எடை இழப்புக்கு சாலட்: இன்றைய காலகட்டத்தில் உடல் எடையை குறைப்பது கடினமான மற்றும் சவாலான பணியாக மாறியுள்ளது. இதில், சரியான உடற்பயிற்சியுடன், நீங்கள் என்ன, எப்போது சாப்பிட வேண்டும் என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும். இதனுடன், தினமும் ஒரே மாதிரியான சலிப்பான உணவைச் சாப்பிடுவதற்குப் பதிலாக, நீங்கள் சுவாரஸ்யமாகவும் சுவையாகவும் இருக்கும் உணவுகளை சாப்பிட வேண்டும். நமது உணவில் சரியான அளவு நார்ச்சத்து மற்றும் புரதத்தை சேர்ப்பதால், நமது எடையை சரியாக வைத்திருக்க முடியும்.
சாலட்களில் இருந்து சரியான அளவு நார்ச்சத்து மற்றும் புரதத்தை எளிதில் பெற முடியும். ஆனால், சில சாலட்களில் கலோரிகள் நிறைந்துள்ளன. அவை எடையைக் குறைக்காது, மாறாக இவை எடையை அதிகரிக்க வாய்ப்புள்ளது. உடல் எடையைக் குறைக்கும் சில ஆரோக்கியமான மற்றும் சைவ சாலட்களைப் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
எடையை குறைக்கும் ஆரோக்கியமான மற்றும் சைவ சாலடுகள்
சாலட் நமது உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் என்பதை நாம் அனைவரும் அறிவோம். டயட்டில் இருப்பவர்கள் பெரும்பாலும் சாலட் சாப்பிடுவதற்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள். எடை இழப்புக்கு நன்மை பயக்கும் சில ஆரோக்கியமான மற்றும் சைவ சாலட்களைப் பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.
ஸ்ப்ரவுட் சாலட்:
காய்கறிகள் மற்றும் பருப்புகளால் செய்யப்பட்ட இந்த சாலட் மிகவும் ஆரோக்கியமானது. இந்த சாலட்டைத் தயாரிக்க, தக்காளி, கேரட் போன்ற உங்களுக்கு விருப்பமான காய்கறிகளை, பயறு ராஜ்மா, கொண்டைக்கடலை போன்ற முளைகட்டிய தானியங்களில் சேர்க்கவும். அதனுடன் ஆலிவ் எண்ணெய், உப்பு, சாட் மசாலா போன்றவற்றைச் சேர்த்து நன்றாகக் கலந்து சாப்பிடவும்.
மேலும் படிக்க | முருங்கைக்கு இத்தனை மவுசா, அனைத்து பாகங்களும் மருத்துவ குணம் கொண்டது
கொண்டைக்கடலை சாலட்:
கொண்டைக்கடலையில் புரதச்சத்து நிறைந்துள்ளது. இதனை சாப்பிட்டால் விரைவில் வயிறு நிறைவான உணர்வு ஏற்படும். இந்த சாலட்டை தயாரிக்க, ஒரு பாத்திரத்தில் சிறிது எண்ணெயை விட்டு சூடாக்கவும். அதில் கடுகை தாளித்து, கறிவேப்பிலை சேர்த்து அதில் ஒரு கப் வேகவைத்த கொண்டைக்கடலை போட்டு உப்பு, மிளகுப்பொடி, எலுமிச்சை சாறு சேர்த்து கலக்கவும்.
தர்பூசணி சாலட்:
உடல் எடையை குறைக்க நறுக்கிய தர்பூசணி துண்டுகள், கருப்பு ஆலிவ், புதினா இலைகள், வெங்காயம் ஆகியவற்றை ஒரு பெரிய கிண்ணத்தில் போடவும். ஆலிவ் எண்ணெய், கருப்பு மிளகு மற்றும் சிறிது உப்பு சேர்த்து கலந்து சாப்பிடவும்.
காய்கறி சாலட்:
நார்ச்சத்து நிறைந்த இந்த சாலட் எடையைக் குறைக்க உதவுகிறது. இதற்கு கேரட், வெங்காயம், கீரை போன்றவற்றை சிறிய துண்டுகளாக நறுக்கவும். ஒரு பாத்திரத்தில், பூண்டு பற்கள், வினிகர் மற்றும் ஆலிவ் எண்ணெயை நன்கு கலக்கவும். இப்போது அதை காய்கறிகளில் கலந்து, அதில் உப்பு, கருப்பு மிளகு போன்றவற்றைச் சேர்க்கவும். உடல் எடையை குறைப்பதற்கான உங்கள் சாலட் தயார்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | தூள் கிளப்பும் வெங்காயத்தோல்: இதில் இருக்கு சூப்பர் நன்மைகள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ