Exercises For Irregular Periods : மாதவிடாய் சுழற்சி, ஒரு சில பெண்களுக்கு சரியாக அமையாது. இதற்கு மருத்துவ ரீதியாக பல்வேறு காரணங்கள் உள்ளன. இதனை ஒழுங்குபடுத்துவது, மாதவிடாய் சரியான நேரத்திற்கு வராததை அனுபவிக்கும் பல பெண்களுக்கு இன்றியமையாததாக உள்ளது. ஒழுங்கற்றா மாதவிடாய், இதை அனுபவிக்கும் பெண்களின் அன்றாட வாழ்க்கையை சீர்குலைத்து அவர்களின் இனப்பெருக்க ஆரோக்கியத்தை பாதிக்கும். பொதுவாக மாதவிடாய் சுழற்சி காலம், 28 நாட்கள் என அறியப்படுகிறது. இருப்பினும், இது 21-38 நாட்கள் வரை கூட இருக்கலாம். 35 நாட்களுக்கு மேல் ஆகியும் மாதவிடாய் ஆகவில்லை என்றால், மருத்துவரை அணுகி உடலில் என்ன பிரச்சனை என தெரிந்து கொள்ளலாம். மாதவிடாய் ஒழுங்கற்றதாக இருப்பதற்கு, பல மருத்துவ காரணங்கள் இருக்கின்றன. இதற்கு தீர்வாக, மருத்துவ நிபுணர்கள் சில வீட்டு உடற்பயிற்சிகளை பரிந்துரைக்கின்றனர். அவை என்னென்ன தெரியுமா?
ஏரோபிக் உடற்பயிற்சிகள்:
ஓட்டப்பயிற்சி, உடற்பயிற்சி, நீச்சல் பயிற்சி, வேக நடைப்பயிற்சி போன்ற உடற்பயிற்சிகள், ஏரோபிக் பயிற்சிகளாக கருதப்படுகின்றன. இவை, மாதவிடாய் சுழற்சியை சீராக்கும் ஹார்மோன்கள் சுரக்க வைக்க உதவுமாம். இந்த உடற்பயிற்சிகள் மன அழுத்தத்தை குறைத்து, ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும் என கூறப்படுகிறது.
தினசரி யோகா பயிற்சி:
யோகா பயிற்சி, மாதவிடாய் வருவதற்கான சரியான பயிற்சியாக பார்க்கப்படுகிறது. மத்யாசனா, தனுராசனா, அதோ முக்கா ஸ்வனாசனா, மலானாசனா போன்ற யோகா பயிற்சிகள் இதற்கு உகந்தவையாக கருதப்படுகின்றன. இவை, இடுப்பு பகுதிக்கு அழுத்தம் கொடுக்கும் உடற்பயிற்சியாகவும் கருதப்படுகின்றன. இதனால் மாதவிடாய் கோளாறு சரியாகும் என்றும் கூறப்படுகிறது.
ஸ்ட்ரெந்த் வர்க்-அவுட்:
தசைகளுக்கு அழுத்தம் கொடுக்கும் ஜிம் அல்லது ஹெவி உடற்பயிற்சிகள், மாதவிடாய் வருவதற்கு உதவி புரிகின்றன. இவை, ஹார்மோன் சமநிலையின்மையை சீராக்குகிறது. சிலருக்கு பிசிஓஎஸ் பிரச்சனை காரணமாக மாதவிடாய் வராமல் இருக்கும். அந்த பிரச்சனையை சமாளிக்கவும் இந்த உடற்பயிற்சி உதவுகிறது.
மேலும் படிக்க | மாம்பழ ஜூஸில் மலை போல் இருக்கும் நன்மைகள்... சம்மரில் கண்டிப்பா குடிக்கணும்!
ஸ்குவாட்:
எளிமையான, அதே சமயத்தில் மிகவும் பயனுள்ள உடற்பயிற்சிகளுள், ஸ்குவாட் உடற்பயிற்சியும் ஒன்று. இந்த உடற்பயிற்சி, உங்களது உடலின் கீழ்பகுதியை வலிமைபடுத்த உதவும். இதை செய்வது மிகவும் சிம்பிள், நாற்காலி இல்லாமல், அதில் அமர்ந்து எழுந்திருப்பது போல செய்ய வேண்டும். இதை இன்னும் பயணுள்ளதாக மாற்றுவதற்கு, ஜம்பிங் ஸ்குவாட்ஸ் செய்யலாம். அதாவது, அமர்ந்து எழுந்து கொள்ளும் போது குதித்து எழுந்து கொள்ள வேண்டும்.
மூச்சுப்பயிற்சி:
மன அழுத்தமும் மாதவிடாய் சுழற்சியை மாற்றியமைக்க வாய்ப்புள்ளது. ஆழ்ந்த மூச்சுப்பயிற்சி செய்வது மன அழுத்தத்தை சமாளிக்க உதவும். மூச்சுப்பயிற்சி செய்வதால் மனம் தெளிவடைந்து உடலும் சாந்த நிலையை அடையும். மன அழுத்த நிலை குறைவதால் மாதவிடாய்க்கான ஹார்மோன்கள் சரியாக இயங்கி, மாதவிடாயும் சரியான நேரத்திற்கு ஏற்படும் என கூறப்படுகிறது.
ப்ளாங்க்:
பிளாங்க் உடற்பயிற்சி, உடலின் முக்கிய தசைகளை வலுப்படுத்த ஒரு சிறந்த பயிற்சியாக கருதப்படுகிறது. இது மாதவிடாய் சுழற்சியையும் சீராக்க உதவும். இந்த உடற்பயிற்சியை, ஒரு நாளைக்கு 30 முதல் 1 நிமிடம் வரை கூட செய்யலாம். ஆரம்பத்தில் இந்த சிறிது நேரம் செய்து, பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக இந்த நேரத்தை அதிகரிக்கலாம்.
(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | மலச்சிக்கல் பிரச்சினையை வேகமாக சரிசெய்ய உதவும் 5 பழங்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ