எடை இழப்பு குறிப்புகள்: உடல் எடையை குறைப்பதும் அது அதிகரிக்காமல் தடுப்பதும் மிக கடினம். சிலர் தங்கள் எடையைக் கட்டுக்குள் வைத்திருக்க பல்வேறு வகையான உணவு மற்றும் உடற்பயிற்சிகளை நாடுகிறார்கள். சில உணவுத் திட்டங்கள் விரைவான எடை இழப்புக்கு வழிவகுக்கும், ஆனால் எடையை அப்படியே பராமரிப்பது கடினம். அந்த சூழ்நிலையில் நம் உடலை குறைத்து அதை அப்படியே வைத்திருகக் என்ன செய்வது? இதை பற்றி இந்த பதிவில் விரிவாக காணலாம்.
நிலையான எடை இழப்பு
நிலையான எடை இழப்பு என்பது ஆரோக்கியமான மற்றும் நிலையான வழியில் உடல் எடையை குறைப்பதற்கான ஒரு நீண்ட கால அணுகுமுறையாகும். இது படிப்படியாக வாழ்க்கை முறை மாற்றங்களைச் செய்வதை உள்ளடக்கியது. இதன் பலன்கள் நீண்ட காலத்திற்கு இருக்கும். இதன் விளைவாக ஆரோக்கியமான மற்றும் நிலையான எடை கிடைக்கும்.
நிலையான எடை இழப்பு: இதை அடைவது எப்படி?
அதிக எடை அல்லது உடல் பருமன் ஒரு நபரின் உடல் எடையில் பரவலான ஏற்ற இறக்கங்களுக்கு வழிவகுக்கும் என பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இது பெரும்பாலும் ‘வெயிட் சைக்கிளிங்’ அல்லது ‘யோ-யோ’ உணவுக் கட்டுப்பாடு என்று குறிப்பிடப்படுகிறது.
இவற்றில் கவனம் செலுத்துங்கள்
பழங்கள், காய்கறிகள், மெலிந்த புரதங்கள், முழு தானியங்கள் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவை உட்கொள்ளுங்கள். அதிகப்படியான சர்க்கரை, ஆரோக்கியமற்ற கொழுப்புகள் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகளான நொறுக்குத் தீனிகள், துரித உணவுகள், சர்க்கரை பானங்கள் மற்றும் பதப்படுத்தப்பட்ட தின்பண்டங்கள் ஆகியவற்றைத் தவிர்க்கவும். பொதுவாகவே அதிகமாக சாப்பிடுவதை தவிர்க்க முயற்சி செய்யுங்கள். சிறிய தட்டுகளைப் பயன்படுத்தவும், உங்கள் உணவின் அளவை கணக்கிடுங்கள். உடலின் பசி மற்றும் முழுமைக்கான குறிப்புகளை அறிந்து கொள்ளுங்கள்.
அதிக தண்ணீர் குடிக்கவும்
உங்கள் உடலை ஹைட்ரேட் செய்யவும், உங்களை முழுதாக உணரச் செய்யவும் அதிகமாக தண்ணீர் குடிப்பது மிக அவசியமாகும். சர்க்கரை பானங்களைத் தவிர்க்கவும், இது எடை அதிகரிக்க வழிவகுக்கும்.
மேலும் படிக்க | சாப்பிட்டவுடன் செய்யக்கூடாத பழக்கவழக்கங்கள்... முதலில் இதுக்கு முற்றுப்புள்ளி வைங்க!
தொடர்ந்து உடற்பயிற்சி செய்யுங்கள்
உங்கள் தினசரி வழக்கத்தில் வழக்கமான உடல் செயல்பாடுகளை இணைக்கவும். வாரத்திற்கு குறைந்தபட்சம் 150 நிமிட மிதமான தீவிர உடற்பயிற்சி அல்லது 75 நிமிட தீவிர உடற்பயிற்சி செய்வதை இலக்காகக் கொள்ளுங்கள்.
போதுமான அளவு உறக்கம்
இரவில் 7-9 மணிநேர தூக்கத்தை இலக்காகக் கொள்ளுங்கள். தூக்கமின்மை உங்கள் வளர்சிதை மாற்றத்தைத் தடுக்கிறது. மேலும் உடல் எடையை குறைப்பதை கடினமாக்குகிறது. தியானம், யோகா அல்லது ஆழ்ந்த சுவாசப் பயிற்சிகள் போல, மன அழுத்தத்தை நிர்வகிக்க ஆரோக்கியமான வழிகளைக் கண்டறியவும். மன அழுத்தம் ஆரோக்கியமற்ற உடல் நிலை மற்றும் எடை அதிகரிப்புக்கு வழிவகுக்கும்.
எடை குறைந்த பின்னர் மீண்டும் அதிகரிக்காதா?
இந்த கேள்வி பலரிடம் உள்ளது. நாம் பல வித முயற்சிகள் எடுத்து உடல் எடையை குறைத்து விடுகிறோம். ஆனால், அந்த முயற்சிகளிலிருந்து லேசாக பின்வாங்கினாலும் மீண்டும் உடல் எடை அதிகரித்து விடுகிறது. உடல் எடை குறைந்த பின்னர் நாம் நமது உணவு உட்கொள்ளளில் கட்டுப்பாட்டை கடைபிடிக்காமல் இருப்பதே அதற்கு காரணம் என நிபுணர்கள் கூறுகிறார்கள். எடையை குறைத்த பின்னர் அதை பராமரிப்பது கடினமான விஷயம். பலரால் அதை செய்ய முடிவதில்லை. இந்த செயல்முறைக்கு 3 வாரங்கள் முதல் 2 மாதங்கள் வரை ஆகலாம் என மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
மெதுவாகவும், சீராக உடல் எடையை குறைப்பதுதான் நீண்ட காலத்திற்கு அதை பராமரிக்க சரியான வழி என்கிறார்கள் சுகாதார நிபுணர்கள். முக்கியமான விஷயம் என்னவென்றால், ஒரு வருட காலத்திற்கு 5 முதல் 10% எடை இழப்பு என்பதை இலக்காகக் கொள்ளலாம். எனவே, 70 கிலோ எடை இருந்தால், ஒரு வருடத்தில் 3.5 கிலோ முதல் 7 கிலோ வரை மட்டுமே குறைக்க முயற்சிக்க வேண்டும். இதன் மூலம் உடல் எடையை எளிதாகவும் குறைக்கலாம். இதில் உங்களுக்கு அதிக தொந்தரவுகளோ, உடல் உபாதைகளோ ஏற்படாது.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக நிபுணர்களின் ஆலோசனையைப் பெறவும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | புரதச்சத்து உடலுக்கு மிகவும் அவசியம் ஆனால் அளவுக்கு மிஞ்சினால்? என்ன ஆபத்து?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ