும் 69.6 கோடி பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று வேர்ல்டோமீட்டர் அறிக்கை வெளியிட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களில், 66.8 கோடி பேர் தொற்றுநோயில் இருந்து மீண்டுவிட்டனர். ஆனல், கொரோனாவுக்கு இதுவரை 69.2 லட்சம் பேர் பலியாகிவிட்டன. தற்போது 21.08 லட்சம் பேர் கொரோனாவுக்கு எதிராக போராடி வருகின்றனர்.
மேலும் படிக்க | Disease X நோய் தொடர்பாக மீண்டும் எச்சரிக்கைகள் எழுவது ஏன்? கொரோனா மீண்டு எழுகிறதா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ