இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த கொய்யா இலைகளை எவ்வாறு பயன்படுத்துவது: ஏழைகளின் ஆப்பிள் என்று சொல்லும் அளவுக்கு ஆப்பிளில் இருப்பதைக் காட்டிலும் அதிக ஊட்டச்சத்து கொண்ட பழம் கொய்யா. பொதுவாக வட மாநில மக்கள் குளிக்காலத்தில் அதிகளவு கொய்யா பழம் சாப்பிடுவார்கள். ஆனால், இந்த சுவையான பழம் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துவதில் உதவும் என்பது உங்களுக்குத் தெரியுமா? உண்மையில், கணையம் உடலில் இன்சுலின் என்ற ஹார்மோனை உற்பத்தி செய்வதைக் குறைக்கும் போது அல்லது நிறுத்தினால், உடலில் இரத்த சர்க்கரையின் அளவு அதிகரிக்கத் தொடங்குகிறது. இதன் காரணமாக, அடிக்கடி தாகம், காயங்கள் தாமதமாக குணமடைதல், அடிக்கடி சிறுநீர் கழித்தல், பார்வை குறைதல் போன்ற பிரச்சனை தொடங்குகிறது.
சர்க்கரை நோயை ஒழிக்க இதுவரை பயனுள்ள சிகிச்சை எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை ஆனால் அதை கட்டுக்குள் வைத்திருக்க சில இயற்க்கை வீடு வைத்தியங்கள் இருக்கிறது. அதில் ஒன்று தான் கொய்யா இலை. இதன் பழம் மட்டுமல்ல அதன் இலைகளும் மருத்துவப் பயன் கொண்டது. நம்முடைய சித்த மருத்துவத்தில் கொய்யா இலையும் பல்வேறு மருத்துவ சிகிச்சைகளில் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது.
மேலும் படிக்க | கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? மஞ்சளை இப்படி பயன்படுத்தி பாருங்க
கொய்யா இலையில் பல வகையான வைட்டமின்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடண்ட்கள் உள்ளன. இவை இதய திசுக்கள் ஃப்ரீ ராடிக்கல் பாதிப்பு காரணமாக சிதைவுறுவதைத் தடுக்கின்றன. அதேபோல் தொடர்ந்து கொய்யா இலை நீரை அருந்தி வந்தால் ரத்தத்தில் கெட்ட கொழுப்பு அளவு குறைந்து, நல்ல கொழுப்பு அளவு அதிகரிக்கிறது. கொய்யா இலைகளை கஷாயம் செய்து குடிப்பதால், உங்கள் ஆரோக்கியத்திற்கு பல நன்மைகள் கிடைக்கும். சர்க்கரை அளவை திறமையாக கட்டுப்படுத்தும்.
கொய்யா இலைகள் (நீரிழிவுக்கான கொய்யா இலைகள்) மிகப்பெரிய மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளன. இரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவைக் கட்டுப்படுத்த உதவும் இதன் இலைகளின் சாற்றில் ஹைப்பர் கிளைசெமிக் எதிர்ப்பு பண்புகள் காணப்படுகின்றன. ஜப்பான், சீனா, கொரியா, தைவான் உள்ளிட்ட பல நாடுகளில் சர்க்கரை நோயை கட்டுப்படுத்த கொய்யா இலையில் தயாரிக்கப்படும் தேநீர் பயன்படுத்தப்படுவதற்கு இதுவே காரணம்.
கொய்யா இலையை தேநீர் குடிப்பதால் வேறு என்னென்ன நன்மைகள் கிடைக்கும்.
* இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த மிக சிறந்தது
* இதய நோய் அபாயத்தை குறைக்கும்
* உடல் எடையை குறைக்க உதவும்
* ஹீமோகுளோபினை அதிகரிக்க உதவும்
* வாய் புண்களுக்கு சிறந்த நிவாரணம்
* சருமத்திற்கு ஒரு வரப்பிரசாதம்
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொது அறிவை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | சிறுநீர் கழித்த பின் அதிக துர்நாற்றம் வீசுகிறதா? அலட்சியம் வேண்டாம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ