வெரிகோஸ் நோய் என்பது மிகவும் சங்கடத்தை ஏற்படுத்தும் ஒரு நோய். தமிழில் இதை சுருள் நோய் என்று சொல்லலாம். காலில் உள்ள ரத்த குழாய்கள் வீங்கி புடைத்து சுருண்டு காணப்படும். இது ரத்த குழாய்கள் சம்பந்தமான பாதிப்பு.
வெரிகோஸ் பாதிப்பு வருவதற்கு பரம்பரையும் ஒரு காரணம். வயது, உடல் பருமன், நின்று கொண்டே வேலை செய்வது என பல காரணிகளால் வெரிகோஸ் நோய் ஏற்படுகிறது.
முழங்காலுக்கு கீழே காலின் பின்புறத்தில் உள்ள ரத்த குழாய்களில் முடிச்சு ஏற்படும். அதனால் ரத்தக் குழாய்களில் ரத்த ஓட்டம் தடைபடுகிறது. இவை ரத்த ஓட்டத்தை தடை படுத்துகிறது. அதனால் இதயத்திற்கு ரத்தத்தை எடுத்துச் செல்லும் சிரைகள் என்று அழைக்கப்படும் ரத்தக் குழாய்கள் புடைத்து, வீங்கும் போது ரத்த ஓட்டம் தடைபடும் வெரிகோஸ் நோய் பல பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
பாதங்களில் வீக்கம், அரிப்பு, தாங்க முடியாத வலி ஏற்படும். ரத்த ஓட்டம் பாதிக்கப்படுவது எல்லையை கடக்கும்போது அறுவை சிகிச்சை செய்யவேண்டிய நிலைமையும் ஏற்படும். இவ்வளவு சிக்கலான இந்த சுருள் நோய்க்கு ஒரு எளிய மருந்து இருக்கிறது. வீட்டு சமையலறையில் இருக்கும் பொருட்களே வெரிகோஸ் நோயில் இருந்து நிவாரணம் கொடுக்கும்.
ALSO READ | முதுகு வலியால் அவதிப்படுகிறீர்களா? விடுபட சுலபமான வழி இதுதான்
ஒரு தேக்கரண்டி மஞ்சள்தூள், ஒரு கைப்பிடி கருந்துளசி இலை, கற்றாழையின் பசை மற்றும் வசம்பு 4 துண்டு எடுத்துக் கொள்ள வேண்டும். வசம்பை நன்றாக இடித்து வைத்துக் கொள்ளவும். அத்துடன் ஒரு கைப்பிடி கருந்துளசி இலையை சேர்த்துக் கொள்ளவும்.
கற்றாழை பசை தண்ணீரை வெளிவிடும் என்பதால், தண்ணீர் சேர்க்காமல் இவை அனைத்தையும் மிக்ஸியில் போட்டு மைய அரைக்க வேண்டும். இந்த கலவையுடன் மஞ்சள் தூளை சேர்க்க வேண்டும்.
இந்த பசையை நரம்புகள் சுருண்டிருக்கும் இடங்களில் பூசவும். தொடர்ந்து ஒரு மாதம் வரை இந்த பசையை பூசி வநதால், வீக்கம் குறைய ஆரம்பிக்கும். வீக்கம் குறையத் தொடங்கினாலே, கைவைத்தியம் பயனளிக்கத் தொடங்கிவிட்டது என்று புரிந்துக் கொள்ளலாம். அதன்பிறகு வலியும், படிப்படியாக குறையும்.
READ ALSO | Brain Stroke எச்சரிக்கை தேவை: நோய்க்கான காரணம், அறிகுறிகள், தடுக்கும் முறைகள் இதோ
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR