நியூடெல்லி: கர்நாடக மாநிலம் ராய்ச்சூர் மாவட்டத்தைச் சேர்ந்த 5 வயது சிறுமிக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் தற்போது முதல் ஜிகா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், ஜிகா வைரஸ் நோய்த்தொற்றின் அறிகுறிகள் என்ன என்பதையும், நோய் பாதிக்காமல் இருப்பது எப்படி என்பதையும் தெரிந்துக் கொள்வோம்.
ஜிகா வைரஸ் என்றால் என்ன?
ஜிகா வைரஸ், ஏடிஸ் கொசுக்கள் மூலம் பரவுகிறது. இந்த கொசுக்கள் டெங்கு, சிக்குன்குனியா மற்றும் நகர்ப்புற மஞ்சள் காய்ச்சல் போன்றவற்றையும் பரப்பும். இரத்த பரிசோதனை அல்லது மற்ற உடல் திரவங்களை உள்ளடக்கிய சோதனைகள் மூலம் இந்த வைரஸ் பாதிப்பு கண்டறியப்படுகிறது. ஜிகா வைரஸுக்கு குறிப்பிட்ட சிகிச்சையோ தடுப்பூசியோ இல்லை என்பதால், கவனமாக இருக்க வேண்டும் என உலக சுகாதார அமைப்பு (WHO) அறிவுறுத்துகிறது.
ஜிகா வைரஸின் அறிகுறிகள் என்ன?
சொறி, காய்ச்சல், வெண்படல அழற்சி, தசை மற்றும் மூட்டு வலி, உடல்நலக்குறைவு மற்றும் தலைவலி ஆகியவை ஜிகா வைரஸ் பாதிப்பின் பொதுவான அறிகுறிகளாகும். இருப்பினும், ஜிகா வைரஸ் உள்ள அனைவருக்கும் இந்த மக்கள் அறிகுறிகள் ஏற்படுவதில்லை. அறிகுறிகள் ஏற்படுபவர்களுக்கு இது பொதுவாக 2 முதல் 7 நாட்களுக்கு நீடிக்கும்.
மேலும் படிக்க | Zika Virus: இந்தியாவில் காலடி எடுத்து வைத்த ஜிகா வைரஸ்! 5 வயது சிறுமிக்கு பாதிப்பு
ஜிகா வைரஸின் அறிகுறிகள்
கொசுக்களால் (Mosquito) பரவுவதாக சொல்லப்படும் ஜிகா வைரஸ் பாதிப்பு அறிகுறிகளில், லேசான காய்ச்சல், சொறி, வெண்படலம், தசை மற்றும் மூட்டு வலி, உடல்நலக்குறைவு அல்லது தலைவலி ஆகியவை முக்கியமானவை
ஜிகா வைரஸ் 3–14 நாட்கள் வரை மனித உடலில் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
ஜிகா வைரஸ் நோய்க்கான அறிகுறிகள் பொதுவாக இரண்டு முதல் ஏழு நாட்கள் வரை நீடிக்கும்.
ஜிகா வைரஸ் தொற்று உள்ள அனைவருக்குமே அறிகுறிகள் தென்படுவது இல்லை என்று உலக சுகாதார அமைப்பு அனுமானித்துள்ளது
மேலும் படிக்க | Zombie Virus: 48500 ஆண்டு பழைய வைரஸ்களுக்கு மீண்டும் உயிர் கொடுக்கும் விஞ்ஞானிகள்
ஜிகா வைரஸ் பாதிக்கப்பட்டால் அதற்கான சிகிச்சை என்ன?
ஜிகா வைரஸ் தொற்றுக்கு இதுவரை எந்த குறிப்பிட்ட மருந்தோ தடுப்பூசியோ கண்டுபிடிக்கப்படவில்லை என்பது கவலை தரும் விஷயம் என மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். ஜிகா வைரஸ் நோய் அறிகுறிகளுக்கு சிகிச்சையளிப்பது நல்ல பலன்களைத் தரலாம். ஜிகா வைரஸ் அறிகுறி இருந்தாலும், பாதிப்பு இருந்தாலும், ஓய்வு எடுப்பது அவசியம். முடிந்த அளவு வீட்டிலேயே இருப்பது நல்லது.
உடலில் நீரிழப்பு ஏற்படுவதைத் தடுக்க திரவ வடிவிலான உணவுகளை எடுத்துக் கொள்வதும், பானங்களை குடிப்பதும் நல்லது. காய்ச்சல் மற்றும் வலியைக் குறைக்க தேவையான மருந்து எடுத்துக் கொள்ளவும். நோய் அறிகுறிகளால் பாதிக்கப்பட்டவருக்கு டெங்கு காய்ச்சல் இல்லை என்பது உறுதிபடுத்தப்படும் வரை, ஆஸ்பிரின் மற்றும் பிற ஸ்டிராய்டு அல்லாத அழற்சி எதிர்ப்பு மருந்துகளை (NSAIDS) எடுத்துக் கொள்ள வேண்டாம்.
மேலும் படிக்க | Virgin of Guadalupe: கத்தோலிக்கர்களின் புனித தளத்தில் குவிந்த கிறிஸ்தவர்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ