விஷயங்களை விரைவாக மறந்துவிடுவதாக உங்களை பலரும் திட்டுகிறார்களா? இல்லை குடும்பத்தில் உள்ளவர்களின் மறதியை குறித்து திட்டுபவரா நீங்கள்? அதிலும் வயதானவர்களின் மறதியால் பிரச்சனைகள் அதிகமாகும் என்பதால், நிம்மதியை தொலைக்கிறீர்களா? இல்லை பெற்றோருக்கு அல்சைமர் இருக்கலாம் என்ற சந்தேகம் மனதை வாட்டுகிறதா? இந்தக் கட்டுரை உங்களுக்கானது. மறதி எதனால் வருகிறது என்பதையும் அல்சைமர் மற்றும் டிமென்ஷியா பற்றிய தகவல்களையும் தெரிந்து கொள்ளுங்கள்.
நமது மூளை சரியாக செயல்பட தேவையான சிக்னல்களை மூளைக்குக் கொண்டு சேர்ப்பதற்கும், மூளை கொடுக்கும் கட்டளைகளை உடலின் அனைத்துப் பாகங்களுக்கும் அனுப்புவதற்கும் நமது உடலில் சில வேதிப் பொருள்கள் இருப்பது அவசியம். மறதி அதிகமாக உள்ளவர்களுக்கு இந்த வேதிப் பொருள்கள் உடலில் போதிய அளவு இல்லாததால், மூளையின் கட்டளை உடலுக்கு சென்று சேர்வதில்லை.
அல்சைமர் - டிமென்ஷியா இரண்டும் ஒன்றல்ல
டிமென்ஷியா என்பது அல்சைமர் உள்ளிட்ட பல நோய்களைக் குறிக்கும் சொல். பல்வேறு வகையான மறதி மற்றும் மூளை தொடர்பான நோய்களை டிமென்ஷியா என்ற சொல் குறிக்கிறது. டிமென்ஷியாவின் ஒரு வகை தான் அல்சைமர் நோய் ஆகும்.
அல்சைமர் நோய்
சிறிய விஷயங்களைக் கூட நினைவில் வைத்துக் கொள்வதில் சிரமம் இருப்பவர்கள் அனைவரும் அல்சைமரால் பாதிக்கப்பட்டவர்கள் அல்ல. மறதிக்கு பல காரணங்கள் இருக்கலாம். கவனக்குறைவு, பல்வேறு விஷயங்களை ஒரே நேரத்தில் மனதில் சிந்திப்பது, பணிச்சுமை என பல காரணங்கள் இருக்கலாம். ஏன், மறதிக்கு காரணம் மனநோயாகவும் இருக்கலாம்.
மேலும் படிக்க | ஆரோக்கியத்துக்கு ஆப்பு வைக்கும் ஆயத்த உணவுகள்! இதெல்லாம் ரெடிமேட் உணவுகளா?
ஆனால், அல்சைமர் நோயை பற்றி தெளிவாக தெரிந்துக் கொள்ளாமல், அந்த வார்த்தையை கேட்டே பயப்படுபவர்கள் தான் அதிகம் இருக்கின்றனர். இன்று, பிஸியான வாழ்க்கையில், நாம் அனைவரும் அலுவலக மன அழுத்தம் மற்றும் வேலை அழுத்தம் காரணமாக வெவ்வேறுவிதமான உடல்நலப் பிரச்சினைகளை எதிர்கொள்கிறோம். மறதியும் அதில் ஒன்று.
சிறிய அல்லது முக்கியமான விஷயங்களை அடிக்கடி மறந்துவிட்டால், அது அல்சைமர் அறிகுறியாக இருக்கலாம். எனவே, அல்சைமர் நோயின் ஆரம்ப அறிகுறிகளை அலட்சியப்படுத்தவேண்டாம். பெரும்பாலும் வயதானவர்களுக்கு ஏற்படும் அல்சைமர் பிரச்சனை, இளைஞர்களுக்கும் தற்போது ஏற்படுகிறது.
நரம்பியல் பிரச்சனை
அல்சைமர் நரம்பியல் கோளாறு. நமது மூளை செல்கள் சுருங்கத் தொடங்கும்போது விஷயங்களை மறக்க ஆரம்பிக்கிறோம். மூளையால் தன் வேலையைச் சரியாகச் செய்ய முடியாத நிலை, குறிப்பிட்ட வயதிற்குப் பிறகு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
அல்சைமர் நோயின்போது, மூளையின் ஒரு பகுதியான 'ஹிப்போகேம்பஸ்' எனப்படும் பகுதி பாதிக்கப்படுகிறது. வாழ்க்கையில் அன்றாடம் நடக்கக்கூடியவற்றை நினைவில் கொள்ளும் பகுதி ஆகும். நீண்ட காலத்துக்கு முன்பு நடந்தவை எதுவும் அல்சைமர் நோயாளிகளுக்கு மறப்பதில்லை.
அல்சைமர் நோயின் அறிகுறிகள்
சுலபமான வேலைகளை செய்வதில் சிரமம்
புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்வதில் சிக்கல்
பிரச்சனைகளை தீர்க்க தடுமாறுவது
முடிவெடுக்க முடியாமல் திணறுவது
பலவீனமான நினைவாற்றல்
பேசுவதில் சிரமம்
அடையாளம் காண்பதில் குழப்பம்
மேலும் படிக்க | Brain Health: ஆற்றல் மிக்க மூளைக்கு... ‘இந்த’ சத்துக்கள் ரொம்ப அவசியம்!
அல்சைமரில் இருந்து பாதுகாக்க வழிகள்
அல்சைமர் நோயைத் தடுக்க, மனதில் அமைதி இருப்பது அவசியம். அதேபோல மனதை இலகுவாக்கும் வேலைகளில் ஈடுபட வேண்டும். இசை மற்றும் பாடல்களைக் கேட்பது மூளைக்கு ஆசுவாசம் அளிக்கும். மூளை பழைய விஷயங்களை எளிதாக இணைக்க பாடலகளும் இசையும் முக்கியமானது.
உடற்பயிற்சியும் அல்சைமர் பிரச்சனையில் இருந்து உங்களை காப்பாற்றும். சுறுசுறுப்பாக எப்போதும் இயங்கிக் கொண்டிருந்தால் அல்சைமர் அபாயத்தைக் குறைக்கலாம்.
அல்சைமர் நோய் தொடர்ச்சியாகத் தீவிரமடையும் வகையைச் சேர்ந்தது. வயதானவர்களுக்கு இதன் பாதிப்பு படிப்படியாக அதிகரித்துக் கொண்டே செல்லும். உலக சுகாதார நிறுவனத்தின் கணக்கீட்டின்படி டிமென்ஷியா நோயாளிகளில் 70 சதவிகிதம் பேருக்கு அல்சைமர் பாதிப்பு உள்ளது.
அதிலும், ஆண்களைவிட பெண்கள் அதிக எண்ணிக்கையில் அல்சைமர் நோயால் பாதிக்கப்படுகின்றனர். அதற்கு காரணம், ஆண்களைவிட பெண்களுக்கு மன அழுத்தம், பணிச்சுமை ஆகியவை காரணமாக் இருக்கலாம். ஆனால், இது தொடர்பான ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ