இந்த புளிப்பு பழம் ஊட்டச்சத்துக்களின் களஞ்சியமாகும், தினமும் சாப்பிடுங்க

எல்லாப் பழங்களிலும் சத்துக்கள் நிறைந்திருந்தாலும், இலந்தை பழத்தில் என்னற்ற நன்மைகள் உள்ளது. இவை உண்பதற்கு சுவையாகவும், ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும். இது பல நோய்களை குணப்படுத்த உதவுகிறது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jan 22, 2023, 05:01 PM IST
  • இலந்தை பழம் நன்மைகள்.
  • மருத்துவ சத்து நிறைந்த இலந்தை பழம்.
  • ஞாபக திறனை அதிகரிக்கும் இலந்தை பழம்.
இந்த புளிப்பு பழம் ஊட்டச்சத்துக்களின் களஞ்சியமாகும், தினமும் சாப்பிடுங்க title=

இலந்தை என்பது மூவடுக்கிதழிகளைச் சேர்ந்த, முட்கள் உள்ள குறுமரம் ஆகும். இதன் பழங்கள் செம்பழுப்பு நிறத்தில் சற்று பெரிய கொட்டைகளை உடையதாகவும், இனிப்பும், புளிப்பும் கலந்தச் சுவை கொண்டதாயும், சிறு உருண்டைவடிவத்தில் இருக்கும். இம்மரத்தின் வேர், பட்டை மற்றும் கொழுந்து இலைகள் மருத்துவப் பொருட்களாகப் பயன்படுகிறது. இதில் இருவகையுண்டு. ஒன்று காட்டு இலந்தை. மற்றொன்று நாட்டு இலந்தை எனவும் அழைக்கப்டுகின்றன. சீமை இலந்தை நாட்டு இலந்தையின் ஒரு பிரிவாகும். இதன் மருத்துவப் பயன்கள் அனைத்தும் ஒன்றே ஆகும். இந்த பழத்தில் வைட்டமின் சி அதிகமாக உள்ளது. அதேபோல் மக்னீசியம், கால்சியம், இரும்பு, மாங்கனீசு, பாஸ்பரஸ், பொட்டாசியம், சோடியம் மற்றும் துத்தநாகம் ஆகியவையும் இலந்தைப்பழத்தில் நல்ல அளவில் காணப்படுகின்றன. மேலும் இதில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. அதன் பயன்பாடு பல நோய்களைக் குணப்படுத்துவதில் பயனுள்ளதாக இருக்கும். வாருங்கள் இப்போது நாம் இதன் நன்மைகள் என்னவென்று பார்போம்.

பிபியை கட்டுப்படுத்துகிறது
இலந்தைப்பழம் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது. இதில் உள்ள பொட்டாசியம் இரத்த அழுத்தம் அதிகரிப்பதை தடுக்கிறது. உயர் இரத்த அழுத்த பிரச்சனை உள்ளவர்கள், இலந்தைப்பழத்தை சாப்பிடுவது மிகவும் நன்மை பயக்கும்.

மேலும் படிக்க | HIV வேக்சின் தோல்வி: ஆய்வாளர்கள் பெரும் ஏமாற்றம் - அடுத்து என்ன?

செரிமான அமைப்புக்கு நன்மை பயக்கும்
இலந்தைப்பழம் செரிமானத்திற்கு பயனுள்ளதாக கருதப்படுகிறது. இதில் நார்ச்சத்து நிறைந்துள்ளது. இலந்தைப்பழம் சாப்பிடுவது வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது மற்றும் செரிமானம் தொடர்பான பிரச்சனைகளில் இருந்து விடுபடுகிறது.

சாருமத்திற்கு நன்மை பயக்கும்
இலந்தைப்பழத்தில் வைட்டமின் சி அதிகளவு உள்ளது. இது சருமத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். வைட்டமின் சி முகப்பரு மற்றும் கருவளையங்களை நீக்குகிறது. எனவே இலந்தைப்பழம் சாப்பிட்டால் முகம் பொலிவு பெறும்.

எலும்புகளை வலுவாக்கும்
இதில் கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் மெக்னீசியம் நிறைந்துள்ளது. இது எலும்புகளை வலுப்படுத்த வேலை செய்கிறது. இதில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் வலியைக் குறைக்கும்.

பொடுகு நீக்க உதவும்
இலந்தைப்பழம் சாப்பிடுவதால் பொடுகு பிரச்சனை நீங்கும். இதில் உள்ள வைட்டமின் சி, புரதங்கள், காரட்லைடுகள், வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் மற்றும் தாதுக்கள் முடிக்கு நன்மை பயக்கும். இதனால் தினமும் இலந்தைப்பழம் சாப்பிடுவதால் முடி வலுவடையும்.

(பொறுப்பு துறப்பு: எங்கள் கட்டுரை தகவலை வழங்குவதற்காக மட்டுமே. மேலும் விவரங்களுக்கு எப்போதும் நிபுணர் அல்லது உங்கள் மருத்துவரை அணுகவும்.)

மேலும் படிக்க | என்ன பண்ணிணாலும் சர்க்கரை குறையலையா... ‘இந்த’ மேஜிக் பொடியை ட்ரை பண்ணுங்க!

 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News