பிளாக் டீ குடித்தால் உடல் எடை குறையுமா? உண்மை என்ன?

பிளாக் டீயில் உள்ள மூலக்கூறுகள் நமது சிறு குடலில் நீண்ட நேரம் தங்கியிருந்து நல்ல பாக்டீரியாக்கள் மற்றும் நுண்ணுயிரிகளை உற்பத்தி செய்கிறது.   

Written by - RK Spark | Last Updated : Sep 13, 2022, 06:04 AM IST
  • பிளாக் டீயில் நிறைந்துள்ள ஆன்டி ஆக்சிடண்டுகள் உடலுக்கு பல நன்மைகளை தருகிறது.
  • உடற்பயிற்சி செய்வதற்கு முன்னர் ஒரு கப் பிளாக் டீ அருந்துவது சிறந்த பயன்களை தருகிறது.
  • மனஅழுத்தத்தை குறைக்கும் மாமருந்தாக பிளாக் டீ செயல்படுகிறது.
பிளாக் டீ குடித்தால் உடல் எடை குறையுமா? உண்மை என்ன? title=

தண்ணீருக்கு அடுத்தபடியாக மக்கள் அருந்துவது தேநீரை தான், அதிலும் குறிப்பாக இந்தியாவில் 80% மக்கள் தேநீரை தினசரி குடித்து வருகின்றனர்.  அதிலும் பிளாக் டீ குடிப்பது சுறுசுறுப்பை தருவதாக அமைந்திருக்கிறது, இதனை வெளிநாடுகளிலும் மக்கள் விரும்பி குடிக்கின்றனர்.  பிளாக் டீயில் பலவிதமான நன்மைகளும் உள்ளது.  அசாம், டார்ஜீலிங், கென்யா, நீலகிரி மற்றும் நேபால் போன்ற இடங்களில் தேநீர் மிகவும் பிரபலமான ஒன்றாகி இருந்து வருகிறது.  பிளாக் டீயில் நிறைந்துள்ள ஆன்டி ஆக்சிடண்டுகள் உடலுக்கு பல நன்மைகளை தருவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர், இது உடலில் வளர்சிதை மாற்றத்தை தூண்ட உதவுகிறது.  உடற்பயிற்சி செய்வதற்கு முன்னர் ஒரு கப் பிளாக் டீ அருந்துவது சிறந்த பயன்களை தருவதாக கூறப்படுகிறது, இதனை உங்களது தினசரி டயட்டில் சேர்த்து கொள்வதன் மூலம் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை பெறமுடியும்.  

பிளாக் டீ குடிப்பது உடல் எடை குறைப்பில் முக்கிய பங்காற்றுவதாக கூறப்படுகிறது, இதனை தினசரி குடிப்பதன் மூலம் செரிமான மண்டலம் நன்கு செயல்பட துவங்குகிறது.  பிளாக் டீயில் உள்ள மூலக்கூறுகள் நமது சிறு குடலில் நீண்ட நேரம் தங்கியிருந்து நல்ல பாக்டீரியாக்கள் மற்றும் நுண்ணுயிரிகளை உற்பத்தி செய்கிறது.  1 கப் பிளாக் டீயில் 47 மிலி கேஃபைன் உள்ளது, இந்த கேஃபைன் உடலுக்கு ஆற்றலை வழங்குவதோடு, வளர்ச்சிதை மாற்றத்தை தூண்டுகிறது.  இதன் காரணமாக உடலில் தேவையற்ற கொழுப்புகள் படிவது தடுக்கப்பட்டு உடல் எடை குறைகிறது.  தினமும் பிளாக் டீ அருந்துபவர்களில் டைப்-2 நீரிழிவு நோயுக்கான அபாயம் குறைவாக இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றது.  மேலும் இதிலுள்ள நன்மைபயக்கும் மூலக்கூறுகள் தோல் புற்றுநோய், மார்பக புற்றுநோய், கர்ப்பப்பை புற்றுநோய் மற்றும் வயிற்று புற்றுநோய் போன்ற பல்வேறு புற்றுநோய் அபாயத்தை தடுக்கிறது.

மேலும் படிக்க | கொலஸ்ட்ரால் அதிகரித்தால் ஏற்படும் கொழுப்புக் கட்டிகளுக்கும் கேன்சருக்கும் தொடர்பு?

இதயம் சம்மந்தமான ஆபத்துகள் ஏற்படுவதிலிருந்து பிளாக் டீ காப்பற்றுவதாக கூறப்படுகிறது, பிளாக் டீ அருந்துவதால் கொழுப்புகளின் அளவு கட்டுக்குள் இருந்து ரத்த ஓட்டம் சீராகி இதயம் ஆரோக்கியமாக செயல்படுகிறது.  மனஅழுத்தத்தை குறைக்கும் மாமருந்தாக பிளாக் டீ செயல்படுகிறது, பிளாக் டீ குடிப்பதால் மன அழுத்தம் நீங்கி ஒருவித புத்துணர்ச்சி கிடைப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கிறது.  மேலும் பிளாக் டீ குடிப்பதால் செரிமான மண்டலம் சிறப்பாக இயங்குகிறது, கெட்ட பாக்டீரியாக்களை அழிக்கிறது, எலும்புகள் வலுவாக்கப்படுகிறது மற்றும் வாயில் எவ்வித தொற்றும் ஏற்படாமல் இருப்பது போன்ற பல ஆரோக்கியமான விஷயங்கள் நடக்கிறது.

மேலும் படிக்க | நீரிழிவு நோயாளிகள் ஆரஞ்சு பழம் சாப்பிடலாமா? நிபுணர்கள் கூறுவது என்ன?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News