DASH: டாஷ் டயட்ல இந்த உணவெல்லாம் இருக்கா? ஆரோக்கியத்தை மேம்படுத்தும் அற்புத உணவுகள்

Dash Diet For Hypertension: உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த DASH உணவு எவ்வாறு உதவுகிறது? எதைச் சாப்பிட வேண்டும், எதைச் சாப்பிடக்கூடாது என்று தெரிந்து கொள்ளுங்கள் 

Written by - Malathi Tamilselvan | Last Updated : Nov 27, 2023, 06:19 AM IST
  • உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும் உணவுகள்
  • ஆரோக்கியத்தை மேம்படுத்தும் அற்புத உணவுகள்
  • வாழ்க்கையை வளமாக்கும் உணவுகள்
DASH: டாஷ் டயட்ல இந்த உணவெல்லாம் இருக்கா? ஆரோக்கியத்தை மேம்படுத்தும் அற்புத உணவுகள் title=

உயர் இரத்த அழுத்தம் என்பது உடலுக்குள் இருக்கும் அமைதியான கொலைகாரன் என்று சொல்வது உண்டு. இதுவொரு பொதுவான சுகாதார நிலை, ரத்த அழுத்தம் அதிகரிக்கும்போது இரத்த நாளங்கள் விறைப்பு அடைகின்றன, இதனால் இந்த தமனிகளில் அழுத்தம் அதிகரிக்கிறது. இந்த பிரச்சனை ஏற்படும்போது ஆரம்ப நிலையிலேயே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம். இரத்த அழுத்தம் அதிகமாக இருக்கும் போது, ​​இதய நோய், பக்கவாதம், சிறுநீரக நோய் மற்றும் பிற உடல்நலப் பிரச்சனைகளின் ஆபத்து அதிகரிக்கிறது. உயர் இரத்த அழுத்தம் ஏற்படும்போது அதற்கான அறிகுறிகள் அனைவருக்கும் தெரிவதில்லை.  

உயர் இரத்த அழுத்தம் (HBP) 
தமனிகளில் இரத்த அழுத்தம் சாதாரண வரம்புகளை விட (120/80 mmH) அதிகமாக இருக்கும் ஒரு மருத்துவ நிலை.  இருப்பினும், வயது மற்றும் பிற காரணிகளைப் பொறுத்து இரத்த அழுத்தத்தில் ஏற்ற இறாக்கங்கள் இருக்கலாம்.  

உலக சுகாதார அமைப்பின் (WHO) கூற்றுப்படி, இந்தியாவில் உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களில் சுமார் 12 சதவீதம் பேர் மட்டுமே தங்கள் இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். ஆனால், இரத்த அழுத்தம் மிகப்பெரிய ஆபத்தை கொண்டு வந்து சேர்க்கும். இதய நோயாளிகளுக்கு முக்கிய ஆபத்து காரணிகளில் ஒன்றான இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உணவே அடிப்படையாக பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க | நோய் தீர்க்கும் பிரிஞ்சி இலை! ஆனால், சிலருக்கு நோயை ஏற்படுத்தும்... ஹெல்த் அலர்ட் 

உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த DASH உணவு

இதயம் நம் உடலின் மைய சக்தியாகும், இது முழு உடலுக்கும் இரத்தத்தை வழங்கும் வேலையை தொடர்ந்து செய்துக் கொண்டிருக்கிறது. இருப்பினும், காலப்போக்கில் மற்றும் பல்வேறு காரணங்களால், இதய ஆரோக்கியம் பாதிக்கப்படலாம். இரத்த அழுத்தத்தில் ஏற்படும் மாறுபாடு இதயக் கோளாறுகளுக்கு முக்கியமான காரணமாகிறது. இதயம் இரத்தத்தை பம்ப் செய்ய கடினமாக உழைக்க்கும்போது குறிப்பிடத்தக்க சேதத்தை ஏற்படுத்தும். எனவே, இதய நோயைத் தடுக்க உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவது முக்கியம்.

கட்டுப்பாடற்ற இரத்த அழுத்தம் இதய நோய்க்கான முக்கிய ஆபத்து காரணிகளில் ஒன்றாக இருப்பதும், இந்தியாவில் ஏற்படும் மொத்த இறப்புகளில் மூன்றில் ஒரு பங்கிற்கு காரணம் ரத்த அழுத்தம் தான் என்பதும் குறிப்பிடத்தக்கது. வயது, மரபணு பிரச்சனைகள், உடல் பருமன், உடல் உழைப்பு இல்லாமை, உப்பு நிறைந்த உணவு, மது மற்றும் புகையிலையை அதிகமாக உட்கொள்வது போன்ற பல காரணங்களால் உயர் இரத்த அழுத்தம் ஏற்படலாம். வாழ்க்கை முறை மாற்றங்கள் நன்மை பயக்கும். DAS உணவுமுறை இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவும்.

மேலும் படிக்க | கர்ப்பிணிகள் கவனத்திற்கு... கருவை பாதிக்கும் ‘இந்த’ உணவுகளுக்கு நோ சொல்லுங்க!
 
DAS உணவுமுறை என்றால் என்ன?
DASH உணவுமுறை (Dietary Approaches to Stop Hypertension)) என்பது உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவும் வகையில் வடிவமைக்கப்பட்ட உணவு முறை ஆகும். இந்த உணவு பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள், குறைந்த கொழுப்புள்ள பால் பொருட்கள், மீன், பீன்ஸ் மற்றும் கொட்டைகள் ஆகியவற்றை கொண்ட இந்த உணவுமுறையில் நிறைவுற்ற கொழுப்பு, கொழுப்பு மற்றும் சோடியம் அளவு குறைந்த உணவுகள் பரிந்துரைக்கப்படுகின்றன.
குறைக்கிறது. 
DASH உணவின் நன்மைகள்
இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது
கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கும்
இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கும்
எடை இழக்க உதவுகிறது
இதய நோய், பக்கவாதம் மற்றும் பிற நாட்பட்ட நோய்களின் அபாயத்தைக் குறைக்கிறது

மேலும் படிக்க | இன்சுலினை சுரக்க செய்து... நீரிழிவுக்கு எதிரியாக இருக்கும் ‘சூப்பர்’ உணவுகள்!

DASH உணவில் என்ன சாப்பிட வேண்டும்?
DASH உணவுமுறை பின்பற்ற எளிதானது. உங்கள் வழக்கமான உணவில் சில சிறிய மாற்றங்களைச் செய்வதன் மூலம் தொடங்கலாம், அதாவது அதிக பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடுவது, குறைந்த கொழுப்புள்ள பால் பொருட்களைத் தேர்ந்தெடுப்பது மற்றும் நிறைவுற்ற கொழுப்பு மற்றும் சோடியம் உள்ள உணவுகளை உட்கொள்வதைக் குறைப்பது.

DASH டயட்

தினமும் குறைந்தது ஐந்து பழங்கள் மற்றும் காய்கறிகள் சாப்பிட வேண்டும்
பழுப்பு அரிசி மற்றும் குயினோவா போன்ற முழு தானியங்களைத் தேர்ந்தெடுக்கவும்.
கொழுப்பு நீக்கப்பட்ட பால் மற்றும் குறைந்த கொழுப்புள்ள தயிர் போன்ற குறைந்த கொழுப்புள்ள பால் பொருட்களை தேர்வு செய்யவும்.
மீன், பீன்ஸ் மற்றும் உலர் பழங்கள் சாப்பிடுங்கள்.
நிறைவுற்ற கொழுப்பு, டிரான்ஸ் கொழுப்பு மற்றும் கொலஸ்ட்ரால் உட்கொள்ளலைக் குறைக்கவும்.
உப்பு உட்கொள்ளலைக் கட்டுப்படுத்துங்கள்.
நிறைய தண்ணீர் குடிக்கவும்.

(பொறுப்புத் துறப்பு: எங்கள் கட்டுரை தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே. மேலும் விவரங்களுக்கு எப்போதும் நிபுணர் அல்லது உங்கள் மருத்துவரை அணுகவும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | ரொம்ப பிஸியா... உடற்பயிற்சி - டயட் இல்லாமலும் உடல் பருமனை குறைக்கலாம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News