Vitamin B12: வைட்டமின் பி12 உடலுக்கு தேவையான மிகவும் அவசியமான ஊட்டச்சத்தாக உள்ளது. இது உடலில் போதுமான அளவு இல்லாமல் குறைபாடு ஏற்பட்டால், அது பல கடுமையான நோய்களை ஏற்படுத்தக்கூடும். வைட்டமின் பி12 சிவப்பு ரத்த அணுக்கள் மற்றும் டிஎன்ஏ உருவாக்கத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. நரம்பு மண்டலத்தின் செயல்பாட்டிற்கும் இது மிக உதவியாக இருக்கின்றது.
வைட்டமின் பி12
உடலால் தானாக வைட்டமின் பி12 ஐ (Vitamin B12) உற்பத்தி செய்ய முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. ஆகையால் இந்த தேவையை பூர்த்தி செய்ய, கோபாலமின் நிறைந்த உணவுகளை தெர்ந்தெடுத்து உட்கொள்ள வேண்டும். ஒரு நபருக்கு தினமும் 2.4 மைக்ரோகிராம் வைட்டமின் பி12 தேவைப்படுகிறது. இதை உங்கள் தினசரி டயட்டின் மூலமே பெற்றுக்கொள்ளலாம். இதற்கு உணவில் செய்ய வெண்டிய மாற்றங்கள் பற்றி இங்கே காணலாம்.
சைவ உணவுகளை உட்கொள்பவர்கள் தங்கள் டயட்டில் இந்த உணவுகளை சேர்த்துக்கொள்ளலாம்.
செறிவூட்டப்பட்ட உணவுகளை உட்கொள்வது நல்லது
செறிவூட்டப்பட்ட உணவுகள் வைட்டமின் பி12 இன் சிறந்த மூலமாகும். நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் ஹெல்த் நடத்திய ஆய்வில், செறிவூட்டப்பட்ட உணவுகளை தொடர்ந்து உட்கொள்பவர்களுக்கு, அதை உட்கொள்ளாதவர்களை விட வைட்டமின் பி12 அளவுகள் சிறப்பாக இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. எனினும், செறிவூட்டப்பட்ட உணவுகளைத் தேர்ந்தெடுக்கும்போது, லேபிள்களை கவனமாகப் படிக்க வெண்டும். அந்த உணவுகளின் மூலம் வைட்டமின் பி 12 போதுமான அளவு கிடைக்கின்றதா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.
புளித்த உணவுகளை உட்கொள்ளலாம்
பனீர், தோசை மற்றும் இட்லி போன்ற புளிக்கவைக்கப்பட்ட உணவுகள் மூலமாகவும் உடலில் வைட்டமின் பி12 அளவை அதிகரிக்கலாம். ஏனெனில் இந்த உணவுகள் பாக்டீரியாவை உள்ளடக்கிய ஒரு செயல்முறை மூலம் தயாரிக்கப்படுகின்றன. அவற்றில் சில வைட்டமின் பி 12 ஐ உற்பத்தி செய்யக்கூடும்.
அசைவ உணவுகளை உட்கொள்பவர்கள் தங்கள் டயட்டில் இந்த உணவுகளை சேர்த்துக்கொள்ளலாம்.
விலங்குகள் சார்ந்த உணவுகள்
கோழி, மீன், முட்டை மற்றும் பால் பொருட்கள் போன்ற விலங்கு உணவுகளில் வைட்டமின் பி12 அதிகமாக உள்ளது. இந்த உணவுகளை தொடர்ந்து உட்கொள்வதால், உடலில் வைட்டமின் பி 12 இன் போதுமான அளவை எளிதாக பராமரிக்க முடியும் என அமெரிக்கன் ஜர்னல் ஆஃப் கிளினிக்கல் நியூட்ரிஷனில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | டெங்கு நோயாளிகளே... பிளேட்லெட் எண்ணிக்கை குறைந்தால் அபாயம்: அதிகரிக்க என்ன செய்வது?
உறுப்பு இறைச்சிகளை உட்கொள்ளலாம்
கல்லீரல் மற்றும் சிறுநீரகம் போன்ற உறுப்பு இறைச்சிகளில் வைட்டமின் பி12 அதிகமாக நிறைந்துள்ளது. வைட்டமின் பி12 குறைபாடு (Vitamin B12 Deficiency) அதன் உட்கொள்ளலை அதிகரிக்க குறிப்பாக உறுப்பு இறைச்சிகளை உட்கொள்வது ஒரு சிறந்த வழியாக இருக்கும் என ஜர்னல் ஆஃப் நியூட்ரிஷனில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சப்ளிமெண்ட்ஸ் உட்கொள்ளும்போது இவற்றில் கவனம் தேவை:
- வைட்டமின் பி 12 இன் குறைபாடு மிகவும் அதிகமாக இருந்தால், அதன் தீவிர அறிகுறிகளை உணவின் மூலம் மட்டும் தடுப்பது மிக கடினம்.
- இந்த பிரச்சனை முதியவர்கள், இளைஞர்கள் என அனைவருக்கும் ஏற்படுகின்றது.
- உணவின் மூலம் குறைபாட்டை சரிசெய்ய முடியாதபோது, வைட்டமின் பி 12 சப்ளிமெண்ட் எடுத்துக்கொள்ளலாம்.
- எனினும், மருத்துவர்களின் ஆலோசனை இல்லாமல் சப்ளிமெண்ட்ஸ் எடுக்கக் கூடாது என்பதை எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும்,
- ஏனெனில் அதிகப்படியான சப்ளிமெண்ட்களை எடுத்துக்கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கும் தீங்கு விளைவிக்கும்.
(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | கெட்ட கொலஸ்ட்ரால் இருந்தால் இந்த ஆபத்தான நோய்களும் கூடவே வரும்: ஜாக்கிரதை
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ