இரவு சாப்பிட்ட பிறகு நடைப்பயிற்சி செய்தால் உடல் எடை குறையுமா..?

Weight Loss Tips In Tamil: இரவு உணவு சாப்பிட்ட பிறகு நடைப்பயிற்சி மேற்காெள்வது உடல் எடையை குறைக்குமா..? இங்கே தெரிந்துகொள்வோம் வாங்க.

Written by - Yuvashree | Last Updated : Jul 18, 2023, 04:34 PM IST
  • சாப்பிட்டவுடன் நடைப்பயிற்சி செய்யலாமா..?
  • அப்படி செய்தால் உடல் எடை குறையுமா..?
  • சில ஹெல்த் டிப்ஸ் இதோ.
இரவு சாப்பிட்ட பிறகு நடைப்பயிற்சி செய்தால் உடல் எடை குறையுமா..?  title=

உடற்பயிற்சி என்பது நாம் அனுபவித்து செய்யக்கூடிய ஒன்றாக இருக்க வேண்டும். அதை நம்மை நாமே வலுக்கட்டாயப்படுத்தி கொண்டு செய்தால், கண்டிப்பாக நமக்கு அது பயணளிக்காமல் போய் விடும். இரவு உணவு சாப்பிட்டவுடன் நடைப்பயிற்சி மேர்கொள்வது மிகவும் எளிமையான உடற்பயிற்சிகளுள் ஒன்று. இதை அனைவருமே தினசரி செய்யலாம். ஆரம்பத்தில் பெரும் மாற்றங்களை இந்த உடற்பயிற்சி ஏற்படுத்தவில்லை என்றாலும், கொஞ்சம் கொஞ்சமாக இதனால் ஏற்படும் மாற்றங்களை நீங்களே உணருவீர்கள். 

நடப்பதால் கொழுப்பு குறையும்!

அரை கிலோ கொழுப்பை குறைக்க, நீங்கள் ஏறக்குறைய 3,500 கலோரிகளை குறைக்க வேண்டும். சுமார் 100 கலோரிகளை குறைக்க நீங்கள் கிட்டத்தட்ட 1.5 கிலோ மீட்டர் தூரம் வரை நடக்க வேண்டியிருக்கும். இதுவே, நீங்கள் வேகமாகவும் நீண்ட நேரமும் நடந்தால் இன்னும் அதிக கலோரிகளை கூட குறைக்கலாம். உடல் எடையை நீங்கள் குறைக்க விரும்பினால் கண்டிப்பாக இரவு உணவுக்கு பிறகு நடைப்பயிற்சி மேற்கொண்டு பழகுங்கள். 

மேலும் படிக்க | High BP பிரச்சனை உங்களை தொந்தரவு செய்கிறதா? அப்போ பச்சை மிளகாய் தான் தீர்வு

டின்னருக்கு பிறகு நடப்பதால் என்ன நடக்கும்..?

நம் ஊரில் உடற்பயிற்சி செய்வதற்கென்று தனித்தனியாக நேரம் காலம் ஒதுக்கி வைத்து செயல்படுகிறோம். இரவு உணவுக்கு பிறகு நடைப்பயிற்சி மேர்கொண்டால் வாய்வு தொல்லை ஏற்படும் என்றும் இதனால் உடலில் ஆங்காங்கே தசை பிடிப்பது போன்ற உணர்வு ஏற்படும் என்றும் ஒரு சிலர் கூறுவர். இன்னும் சிலர், இதனால் சரிமான கோளாறு உண்டாகலாம் என்றும் கூறுவர். ஆனால், இவையெல்லாம் உண்மை கிடையாது. இரவு உணவுக்கு பிறகு அதிக அளவிலான உடற்பயிற்சி செய்தால் மட்டுமே இவ்வாறான பிரச்சனைகள் ஏற்படும். சாப்பிட்ட பிறகு இரவில் 15-20 நிமிடங்கள் நடைப்பயிற்சி மேற்க்கொள்வதால் உடலுக்கு நன்மைதான் நடக்கும். 

எப்படி நடைப்பயிற்சி செய்யலாம்..?

நடைப்பயிற்சியினால் நீங்கள் உடல் எடையை குறைக்க விரும்பினால் அதை தினசரி செய்ய வேண்டும். நீங்கள் உடல் எடையை குறைக்க விரும்பினால், தினமும் சாப்பிட்ட பிறகு 10 நிமிடங்களுக்கு நடக்க வேண்டும். இதை கொஞ்சம் கொஞ்சமாக உயர்த்தி 30 நிமிடங்களாக மாற்றலாம். இதற்கான பலன், பொறுமையாகதான் வெளிப்படும். 

சாப்பிட்ட பிறகு மட்டுமன்றி, அவ்வப்போது வேலையில்லாமல் இருக்கும் போது கூட நீங்கள் நடந்து பழகலாம். இதனால், உங்கள் உடல் எடை நன்றாகவே குறையலாம் என்கின்றன்றனர் மருத்துவர்கள். 

நடைப்பயிற்சியை எப்படி என்ஜாய் செய்வது..?

தனியாக நடைப்பயிற்சி அல்லது உடற்பயிற்சி செய்ய கடுப்பாகத்தான் இருக்கும். இதைத்தவிர்க்க நடைப்பயிற்சி மேற்கொள்ள ஒரு பார்ட்னரை தேர்ந்தெடுங்கள். அவர் உங்களுடன் பொழுதை கழிக்க விரும்புபவராக இருந்தால் இன்னும் நல்லது. பேசிக்கொண்டே நடந்தால் அலுப்பு தெரியாது. 

உங்களுக்கென்று ஒரு இலக்கை நிர்ணயுங்கள்:

ஆரம்பத்தில் கொஞ்சம் கொஞ்சமாக உடல் எடையை குறைக்க வேண்டும் என கோல் வைத்து கொள்ளுங்கள். இதனால் உங்களுக்கே தெரியாமல் நீங்கள் அதற்கேற்றவாறு செயல்பட ஆரம்பிப்பீர்கள். “சிறு துளி பெருவெள்ளம்” என்பதை போல கொஞ்சம் கொஞ்சமாக குறைய தொடங்கும் உங்கள் உடல் எடை பின்னர் அதிகமாக குறைய தொடங்கும். 

டயட்டை கடைப்பிடியுங்கள்: 

ஒரு பக்கம் உடற்பயிற்சி இன்னொரு பக்கம் செம சாப்பாடு என்றிருந்தால் உங்கள் உடல் எடை கண்டிப்பாக குறையாது. அதனால், டயட்டையும் கண்டிப்பாக பார்த்துக்க்கொள்ளுங்கள். நொருக்கு தீனிகளுக்கு பதில் பழங்கள் மற்றும் காய்கறி சாலட்டுகளை சாப்பிடுங்கள். குளிர் பானங்களுக்கு பதிலாக ஸ்மூதிக்கள் மற்றும் ஃப்ரெஷ் ஜூஸ்களை பருகுங்கள். 

மேலும் படிக்க | கொழுப்பை எரிக்க உதவும் பொட்டாசியம் நிறைந்த ‘சில’ உணவுகள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News