COVID Vaccine: குழந்தைகளுக்கான தடுப்பூசி எப்போது? வெளியானது முக்கிய தகவல்

கொரோனா இரண்டாவது அலை கட்டுக்குள் வந்து கொண்டிருப்பது நிம்மதி அளிக்கும் விஷயம் என்றாலும், மூன்றாவது அலை  குறித்த அச்சம் இன்னும் உள்ளது. 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Jul 27, 2021, 05:07 PM IST
  • ஆகஸ்ட் இறுதிக்குள் ஒரு இடைக்கால அறிக்கை வெளியிடப்படும்.
  • தில்லி எய்ம்ஸில் 2-6 வயது குழந்தைகளுக்கு கோவாக்சின் பரிசோதனைகள் நடந்து வருகின்றன.
  • ஜைடஸ் காடிலாவும் குழந்தைகளுக்காக COVID எதிர்ப்பு தடுப்பூசிகளை பரிசோதித்து வருகிறது
COVID Vaccine: குழந்தைகளுக்கான தடுப்பூசி எப்போது? வெளியானது முக்கிய தகவல் title=

கொரோனா இரண்டாவது அலை கட்டுக்குள் வந்து கொண்டிருப்பது நிம்மதி அளிக்கும் விஷயம் என்றாலும், மூன்றாவது அலை  குறித்த அச்சம் இன்னும் உள்ளது. மேலும் அதில் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுவார்கள் என கூறப்படும் நிலையில், குழந்தைகளுக்கான தடுப்பூசி எப்போது கிடைக்கும் என்ற எதிர்ப்பார்ப்பு உள்ளது.

மேலும், மந்தை நோய் எதிர்ப்பு சக்தியை அடைய குழந்தைகள் மற்றும் பதின்ம வயதினருக்கு கொரோனா வைரஸ் தடுப்பூசிகள் போடுவது மிகவும் இன்றியமையானது ஆகும்.

இந்நிலையில் குழந்தைகளுக்கான தடுப்பூசி குறித்த முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் குழந்தைகளுக்கு கோவிட் தடுப்பூசி கிடைக்கலாம் என்று மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறுகிறார். பிரதமர் நரேந்திர மோடியிடம் (PM Narendra Modi)  ஜூலை 27 அன்று நடந்த கூட்டத்தில், சுகாதார அமைச்சர் மன்சுக் மண்டவியா, இது குறித்து தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

ALSO READ: COVID-19 Update: 66வது நாளாக குறைத்து வரும் கொரோனா.. இன்று 1,785 பேர் பாதிப்பு!

கடந்த வாரம், எய்ம்ஸ் இயக்குனர் டாக்டர் ரன்தீப் குலேரியா 2021 செப்டம்பர் மாதத்திற்குள் குழந்தைகளுக்கு தடுப்பூசி கிடைக்கும் என்று கூறியிருந்தார். தனியார் சேனல் நடத்திய ஒரு நேர்காணலின் போது, ​​டாக்டர் குலேரியா, ஃபைசர் (Pfizer )மற்றும் ஜைடஸ் (Zydus) தடுப்பூசிகள் விரைவில் குழந்தைகளுக்கு கிடைக்க கூடும் என்று கூறினார்.

கொரோனா வைரஸ் தொற்றுநோயின் (Coronavirus)  மூன்றாவது அலைகளைக் கருத்தில் கொண்டு, குழந்தைகள் மீதான தடுப்பூசி சோதனைகள் நாட்டில் நடந்து வருகின்றன. கோவாக்சின் தவிர, குஜராத்தை தளமாகக் கொண்ட ஜைடஸ் காடிலாவும் (Zydus Cadila) குழந்தைகளுக்காக  COVID-19  எதிர்ப்பு தடுப்பூசிகளை பரிசோதித்து வருகிறது.

தற்போது, ​​தில்லி எய்ம்ஸில் 2-6 வயது குழந்தைகளுக்கு கோவாக்சின் செலுத்தப்பட்டு பரிசோதனைகள் நடந்து வருகின்றன. ஏற்கனவே, COVID-19 தடுப்பூசிகளின் இரண்டாவது டோஸ் 6 முதல் 12 வயது வரையிலான குழந்தைகளுக்கு டெல்லி எய்ம்ஸில் வழங்கப்பட்டுள்ளது.

குழந்தைகளுக்கான தடுப்பூசி சோதனைகள் அவர்களின் வயதின் அடிப்படையில் வெவ்வேறு பிரிவுகளாக பிரித்து, அதன் அடிப்படையில் நடத்தப்படுகின்றன. ஒவ்வொரு வயது பிரிவில் இருந்தும் 175 பங்கேற்பாளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு பங்கேற்பாளருக்கும் இரண்டாவது டோஸ் செலுத்தப்பட்டவுடன், ஆகஸ்ட் இறுதிக்குள் ஒரு இடைக்கால அறிக்கை வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த இடைக்கால சோதனை அறிக்கையின் அடிப்படையில், தடுப்பூசி குழந்தைகளுக்கு பாதுகாப்பானதாக இருக்குமா என்பதன் அடிப்படையில்,  முடிவு எடுக்கப்படும்.

ALSO READ: District Wise Data: இன்று மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு நிலவரங்கள்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News