Warning Symptoms of High Cholesterol: கொலஸ்ட்ரால் அளவு அதிகரிப்பது நம் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. உயர் கொலஸ்ட்ரால் நம் சீரான உடல் ஆரோக்கியத்திற்கு எதிரியாக கருதப்படுகிறது. கொலஸ்ட்ரால் அளவு அதிகரிப்பது பல நோய்களுக்கு ஆணிவேராக பார்க்கப்படுகின்றது. இது உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு, மாரடைப்பு, கரோனரி தமனி நோய் மற்றும் ட்ரிபிள் வெசல் நோய்களின் அபாயத்தை உருவாக்குகிறது. இந்த நோய்களில் சில மரணத்திற்கும் வழிவகுக்கலாம். ஆகையால் எப்போதும் கொலஸ்ட்ரால் அளவை கட்டுக்குள் வைக்க வேண்டியது மிக அவசியமாகும்.
கொலஸ்ட்ரால் என்றாலே அது தீங்குதான் விளைவிக்கும் என்றுமில்லை. நம் உடலில் நல்ல கொலஸ்ட்ரால் கெட்ட கொலஸ்ட்ரால் என இரு வகையான கொலஸ்ட்ரால் உள்ளது. நல்ல கொலஸ்ட்ராலின் உதவியுடன் நமது உடலில் ஆரோக்கியமான செல்கள் உருவாகின்றன. அதேசமயம் கெட்ட கொழுப்பின் அளவு அதிகரித்தால் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம். கெட்ட கொலஸ்ட்ரால் அளவு அதிகரித்தால் பெரும்பாலும் அதற்கான அறிகுறிகள் பொதுவாக தெரியவில்லை. இது லிப்பிட் ப்ரொஃபைல் சோதனை மூலம் கண்டறியப்படுகிறது. இருப்பினும், நீங்கள் உடலின் சில பகுதிகளில் வலியை உணர ஆரம்பித்தால், நிச்சயமாக இரத்த பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும்.
கெட்ட கொலஸ்ட்ரால் எவ்வாறு தீங்கு விளைவிக்கும்?
இரத்தத்தில் கொழுப்பின் அளவு அதிகரிக்கும் போது, தமனிகளில் அடைப்பு ஏற்படுகிறது. அதன் காரணமாக இரத்தம் இதயத்தை அடைய கடினமாக உழைக்க வேண்டிய நிலை ஏற்படுகின்றது. இந்த சூழ்நிலையில், மாரடைப்பின் ஆபத்து அதிகரிக்கிறது. ஆகையால் கொலஸ்ட்ரால் அளவு அதிகரித்தால் அதை ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்துவது நல்லது.
கொலஸ்ட்ரால் அளவு அதிகரிப்பதால் தெரியும் அறிகுறிகள்
- 3 உறுப்புகளில் ஏற்படும் வலி கெட்ட கொலஸ்ட்ராலின் அறிகுறியாக கருதப்ப்படுகின்றது.
- இரத்தத்தில் கெட்ட கொழுப்பின் அளவு அதிகரிக்கும் போது, உங்கள் தொடைகள், இடுப்பு மற்றும் ஆட்டு தசைகளில் கடுமையான வலி தொடங்கும், இது பிடிப்பை ஏற்படுத்துகிறது.
- தமனிகளில் அடைப்பு ஏற்படுவதால், இதயத்திற்கு மட்டுமின்றி உடலின் மற்ற பகுதிகளுக்கும் இரத்தம் செல்வதில் சிரமம் ஏற்படுகின்றது.
- குறிப்பாக கால்களில், இரத்தம் சரியாக செல்லவில்லை என்றால், இதன் காரணமாக இந்த உறுப்புகளில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்படுகின்றது. இது வலிக்கு வழிவகுக்கிறது. இந்த பிரச்சனை பெரிஃபெரல் ஆர்டரி டிசீஸ் (Peripheral Artery Disease) என்று அழைக்கப்படுகிறது.
மேலும் படிக்க | ஆண்களின் வீரியத்தை அதிகரிக்கும் உணவுகள்! ‘இதை’ சாப்பிட்டால் இனி சுகம்தான்..
உடனடியாக இரத்த பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்
தொடைகள், இடுப்பு மற்றும் ஆட்டு தசைகளில் கடுமையான வலி காரணமாக, நடப்பது, சாதாரண உடல் செயல்பாடுகள் மற்றும் படிக்கட்டுகளில் ஏறுவதில் சிரமத்தை சந்திக்க நேரிடலாம். ஆகையால், இந்த இடங்களில் வலி ஏற்பட்டால், உடனடியாக கொலஸ்ட்ரால் அளவை சரிபார்க்க லிப்பிட் ப்ரொஃபைல் பரிசோதனையை (Lipd Profile Test) மேற்கொள்ள வேண்டும் .
கொலஸ்ட்ரால் அளவு அதிகரித்தால் பாதங்களில் இந்த ஆறிகுறிகள் தோன்றும்:
- பாதங்கள் மற்றும் உள்ளங்கால்களில் கடுமையான வலி
- கால்களின் உணர்வின்மை
- குளிர்ச்சியான கால்கள்
- கால் நகங்கள் மஞ்சள் நிறமாக மாறுதல்
- கால் விரல்கள் வீக்கம்
- கால்களில் பலவீனம்
- பாதங்களின் தோலின் நிறத்தில் மாற்றம்
இந்த அறிகுறிகள் தென்பட்டாலும் உடனடியாக மருத்துவரை அணுகி, அவர் கூறும் பரிசோதனைகளை செய்து தேவையான சிகிச்சையை எடுத்துக்கொள்வது நல்லது. கொலஸ்ட்ரால் அதிகரித்தால் நம் உடலில் தோன்றும் அறிகுறிகளை பற்றி நாம் நன்றாக தெரிந்துகொண்டால் பல ஆபத்தான நோய்களிலிருந்து நம்மை காத்துக்கொள்ளலாம்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ