நமது உடலில் உள்ள உறுப்புகளில் முக்கியமான உறுப்புகளில் ஒன்றாக கல்லீரல் உள்ளது, ஏறக்குறைய இது ஒரு கால்பந்தின் அளவு இருக்கும், இந்த உறுப்பு உங்கள் அடிவயிற்றின் மேல் வலது பகுதியில் மற்றும் உங்கள் விலா எலும்புக் கூண்டின் கீழ் பகுதியில் அமைத்திருக்கும். உடலில் உள்ள நச்சுப் பொருட்களை அகற்றுவதற்கும், செரிமானத்தை மேம்படுத்தவும் கல்லீரல் உதவுகிறது. கல்லீரல் சிரோசிஸ் நோயால் கல்லீரல் பாதிப்படைவதன் மூலம் உடலில் பல்வேறு விதமான பாதிப்புகள் ஏற்படுகிறது. கல்லீரல் நோயின் சிக்கல்கள் உங்கள் கல்லீரல் பிரச்சனைகளுக்கான காரணத்தைப் பொறுத்து மாறுபடும். இருப்பினும் உரிய நேரத்தில் கல்லீரல் நோய்க்கு சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் அது உயிருக்கு ஆபத்தாக மாறிவிடும்.
மேலும் படிக்க | Bottle Gourd Juice: சுரைக்காய் ஜூஸ் செய்வது எப்படி? அதன் நன்மைகள் என்ன?
கல்லீரல் பாதிப்பின் முக்கியமான அறிகுறியாக மஞ்சள் நிற கண்கள் மற்றும் மஞ்சள் நிற தோல் இருக்கிறது. இரத்த சிவப்பணுக்களை அழிப்பதன் மூலம் பிலிரூபின் என்ற கழிவுப்பொருளானது இரத்தத்தில் உருவாகி, கல்லீரலால் அதைச் செயல்படுத்த முடியாதபோது மஞ்சள் நிறத்தை உருவாக்குகிறது. கல்லீரல் செயல்பாடு மோசமடைவதால் உடலால் சரியாக செயல்பட முடியாமல் போகலாம். இதனால் உங்களுக்கு நாள்பட்ட சோர்வு, உடல் பலவீனம் போன்றவை ஏற்படலாம். குமட்டல் மற்றும் வாந்தியெடுத்தல் போன்றவை ஏற்படலாம், சில சமயங்களில் இதன் காரணமாக மலத்தில் இரத்தமும் கலந்து வெளியேறும் நிலை ஏற்படக்கூடும். கல்லீரலின் ஆரோக்கியம் மோசமான நிலையில் இருப்பதால் உடல் குறைவான இரத்த உறைவு புரதங்களை உற்பத்தி செய்கிறது, இதனால் உள் மற்றும் வெளிப்புறமாக ரத்தப்போக்கு ஏற்படுகிறது.
கல்லீரல் என்செபலோபதி அல்லது கல்லீரல் சிரோசிஸ் நோயால் பாதிக்கப்படும்போது மன நிலையில் மாற்றங்கள் ஏற்படும். மோசமான கல்லீரல் ஆரோக்கியம் மன அழுத்தம், பதட்டம், குழப்பம், திசைதிருப்பல் மற்றும் நினைவாற்றல் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்த காரணமாக இருக்கலாம். சுகாதார நிபுணர்களின் கூற்றுப்படி, கல்லீரல் சரியாக செயல்படாதபோது, உடலில் நச்சுகள் வடிக்கட்டப்படாமல் இரத்த ஓட்டத்தில் குவிந்து மனநலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும். கல்லீரல் சிரோசிஸ் நோயானது பல ஆண்டுகளாக மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி இருப்பது, ஹெபடைடிஸ் சி வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவது போன்றவற்றின் காரணமாக ஏற்படலாம் என்று தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க: விந்தணு குறையாமல் இருக்க தவிர்க்க வேண்டிய ‘சில’ உணவுகள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ