பாலியல் சிக்கல்களுக்கு பொதுவாக இருக்கும் காரணம் மன அழுத்தம். நீங்கள் மன அழுத்ததால் பாதிக்கப்பட்டிருந்தால் நிச்சயம் உங்களின் பாலியல் வாழ்க்கை சிறப்பானதாக இருக்காது. இது கணவன் மனைவி இடையே பரஸ்பர மனரீதியான பிரிவை ஏற்படுத்தவும் வாய்ப்பு இருக்கிறது. பாலுணர்ச்சி குறைப்பாட்டை சந்திக்கும் ஆண்கள், மன அழுத்தத்துக்கு தீர்வு கண்டால் நிச்சயம் உங்களின் பாலியல் பிரச்சனைகள் முடிவுக்கு வரும். இதற்கு சுக்கு பால் உங்களுக்கு பெருமளவு உதவும்.
ஆயுர்வேத மருத்துவத்தில் சுக்குபாலில் இருக்கும் மகத்துவம் அடிகோடிட்டு சொல்லியிருக்கிறார்கள். பெரிய பிரச்சனை என நீங்கள் நினைத்துக் கொண்டிருந்த உங்களின் பாலியல் பிரச்சனைகளுக்கு சுக்கு பால் வழியாகவே தீர்வு காண முடியும் என நீங்கள் இப்போது அறியும்போது வியப்பு ஏற்படாமல் இருக்க வாய்ப்பில்லை. அந்தவகையில் சுக்கு பால் குடிப்பதால் ஆண்களுக்கு கிடைக்கும் பல்வேறு நன்மைகளை தெரிந்து கொள்வோம்.
சுக்கு என்றால் என்ன?
பெரும்பாலானோர் சுக்கு என்பது தனி மருத்துவ மூலிகை என்று எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை. காயவைத்த இஞ்சி தான் சுக்கு. சூடாக குடிக்கும்போது இது உடலின் வெப்பநிலையை அதிகரிக்கும். குளிர்ந்த நிலையில் எடுத்துக்கொள்ளும்போது குளிர்ச்சியை கொடுக்கும். பாலுடன் இதனை சேர்த்து குளிர்ந்த நிலையில் நீங்கள் இதனை சாப்பிடும்போது உங்களின் பாலியல் பிரச்சனைகள் எல்லாம் தீர்வை நோக்கி நகரும்.
மேலும் படிக்க | தொப்பை தொல்லை இனி இல்லை: இந்த மேஜிக் பானங்கள் குடித்தால் ஒரே வாரத்தில் குறைக்கலாம்
சுக்கு பாலை எப்போது குடிக்க வேண்டும்?
பாலியல் பிரச்சனைகளை சந்திக்கும் ஆண்களாக இருந்தால் தினமும் இரவு படுக்கும் முன் சூடு குறைவான சுக்கு பாலைக் குடிப்பது நல்லது. இப்படி குடிக்கும் போது ஆண்களின் பாலுணர்ச்சி தூண்டப்படும். அத்துடன் வாழ்க்கைத் துணையுடனான தாம்பத்திய உறவு எதிர்பார்த்தபடி சிறப்பாக இருக்கும்.
மலச்சிக்கல் இருக்காது
செரிமான பிரச்சனை இருப்பவர்களை சுக்கு பாலை ஒருவர் குடித்து வந்தால், அதற்கு நிவாரணம் கிடைக்கும். முக்கியமாக மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து விடுபடலாம். வாய்வு தொல்லையால் கடுமையான வயிற்று வலியை சந்திப்பவர்கள், நிவாரணம் கிடைக்கும்.
வாதம் நீங்கும்
கை, கால் மூட்டு வலியால் அவதிப்படுபவர்கள் சுக்கு பால் குடிக்கலாம். இது உடலில் உள்ள வாதத்தை நீக்கும். ஏனெனில் உடலில் வாதம் அதிகம் இருந்தால் தான் மூட்டு வலிகள் ஏற்படும். ஆகவே ஆர்த்ரிடிஸ், ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற பிரச்சனைகளை கொண்டவர்கள் சுக்கு பாலை குடித்தால், வலிக்கு நிவாரணம் கிடைக்கும்.
சுக்கு பால் தயாரிப்பது எப்படி?
- பாத்திரம் ஒன்றில் ஒரு டம்ளர் பாலை ஊற்றி குறைவான தீயில் வைத்து போதுமான நிமிடங்கள் கொதிக்க வைக்க வேண்டும்.
- பின் அதில் 1 டேபிள் ஸ்பூன் பனங்கற்கண்டு, 1/4 டீஸ்பூன் சுக்கு பொடி மற்றும் 1/4 டீஸ்பூன் மிளகுத் தூள் சேர்த்து 3 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டினால், சூடான சுவையான சுக்கு பால் ரெடி.
மேலும் படிக்க | எச்சரிக்கை! அளவிற்கு அதிக வைட்டமின் டி மாத்திரைகள் கிட்னி - மூளைக்கு விஷமாகும்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ