TasteAtlas: சுவையான காபிகள் பட்டியலில் இரண்டாவது இடம் தமிழ்நாட்டின் ஃபில்டர் காஃபிக்குத் தான்!

Highlights Of Filter Coffee : ஃபில்டர் காபியில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் உயிர்வேதியியல் கலவைகள் உள்ளன, இவை, 2 நீரிழிவு, பார்கின்சன் நோய் மற்றும் புற்றுநோய் போன்ற சில நோய்களின் அபாயத்தைக் குறைக்க உதவும்

Written by - Malathi Tamilselvan | Last Updated : Mar 17, 2024, 07:43 AM IST
  • ஃபில்டர் காபி தயாரிப்பது எப்படி?
  • தென்னிந்தியாவின் சுவைமிக்க ஃபில்டர் காபி
  • உலகின் இரண்டாவது சிறந்த காபி எது தெரியுமா?
TasteAtlas: சுவையான காபிகள் பட்டியலில் இரண்டாவது இடம் தமிழ்நாட்டின் ஃபில்டர் காஃபிக்குத் தான்! title=

காலையில் எழுந்ததும் பலர் கண் விழிப்பது காபியின் முகத்தில் தான் இருக்கும். அதிலும் தென்னிந்தியாவில் காலை நேரத்தை தொடங்க ஃபில்டர் காபி அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. தென் அமெரிக்கா, மத்திய அமெரிக்கா, ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆசியா ஆகியவை அவற்றின் தனித்துவமான காபி சுவைக்காக பிரபலமான சில நாடுகள் என்றால், தமிழ்நாடு உள்ளிட்ட தென்னிந்த மாநிலங்கள், ஃபில்டர் காபியின் சுவைக்காக பெருமை பெற்றவை.

அந்த பெருமைக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் விதமாக, 2023-24 ஆம் ஆண்டிற்கான மிகவும் பிரபலமான உணவுகள் குறித்த டேஸ்ட் அட்லஸ் வெளியிட்ட பட்டியலில் சிறந்த 38 காபி வகைகளில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது நமது ஃபில்டர் காபி.   

தென்னிந்தியாவின் இந்த பிரபலமான காபி தயாரிப்பு முறை மிகவும் சுலபமானது ஆனால், சுவையில் தனித்துவம் வாய்ந்தது. உலகில் காபி வகைகளில் சிறந்தவை என்ற பட்டியலில் மகுடம் சூட்டிய தென்னிந்தியாவின் காபியை எப்படி தயாரிப்பது என்று தெரிந்துக் கொள்வோம்.

ஃபில்டர் காபி தயாரிக்க தேவையான பொருட்கள்
 
2 ஸ்பூன் ஃபில்டர் காபி தூள்
1 ஸ்பூன் சர்க்கரை
தேவைக்கு ஏற்ப தண்ணீர்
3/4 கிளாஸ் பால்

மேலும் படிக்க | இளமையை தக்க வைக்க மஞ்சளை இப்படி பயன்படுத்தலாம்! முதுமையை தள்ளிப்போட சூப்பர் வழி!

காஃபித் தூள்: காபிக் கொட்டையை (coffee beans) வீட்டிலேயே வறுத்து அரைத்து பயன்படுத்துவது வழக்கமாக இருந்தது. ஏனென்றால், காபியை வறுத்து அரைத்த உடனே பயன்படுத்தினால் காபியின் சுவை அபாராமாக இருக்குமாம். ஆனால், தற்போது பலரால் வறுப்பது அரைப்பது என்பதைப் பற்றி யோசிக்கக்கூட முடியாது என்பதால், கடையில் விற்கும் ஃபில்டர் காஃபிப் பொடியை பயன்படுத்தலாம்.

காபி டிகாஷன் செய்யும் முறை 
காபி ஃபில்டர் எடுத்து, அதில் ஃபில்டர் காபி தூள் சேர்த்து கொள்ளவும். அதில் ஒரு சிட்டிகை சர்க்கரை சேர்க்கவும்.  தண்ணீரை கொதிக்க வைத்து ஃபில்டரில் உள்ள காஃபிப் பொடி நனையும் வரை ஊற்றவும். ஒரு சில நொடிகள் கழித்து ஃபில்டரில் மேலும் வெந்நீர் சேர்க்கவும்.  
டிகாஷன் முழுவதுமாக கீழே இறங்கும் வரை காத்திருக்கவும். டிகாசன் ரெடியானவுடன், சூடான பாலில் தேவையான அளவு டிகாஷன் சேர்த்து சர்க்கரை சேர்த்து காபியை ஆற்றவும். 

தென்னிந்தியாவின் சுவை மிக்க ஃபில்டர் காபியை தயாரிக்கும்போது நினைவில் கொள்ள வேண்டியவை.
காஃபித்தூள் புதிதாக இருக்கட்டும்
ஃபில்டரில் நீரை ஒரே சமயத்தில் ஊற்ற வேண்டாம்.
டிகாசனுடன் பால் சேர்த்த பிறகு, ஸ்பூனால் கலக்குவதை விட அதை ஆற்றிக் குடிக்கவும்.

இதை வலியுறுத்தும் விதமாகத் தான், ஃபில்டர் காபி என்றாலே, டபரா-டம்ளர் செட் நினைவுக்கு வருமல்லவா? காபியை ஆற்றிக் குடித்தால் தான் சுவை என்பதை உணர்த்தும் வகையில் ஃபில்டர் காபி என்றாலே டபரா மற்றும் கிளாஸ் புகைப்படம் தான் நினைவுக்கு வரும்.

சுவையான ஃபில்டர் காபி வாய்க்கு மட்டுமா சுவையைத் தருகிறது. இதிலுள்ள ஆரோக்கிய நன்மைகளைத் தெரிந்துக் கொள்வோம். 

ஃபில்டர் காபியில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் உயிர்வேதியியல் கலவைகள் உள்ளன, இவை, 2 நீரிழிவு, பார்கின்சன் நோய் மற்றும் புற்றுநோய் போன்ற சில நோய்களின் அபாயத்தைக் குறைக்க உதவும் என்றும், சிறந்த அறிவாற்றல் செயல்பாடு மற்றும் மனநிலை மேம்பாட்டுடன் தொடர்புடையது என்றும் கூறப்படுகிறது. 

காலையில் எழுந்தவுடன் காபி குடிப்பது அன்றைய நாளை சுறுசுறுப்பாகத் துவங்க உதவும் என்றாலும், அளவுக்கு அதிகமாக காபி குடிப்பது உடல்நலத்தை பாதிக்கும் என்பதை மறந்துவிட வேண்டாம். அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பது காபிக்கும் பொருந்தும் பழமொழி தான்.

மேலும் படிக்க | சத்துக்கள் நீக்கப்பட்ட மைதாவை அளவுக்கு அதிகம் சாப்பிட்டால் ஏற்படும் மோசமான விளைவுகள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News