கர்ப்ப காலம் என்பது மகளிருக்கு மிகவும் முக்கியமான காலங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இந்த சமயத்தில் பெண்கள் அனைவரும் கவனமாக இருக்க வேண்டும் என மருத்துவர்கள் கூறுவர். கர்ப்ப காலத்தில் உடற்பயிற்சி செய்வது என்பது இன்றியமையாதது ஆகும். சுக பிரசவம் ஆவத்ற்கு, தாய்மார்கள் அவர்களின் உடலை வலிமை படுத்துவதற்கு என பல்வேறு காரணங்களுக்காக கர்ப்ப காலத்தில் உடற்பயிற்சி செய்வர். இருப்பினும், ஒரு சில ஆபத்தான உடற்பயிற்சிகளால் கர்ப்ப காலத்தில் தாய்மார்களுக்கும் அவர்களின் வயிற்றில் இருக்கும் குழந்தைக்கும் பாதிப்பு ஏற்படலாம். அப்படி, செய்யவே கூடாத உடற்பயிற்சிகள் என்னென்ன தெரியுமா?
ஹெவி வெயிட் லிஃப்டிங்:
கர்ப்ப காலத்தில் அதிக எடை கொண்ட வெயிட் லிப்டிங் செய்வது கர்ப்பிணிகளுக்கு ஆபத்தை உண்டாக்கலாம். அதிக எடை தூக்கி உடற்பயிற்சி செய்கையில், நம் அடிவயிற்றில் அழுத்தம் ஏற்படும். கர்ப்பிணிகள் இவ்வாறான உடற்பயிற்சியை செய்யும் போது, கருச்சிதைவு பாதிப்பு ஏற்படலாம். இப்படி கர்ப்ப காலத்தில் இந்த உடற்பயிற்சியை செய்தால், குறை பிரசவம் அல்லது கருக்கலையும் ஆபத்தும் ஏற்படலாம். எனவே கர்ப்பிணிகள் 10 கிலோவிற்கு அதிகமான பொருட்களை தூக்க வேண்டாம் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
அதிதீவிர ஏரோபிக் உடற்பயிற்சிகள்:
அதிதீவிர அரபிக் உடற்பயிற்சிகள் கருச்சிதவு அபாயத்தை ஏற்படுத்தலாம். ரன்னிங், குதிக்கும் பயிற்சிகள் மற்றும் அதிதீவிர கார்டியோ உடற்பயிற்சிகள் ஆகியவை இந்த தீவிர ஆரோபிக் உடற்பயிற்சிகளின் லிஸ்டில் அடங்கும். இது குறித்து நடத்தப்பட்ட ஒரு மருத்துவ ஆராய்ச்சியில், அதிதீவிர ஏரோபிக் உடற்பயிற்சி செய்யும் பெண்கள், Uterine Contraction எனப்படும் வயிற்று சுருக்குதல் பாதிக்கப்படுவதாக கூறப்பட்டிருக்கிறது. இந்த உடற்பயிற்சியை கர்ப்ப காலத்தில் முதல் மூன்று மாதத்தில் செய்வதால் கருச்சிதைவு அபாயம் ஏற்படலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர். இதை தவிர்க்க குறைந்த தீவிரம் காட்டும் உடற்பயிற்சிகளான நீச்சல் பயிற்சி, மிதமான யோகா பயிற்சி ஆகியவற்றை செய்யலாம்.
மேலும் படிக்க | கர்ப்பிணிகள் கவனத்திற்கு... கருவை பாதிக்கும் ‘இந்த’ உணவுகளுக்கு நோ சொல்லுங்க!
விளையாட்டு பயிற்சிகள்:
பாஸ்கெட் பால், கிரிக்கெட், பாக்சிங் போன்ற விளையாட்டு பயிற்சிகள் நேரடியாகவே வயிற்றில் அடிப்படை வழி வகுக்கலாம் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இது குறித்து வெளிநாட்டில் மகப்பேறு மருத்துவர்கள் நடத்திய ஆராய்ச்சியில், கர்ப்ப காலத்தில் பாதி மாதங்களை கடந்தவர்களுக்கும் இந்த விளையாட்டு பயிற்சியால் கருச்சிதைவு ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
அது தீவிர உடற்பயிற்சிகள்:
அதிதி உடற்பயிற்சிகள் எனும், HIIT உடற்பயிற்சிகளை கர்ப்ப காலத்தில் செய்ய வேண்டாம் என மருத்துவர்கள் கேட்டுக்கொள்கின்றனர். இந்த உடற்பயிற்சிகளை செய்யும்போது உடலில் ஏற்படும் அழுத்தம் காரணமாக கருச்சிதைவு உண்டாக்கலாம் என்று கூறப்படுகிறது. எனவே கர்ப்பம் தரித்திருக்கும் மிதமான உடற்பயிற்சி கலையே மேற்கொள்ளலாம் என பரிந்துரைக்கப்படுகிறது.
ஹாட் யோகா:
சூடான இடங்களில் உடற்பயிற்சி செய்வதை ஹாட் யோகா என்று கூறுவர். இது, கர்ப்பினிகள் மட்டுமன்றி அவர்களின் வயிற்றில் இருக்கும் குழந்தைகளுக்கும் கேடு விளைவிக்கும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். இது குறித்து பேசும் மருத்துவர்கள், இது போன்ற ஹாட் யோகா செய்வதால் குழந்தை தங்கும் பை வலுவிழக்கும் என்றும் இதனால், கருச்சிதைவு ஏற்பட அதிக வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.
பொறுப்புத் துறப்பு: எங்கள் கட்டுரை தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே. மேலும் விவரங்களுக்கு எப்போதும் நிபுணர் அல்லது உங்கள் மருத்துவரை அணுகவும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.
மேலும் படிக்க | கர்ப்பிணிகளே... ‘இந்த’ பழங்களில் இருந்து கொஞ்சம் விலகியே இருங்க..!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ