கொளுத்தும் வெயிலில் ஹீட் ஸ்ட்ரோக் வராமல் பாதுகாக்க இதையெல்லாம் சாப்பிடுங்க

Home Remedies For Heat Strokes: வெள்ளரிக்காய், தர்பூசணி, முலாம்பழம், கரும்பு மற்றும் பல்வேறு நீர்ச்சத்து நிறைந்த பழங்கள் மற்றும் காய்கறிகளை உட்கொள்வது வெப்பத்தால் ஏற்படும் பக்கவாதத்தைத் தடுக்க உதவும்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Apr 16, 2024, 05:16 PM IST
  • இளநீரில் உள்ள சிறப்பு என்சைம் உடலை குளிர்ச்சியாக்கி, உடலில் உள்ள நச்சுகளை நீக்கும்.
  • இளநீர் குடிப்பது நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கின்றது.
  • மோர் அல்லது லஸ்ஸி குடிப்பது உடலை குளிர்ச்சியாகவும் புத்துணர்ச்சியுடனும் வைத்திருக்க உதவுகிறது.
கொளுத்தும் வெயிலில் ஹீட் ஸ்ட்ரோக் வராமல் பாதுகாக்க இதையெல்லாம் சாப்பிடுங்க title=

Home Remedies For Heat Strokes: கோடைக்காலம் தொடங்கிவிட்டது. பொதுவாக கோடையில்தான் பல விதமான நோய்கள் நம்மை தாக்குகின்றன. கோடைக்காலத்தில் நோய்வாய்ப்படும் மிகப்பெரிய அச்சம் உள்ளது. வெயிலில் சிறிது சிறிதாக வெப்பம் ஆரம்பிக்கும் போதே, நாம் நம்மை கவனித்துக்கொள்வதும் மிக அவசியம். குறிப்பாக கோடையில் பக்கவாதத்தால் பாதிக்கப்படும் அபாயம் அதிகமாக உள்ளது. 

வெயில் காலத்தில் அனல் பறக்கும் காற்றும், உஷ்ணமும், வியர்வையும் நம்மை பாடாய் படுத்துகின்றன. எனினும், அன்றாடப் பணிகளுக்காகவும், படிப்பு, தொழில், தனிப்பட்ட பணிகள் என பல்வேறு காரணங்களுக்காக நாம் வெளியில் செல்ல வேண்டி இருக்கிறது. இந்த சூழ்நிலையில், வெயிலால் நேரடியாக பாதிக்கப்படுவதால், நாம் நமது உணவில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டியது மிக அவசியமாகும். உஷ்ணத்தால் ஏற்படும் ஸ்ட்ரோக்கைத் தடுக்க, உடலைக் குளிர்ச்சியாக வைத்திருக்க உதவும் சில உணவுப் பொருட்கள் உள்ளன. உடலுக்கு குளிர்ச்சியை அளித்து உடல் ஆரோக்கியத்தை காக்கும் உணவுப் பொருட்கள் பற்றி இந்த பதிவில் காணலாம். 

பழங்கள் மற்றும் காய்கறிகள்

வெள்ளரிக்காய், தர்பூசணி, முலாம்பழம், கரும்பு மற்றும் பல்வேறு நீர்ச்சத்து நிறைந்த பழங்கள் மற்றும் காய்கறிகளை உட்கொள்வது வெப்பத்தால் ஏற்படும் பக்கவாதத்தைத் தடுக்க உதவும்.

மோர், லஸ்ஸி

மோர் (Buttermilk) அல்லது லஸ்ஸி குடிப்பது உடலை குளிர்ச்சியாகவும் புத்துணர்ச்சியுடனும் வைத்திருக்க உதவுகிறது. இவற்றால் உடலில் சோர்வு குறைவதுடன் உடல் சுறுசுறுப்பாகவும் இருக்கின்றது. 

இளநீர்

இளநீரில் உள்ள சிறப்பு என்சைம் உடலை குளிர்ச்சியாக்கி, உடலில் உள்ள நச்சுகளை நீக்கும். மேலும் இளநீர் குடிப்பது நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கின்றது.  

தண்ணீர்

கோடையில் வழக்கத்தை விட சற்று அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும். ஏனெனில், வெயில் காலத்தில் உடலில் நீரேற்றம் இருப்பது மிகவும் முக்கியம். இது உடலின் வெப்பநிலையை குறைக்க உதவுகிறது.

மேலும் படிக்க | ஓவர் எடையை உடனடியா குறைக்க கிராம்பை இப்படி சாப்பிடுங்க போதும்

வெள்ளரிக்காய்

உடலை குளிர்ச்சியாகவும், புத்துணர்ச்சியுடனும் வைத்திருக்க வெள்ளரி மிகவும் உதவியாக இருக்கின்றது. வெள்ளரிக்காயை சாலட்டாக சாப்பிடலாம் அல்லது அதை துருவி கலந்து தயிரில் சேர்த்து தயிர் பச்சடியாக உட்கொள்ளாலாம். 

தக்காளி சாறு

நாம் தினமும் சமையலில் பயன்படுத்தும் தக்காளியில் பல வித ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. தினமும் காலையில் தக்காளி சாறு (Tomato Juice) உட்கொள்வதால், நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்கலாம். இது உடல் எடையை குறைக்க உதவுவதோடு, உடலில் ஏற்படும் வீக்கத்தையும் குறைக்கும். 

இந்த உணவுகளை உட்கொள்வதன் மூலம், உங்கள் உடலை வெப்ப பக்கவாதத்திலிருந்து பாதுகாக்க முடியும். இது தவிர, உடலில் நீர்ச்சத்து போதுமான அளவு இருப்பதை உறுதி செய்ய வேண்டும். இது மட்டுமின்றி, வெயிலில் வெளியே செல்வதை முடிந்த வரை தடுப்பது வெப்பத்தினால் வரும் பக்கவாதத்தை தடுக்க உதவும். 

(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | எச்சரிக்கை! தர்பூசணியுடன் கூட்டணி சேராத ‘சில’ உணவுகள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News