Weight Loss: ஜிம் போகாமல் உடல் எடை குறையணுமா? இப்படி பண்ணி பாருங்க

Weight Loss Tips: உடல் எடையை குறைக்கும் அதே வேளையில் ஆரோக்கியத்துக்கும் தீங்கு விளைவிக்காத சில பழகங்களை பற்றி இந்த பதிவில் காணலாம். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Feb 7, 2023, 06:48 PM IST
  • தூக்கம் உடலுக்கு மிகவும் முக்கியமானது.
  • ஆனால் இன்றைய காலகட்டத்தில் தொலைபேசியில் நாம் மிகவும் பிஸியாக இருப்பதால் தூக்கம் கலைகிறது.
  • குறைந்த தூக்கம் உடல் பருமன் அபாயத்தை அதிகரிக்கிறது.
Weight Loss: ஜிம் போகாமல் உடல் எடை குறையணுமா? இப்படி பண்ணி பாருங்க title=

உடற்பயிற்சியின்றி உடல் எடையைக் குறைக்க வழி: நம்மில் பலர் உடல் எடை அதிகரிப்பால் அவதிப்படுகிறோம். உடல் எடையை குறைக்க பல வித முயற்சிகளை மேற்கொள்கிறோம். நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்கள் என்பது எவ்வளவு முக்கியமோ, எப்போது சாப்பிடுகிறீர்கள் என்பதும் அவ்வளவு முக்கியம்தான். நீண்ட நேரம் சாப்பிடாமல் இருந்து, பின்னர் ஒரு கப் சாலட் மட்டும் சாப்பிட்டால், அது உடல் ஆரோக்கியத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும். நீங்கள் உடல் எடையை குறைக்க உணவைத் தவிர்த்து சாலட் மட்டும் சாப்பிட்டால் அது உங்கள் உடலுக்குப் பயனளிக்காது. உடல் எடையை குறைக்கும் அதே வேளையில் ஆரோக்கியத்துக்கும் தீங்கு விளைவிக்காத சில பழக்கங்களை பற்றி இந்த பதிவில் காணலாம். 

நார்ச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்ளுங்கள்

நார்சத்து மிக்க உனவை அதிகமாக உட்கொள்வது நல்லது. இது உங்களுக்கு நீண்ட நேரம் நிறைவான உணர்வை கொடுக்கும். மேலும் இது உங்கள் குடல் ஆரோக்கியத்திற்கும் நல்லது. நார்ச்சத்து குடல் நுண்ணுயிரியை பராமரிக்க உதவுகிறது. இது உங்கள் உடலுக்கு சிறந்தது. நார்ச்சத்து நிறைந்த உணவுகள் எளிதில் கிடைக்கின்றன. எனவே அவற்றை வாங்குவதற்கு அதிக பணமும் செலவழிக்க வேண்டியதில்லை. 

பேக் செய்யப்பட்ட உணவு வேண்டாம் 

இது பலருக்கு எளிதான மற்றும் பிடித்தமான உணவாக இருந்தாலும், பதப்படுத்தப்பட்ட உணவை தவிர்ப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். டப்பாவில் அல்லது பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட உணவுகள் உங்கள் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். அவை புதியவை அல்ல, நீண்ட காலம் நீடிக்கும் வகையில் தயாரிக்கப்படுபவை. உடலுக்கு உணவளிக்க பல இயற்கை பொருட்கள் இருக்கும்போது, ​​​​உங்கள் உடலை இதுபோன்ற செயற்கை பொருட்கள் கொண்டு சீரழிக்க வேண்டாம்.

மேலும் படிக்க | கொலஸ்ட்ரால் ரகசியமாக தாக்கும்; இந்த 4 அறிகுறிகளை புறக்கணிக்காதீர்கள்

உணவுப்பழக்கத்தை மட்டும் மாற்றாமல், வாழ்க்கை முறையையும் மாற்றுங்கள்

உங்கள் வாழ்க்கை முறை ஒரே மாதிரியாக இருந்தால், ஒரு புதிய டயட்டை கடைப்பிடித்தாலும், அது உடல் எடையை குறைக்க உதவாது. ஆரோக்கியமான முறையில் உடல் எடையை குறைக்க, உங்கள் தினசரி வழக்கத்தில் உடற்பயிற்சியை சேர்க்க வேண்டும். புகைபிடித்தல், மது அருந்துதல் போன்ற பழக்கங்களில் இருந்தும் உடலை விலக்கி வைக்க வேண்டும்.

குறைந்தது 7 மணிநேரம் தூங்குங்கள்

தூக்கம் உடலுக்கு மிகவும் முக்கியமானது. ஆனால் இன்றைய காலகட்டத்தில் தொலைபேசியில் நாம் மிகவும் பிஸியாக இருப்பதால் தூக்கம் கலைகிறது. குறைந்த தூக்கம் உடல் பருமன் அபாயத்தை அதிகரிக்கிறது என்று சுகாதார நிபுணர்கள் கூறுகிறார்கள். ஒருவர் ஒரு நாளைக்கு குறைந்தது 7 மணிநேரம் தூங்க வேண்டும். நல்ல உறக்கத்தைப் பெற்றால், மனமும் ஓய்வெடுக்கிறது. அதே போல் உடலும் பல வழிகளில் நன்மைகளைப் பெறுகிறது.

உடற்பயிற்சிகளில் உங்கள் உடலை ஈடுபடுத்துங்கள்

ஆரோக்கியமாக இருக்க ஜிம்மிற்குதான் செல்ல வேண்டும் என்ற அவசியமில்லை. வாக்கிங், ஜாகிங் மற்றும் ரன்னிங் போன்ற குறைந்த தாக்கத்தை ஏற்படுத்தும் உடற்பயிற்சியை செய்வது படிப்படியாக உடல் எடையை குறைக்க உதவும். ஜிம்முக்கு சென்றால்தான் உடல் பருமனை குறைக்க முடியும் என்ற அவசியமில்லை, நாள் முழுவதும் சில உடற்பயிற்சிகள் செய்வதன் மூலம் உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ளலாம்.

மேலும் படிக்க | உச்சந்தலையில ஷாம்பு போட்டு இப்படிதான் தேய்க்கணும், முடி பளபளக்கும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News