நெல்லிக்காய் அனைவராலும் விரும்பப்படும் ஒரு கனி. ஒரு ஆரஞ்சுப் பழத்தில் இருக்கும் வைட்டமின் 'சி'-யின் அளவைப்போல் இருபது மடங்கு வைட்டமின் சத்தைக் கொண்டது நெல்லிக்காய். கண்களுக்கு தெளிவை கொடுக்கிறது. தலைமுடி உதிராமல், வளர்ந்து, நரைமுடி தோன்றுவதை தவிர்க்கிறது. சகல வயதினருக்கும் பல வழிகளில் நிவாரணம் தரும் நெல்லிக்காய் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதுடன் மூளை வளர்ச்சிக்கும் உதவுகிறது. நெல்லிக்கனி உண்டால் நெடுநாள் வாழலாம் என்பது உண்மை.
நெல்லிக்காய் நம் உடலில் தோன்றும் நஞ்சுகளை வெளியேற்றி இளமையாக இருக்க வழி செய்கிறது. உடல் திசுக்களுக்கு புத்துணர்ச்சியளித்து உடல் செல்கள் நன்கு செயல்பட உதவி புரிகிறது. கொழுப்புச்சத்து உடலிற்குத் தேவையான ஒன்று. உடலிற்குத் தேவைப்படாத அதிகப்படியான கொழுப்புச்சத்து இரத்தக் குழாய்களில் படிய ஆரம்பிக்கும். இதுதான் மாரடைப்பு ஏற்பட காரணமாகி விடுகிறது.
நெல்லிக்காயில் இருக்கும் வைட்டமின் சி இரத்தக் குழாய்களில் படிந்திருக்கும் கொழுப்புச் சத்துக்களை சுலபமாக கரைத்து விடும். இதனால் மாரடைப்பைத் தவிர்க்கலாம். இத்தனை நன்மைகள் நிறைந்துள்ள நெல்லிக்காயை வெறும் வயிற்றில் உண்டால் கிடைக்கும் நன்மைகள் ஏராளம்.
மேலும் படிக்க | கல்லீரல் பிரச்சனை அண்டாமல் இருக்க... தினசரி டயட்டில் சேர்க்க வேண்டிய உணவுகள்!
செரிமானப் பிரச்சினை
மலச்சிக்கல் முதல் வீக்கம் வரை வயிறு சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளையும் நீக்கி செரிமானத்தை மேம்படுத்தும். நெல்லிக்காய் செரிமானத்திற்கு மிகவும் உதவும் சக்திகளை அளிக்கிறது. அதிகமான நார்ச்சத்து உள்ளடக்கம் காரணமாக குடல் இயக்கத்தை சீராக்க நெல்லிக்காய் உதவுகிறது.
நோய் எதிர்ப்பு சக்தி
பருவ கால நோய்களை அண்டாமல் தடுத்து, நோய் தொற்றில் இருந்து நம்மை காத்துக் கொள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
மேலும் படிக்க | 'ஸ்லோ பாய்சன்’ சர்க்கரையை உணவில் இருந்து குறைக்க சுலபமான வழிகள்
உடல் பருமன்
நெல்லிக்காய் சாறு, தூள் மற்றும் பழங்களை உட்கொள்வது மூலம் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும். இதனால் உங்கள் உடலில் கொழுப்பு எரியும் செயல்ப்பாடு ஊக்குவிக்கப்படுவதால் எடை இழப்பு மற்றும் உடல் பருமனை எதிர்த்து போராட இது உதவுகிறது.
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை பொதுவான தகவலுக்காக மட்டுமே. இது எந்த வகையிலும் எந்த மருந்துக்கும் அல்லது சிகிச்சைக்கும் மாற்றாக இருக்க முடியாது. மேலும் விவரங்களுக்கு எப்போதும் உங்கள் மருத்துவரை அணுகவும்.
மேலும் படிக்க | தொற்று நோய்களுக்கு நிவாரணம் கொடுக்கும் கிராம்பு! அற்புத மருத்துவ பலன்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ